tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday, 30 September 2010

பாபர் மசூதி நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

சர்ச்சைக்குரிய இடம் மூன்றாகப் பகிர்வு

அயோத்தியில் சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய பகுதியை 3 ஆகப் பிரித்து, 2 பகுதிகளை இந்துக்களுக்கும், ஒரு பகுதியை முஸ்லீம்களுக்கும் அளித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதி - ராம் ஜன்ம பூமி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுதிர் அகர்வால், தரம் வீர் சர்மா, எஸ்.யு.கான் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு சற்று முன் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக சர்ச்சைக்குரியதாக இடத்தின் மீது யாருக்கு முழு உரிமை உள்ளது என்பது தொடர்பாக முஸ்லீம்களின் சுன்னி வக்ஃப் வாரியம், இந்துக்களின் நிர்மோகி அகாரா ஆகிய இரண்டு அமைப்புகளின் மனுக்களை நிராகரிப்பதாக தீர்ப்பளித்த நீதிபதிகள், சர்ச்சைக்குறிய நிலத்தை மூன்றாக பிரித்து, அதில் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவிற்கும், ஒரு பகுதி சுன்னி வக்்ப் வாரியத்திற்கும், பாபர் மசூதியின் நடுப்பகுதியே ராமர் பிறந்த இடம் என்று ஏற்றுக் கொண்டதாகவும் அப்பகுதி இந்துக்களுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதி சட்டப்படி தகராறுக்கு உட்பட்ட பகுதியாக ஆனபோதே அங்கு இராமர் சிலை இருந்ததாக கூறப்பட்டதை இரண்டு நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பை அளித்த மூன்று நீதிபதிகளும் அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை.

சர்ச்சைக்குரிய இடம் தங்களுடைய தீர்ப்பின் படி பிரித்தளிக்கப்படும் வரை அந்த இடத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மூன்று நீதிபதிகளும் தனித் தனியாக தீர்ப்பை வழங்கியுள்ளனர். தீர்ப்பின் முழு விவரம் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் என்று கூறப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்



பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடமே
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அந்த இடம் ராமருக்கு சொந்தமானது என்றும் பரபரப்பான தீர்ப்பளித்துள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சன்னி வஃக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்துள்ளது.

60 ஆண்டு காலம் நீடித்து வந்த புதிருக்கு விடையளிக்கும் விதமாக இன்று இத்தீர்ப்பை அளித்த அலகாபாத் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அது இந்துக்களிடையே அபரித முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அயோத்தியில் உள்ள 2.7 ஏக்கர் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு பாகம் நிர்மோஹி அகாராவுக்கும், இன்னொரு பாகம் இந்துக்களுக்கும், மூன்றாவது பாகம் இஸ்லாமிய வஃபு வாரியத்திற்கும் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே சமயம் ராமர் சிலை நிறுவப்பட்ட இடம் ராமர் கடவுள் பிறந்த இடம் என்றும், அது இந்துக்களிடம்தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் எஸ்.யு. கான், நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதிகள் டிவி ஷர்மா ஆகிய 3 பேருமே ஒருமனதாக தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

அதாவது அயோத்தியில் தற்போது இருக்கும் ராமர் சிலை அங்கிருந்து அகற்றப்படாது என்பதோடு, அங்கு இந்துக்கள் தாராளமாக ராமர் கோவிலை கட்டலாம் என்றே அர்த்தமாகும்.

இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பாபர் உத்தரவால் மசூதி கட்டப்பட்டது
FILE
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:

1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.

2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.

3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.

4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.

6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.

7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.

8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.

9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.

10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.

11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.

12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. 
தீர்ப்பு யாருக்கும் வெற்றி தோல்வியல்ல: ரஸ் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பஹவத், அதே சமயம் இந்த தீர்ப்பினால் யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ இல்லை என்று கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடித்து கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தீர்ப்பினால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு வழி பிறந்துள்ளது.இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றி தோல்வியல்ல.ராமர் கோவிலை கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உட்பட அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

Thursday, 23 September 2010

தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா? தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும். 961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்? விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.  70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!

