tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday, 24 October 2011

நகைகளை வழங்கும் ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம்

இந்தியாவில் முதன் முறையாக நகைகளை வழங்கும் ஏ.டி.எம் இயந்திரம் அறிமுகம் விவரங்கள் படிப்புகள்: 33 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டிலேயே முதன்முறையாக தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்கும் ஏ.டி.எம் இயந்திரத்தை கீதாஞ்சலி குழுமம் மும்பையில் நிறுவியுள்ளது. கீதாஞ்சலி நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் அகர்வால் கூறியதாவது, தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்வதற்கு என்றே ஏ.டி.எம் இயந்திரத்தை நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் நிறுவி உள்ளோம். வியாபார நிறுவனங்கள், விமான நிலையங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட 75 இடங்களில் இது போன்ற ஏ.டி.எம்களை நிறுவ இக்குழுமம் திட்டமிட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், காதணிகள், மத ரீதியான நகைகள், வைரக்கல் பதித்த நகைகள் ஆகியவை பல்வேறு எடை அளவுகளில் கிடைக்கும். ரூ.1,000 முதல் ரூ.30,000 விலையிலான மொத்தம் 36 வகையான நகைகளை இந்த இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வர்த்தகம் நடைபெறும் என்று தெரிவித்தார். தங்க நாணயங்கள் வழங்கும் ஏ.டி.எம் இயந்திரங்கள் துபாய், சீனாவில் ஏற்கனவே நிறுவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment