ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
முன்னுக்கு நிற்ப்பது மு.கா
என்று எண்ணியிருக்க
என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!
இறுதியாய் ஒரு தடவை பார்த்து
காண்ணீர் விட்ட பின்
கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
கயவர்கள் உன்னை
கடலுக்குள் புதைத்தார்களோ!
உடன் பிறவா சகோதரனே
ஊழலில் நீ எப்படியோ தெரியல ..
ஆனாலும் உண்மையிலே
எமக்குள் ஒற்றுமை பல!
புனிதப்போர் என்று
உயிர்களை கொன்றாய் நீ
புள்ளை குட்டிக்கென்று
உடைமைகள் கொண்டேன் நான்!
மதங்களை வச்சு
மக்களை கொன்றாய் நீ
மக்களை வச்சு
ஆட்சி வென்றேன் நான்
அடிப்படையில் நமக்கு
பலிக்கடா மக்கள் தான்!
ஆரம்பத்தில் நீயும்
அமெரிக்கனின் அடிமையாமே,
கடைசி வரை நான்
காங்கிரசுக்கு அடிமை!
புளைக்க தெரியாதவன் நீ;
இன்று பார்
இடையிலே கொள்கை மாறியதால்
இறந்துவிட்டாய்!
இறுதி வரை நான்
கொண்ட கொள்கையிலே..
இறக்கும் வரை முதல்வன்!
தாடி வைத்த தூயவனே,
தங்கரதத்தில் அனுப்பியுன்னை
கொடநாட்டு பெண்மணிக்கு
குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
பாதியிலே நீ போனதால்
பதை பதைக்கிறது உள்ளம்
இன்னும் எழுத எண்ணவே
என் கண்ணீரால் நனைந்தது காகிதம்!
உண்மையை சொல்கிறேன்
இறக்கவில்லை நீ
என் போல் மனிதர்களில்
என்றும் வாழ்வாய் !
இங்கனம்
பாசத்தலைவன்
மு. கா
No comments:
Post a Comment