Tuesday, 21 September 2010

பிளாக்கர் பதிவில் வீடியோ அப்லோடு செய்ய ??????

பெரும்பாலான பதிவர்கள் தமது பதிவில் வீடியோ இணைக்க முடியவில்லையே என நினைப்பதுண்டு. அவர்களுக்காகவே இந்த பதிவில் எப்படி பதிவில் வீடியோவை இணைப்பது என்பது பற்றி எழுதியுள்ளேன்.

இதை செய்ய நீங்கள் புதிய எடிட்டர் உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய எடிட்டரிலேயே இந்த வசதி உள்ளது. இதனை செய்ய கீழ்கண்டவழிமுறைகளை பின்பற்றவும்.

1, முதலில் உங்கள் பிளாக்கரில் SETTINGS > BASIC செல்லவும்.

2, அந்த பக்கத்தில், கீழே படத்தில் உள்ளது போன்ற ஒரு பகுதி இருக்கும். அதில் Old Editor செலக்ட் செய்து கொள்ளவும்.




3, பின்பு நீங்கள் பதிவு எழுதும் பக்கத்தில் "பிலிம் சுருள்" போன்ற ஒரு ஐகான் இருக்கும்.
அதனை கிளிக்கவும்.


4, "Choose File" என்பதனை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள வீடியோவை இணைக்கலாம். பின்பு உங்கள் வீடியோ-விற்கு ஒரு தலைப்பு கொடுத்து கொள்ளவும்.

5, "Upload Video "என்ற பட்டனை கிளில் செய்வதன் மூலம் உங்கள் பதிவில் வீடியோ-வினை இணைத்து கொள்ளலாம்.


பின்குறிப்பு : இந்த வசதி புதிய எடிட்டரில் இல்லை. பழைய எடிட்டரில் மட்டும் உள்ளது.


Read more: http://therinjikko.blogspot.com/search?updated-max=2010-08-29T09%3A57%3A00%2B05%3A30&max-results=1#ixzz10BErbTbK

வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்


ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும்.
அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் முடிவுக‌ளை முற்றிலும் புதிய‌ முறையில் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் காட்டுகிற‌து.
உட‌னே கூகுலுக்கு போட்டியாக‌ ஒரு தேடிய‌ந்திர‌ம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வ‌ந்துவிட்ட‌து என‌ நினைக்க‌ வேண்டாம்.கார‌ண‌ம் கூகுலை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் தேடிய‌ந்திர‌ வ‌கையை சேர்ந்த‌து தான் ச‌ர்ச் கீயுப்பும்.
அது மட்டுமல்ல இணையதளங்களை இணையதுண்டுகளாக (த‌ம்ப்ஷாட்) காட்ட தம்ப்ஷாட்ஸ் இணையசேவையை பயன்படுத்துகிறது.
அதாவ‌து ச‌ர்ச் கியூப்பும் கூகுல் தேடிய‌ந்திர‌த்தையே ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.ஆனால் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் தான் வித்தியாச‌ம் காட்டுகிற‌து.உணமையில் இது தேட‌ல் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிட்டு தரவில்லை.அத‌ற்கு மாறாக‌ முப்ப‌ரிமான‌ ச‌துர‌மாக‌ தேட‌ல் ப‌ட்டிய‌லில் உள்ள‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை இட‌ம்பெற‌ வைக்கிற‌து.
இணைய‌த‌ள‌ங்க‌ளின் துண்டு தோற்ற‌ம் (த‌ம்ப்ஷாட்)இந்த‌ ச‌துர‌ம் சுழன்று கொண்டே இருக்கும்.ச‌துர‌த்தில் ஏதாவ‌து ஒரு இட‌த்தில் ம‌வுசை கொண்டு சென்றால் அருகே அந்த‌ இணைய‌த‌ள‌த்தின் அறிமுக‌ம் வ‌ந்து நிற்கிற‌து.அதில் கிளிக் செய்தால் த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்ய‌லாம்.
இணைய‌த‌ள‌ங்க‌ள்,இணைய‌ ப‌க்க‌ங்க‌ள்,செய்திக‌ள்,வீடியோ,புகைப்ப‌ட‌ங்க‌ள்,என‌ எல்லாமே இந்த‌ சதுர‌த்தில் இருக்கின்ற‌ன‌.மொத்த‌ம் 96 இணைய‌ துண்டுக‌ள் இவ்வாறு இட‌ம்பெற்றுள்ள‌ன‌.
வ‌ரிசையாக‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து பார்த்து ஏற்ப‌ட்ட‌ க‌ளைப்பு இந்த‌ ச‌துர‌த்தை பார்த்த‌ மாத்திர‌த்தில் வில‌கிவிடும்.
ச‌துர‌த்தை மேலும் கீழாக‌வோ ப‌க்க‌வாட்டிலோ புர‌ட்ட‌லாம்.இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்ப‌டி என்று த‌னியே குறிப்பும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அநேக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்படி? என‌ விள‌க்க‌ம் அளிக்கும் அபூர்வ‌ தேடியந்திர‌ம் இதுவாக‌ தான் இருக்கும்.
ச‌ர்ச் கியூப்பை சூப்ப‌ர் தேடிய்ந்திர‌ம் என்று சொல்ல‌ முடியாவிட்டாலும் முடிவுக‌ளை காண்பிக்கும் வித‌த்தில் சின்ன வித்தியாச‌த்தை செய்து க‌வ‌ர்ந்திழுக்கிற‌து.
காட்சிரீதியாக‌ முடிவுக‌ளை காண்பிப்ப‌து என இத‌னை ச‌ர்ச் கியூப் குறிப்பிடுகிற‌து.வெகு கால‌ம் முன் விவிஸ்மோ தேடிய‌ந்திர‌ம் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் புதுமையை புகுத்த‌ முய‌ன்றது நினைவிருக்க‌லாம்.விவிஸ்மோ முடிவுக‌ளை பட்டியலிடும் முறையில் இருந்து வில‌கி அவ‌ற்றை வ‌ரைப‌ட‌ம் போல‌ காட்ட‌ முய‌ன்ற‌து.ஆனால் விவிஸ்மோ இப்போது பயன்பாட்டில் இல்லை.
அந்த‌ வ‌ரிசையில் இப்போது ச‌ர் கியுப் அறிமுக‌மாகியுள்ள‌து.
எத‌யும் காட்சி ரீதியாக‌ அணுக‌ விரும்புகிர‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் பிடித்திருக்கும்.
ஆனால் இத‌னை முழுமையாக ப‌ய‌ன்ப‌டுத்த‌ பிளேஷ் வ‌ச‌தி தேவை.
சர்ச் கியூப் உங்களுக்கு பிடித்திருந்தால் அதே பாணியில் வேறு சில தேடிய்ந்திரங்களும் இருக்கின்றன.அவற்றில் ரெட்ஜீயை மிகவும் சிரப்பானது என்று குறிப்பிடலாம்.
அழகிய வரிக்குதிரையின் லோகோ வரவேற்கும் இந்த தேடியந்திரம் வண்ணமயமான பின்னணியில் மாமுலான தேடியந்திரம் போலவே இருக்கிறது.ஆனால் தேடு என கட்டளையிட்ட பின் இதன் தனித்துவம் தெரிகிறது.
தேடல் முடிவுகள் இணையதளங்களின் துண்டு தோற்றங்களாக அரை வட்டமாக தோன்றுகின்றன.வட்டத்தை பக்கவாட்டில் நகர்த்தினால் புதிய இணையதளங்களின் தோற்ற‌த்தை பார்க்க முடியும்.அவை பற்றிய‌ குறிப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.
இதே போல ஆஸ்கோப் தேடியந்திரமும் முடிவுகளை காட்சி ரீதியாக தருகிறது.
———–
http://www.search-cube.com/