இணையத்தில் எளிதாகவும், வேகமாகவும் உலா வர கீழே தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம் இணையப் பயணத்தில் நேரம் மிச்சமாவதுடன், நம் உழைப்பும் தேவையற்ற வகையில் செலவாகாது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Alt + Left Arrow: இணைய தளம் ஒன்றை பின்பக்கமாகத் தள்ளுகிறது. அதாவது குறிப்பிட்ட தளத்திற்கு முன் உள்ள பக்கத்திற்கு உங்களை மாற்றுகிறது.
Alt + Right Arrow: மேலே கூறியதன் மாற்றாகச் செயல்படும்
F5: அப்போதைய டேப், பிரேம் மற்றும் இணைய தளத்தினைப் புதுப்பிக்கும்
F11: அப்போதைய இணைய தளத்தினை முழுத் திரையில் காட்ட உதவும். மீண்டும் பழைய நிலைக்குக் காட்டவும் இதனைப் பயன்படுத்தலாம்.
Esc: இறக்கப்படும் ஓர் இணைய தளத்தினை நிறுத்திவிடலாம்.
Ctrl + ( or +): இந்த கீ இணைப்பில், பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தின் டெக்ஸ்ட் எழுத்துக்கள் அளவு பெரியதாகலாம், சிறியதாகலாம்.
Ctrl + Enter: இணைய தள முகவரி ஒன்றின் பெயர் மட்டும் கொடுத்து, இவற்றைத் தட்டினால் முழுவதுமாகக் கிடைக்கும். (.com என்பதில் முடியும் தளப் பெயர் மட்டும்) எடுத்துக்காட்டாக, http://www.dinamalar.com என்பதற்கு dinamalar என டைப் செய்து, இந்த கீகளை அழுத்தவும்.
Shift + Enter: மேலே சொன்னபடி ".net" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும் .
Ctrl + Shift + Enter: மேலே குறிப்பிட்டுள்ளபடி ".org" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்.
Ctrl + Shift + Del: இந்த கீகளைப் பயன்படுத்தி Clear Data என்ற விண்டோவினைத் திறந்து, நம் பெர்சனல் டேட்டாக்களை நீக்கலாம்.
Ctrl + D: அப்போது பயன்பாட்டில் உள்ள தளத்திற்கான புக் மார்க் ஒன்றை ஏற்படுத்தும்.
Ctrl + I: இருக்கின்ற அனைத்து புக்மார்க்குகளையும் காட்டும்.
Ctrl + J: டவுண்லோட் விண்டோவினைக் காட்டும்.
Ctrl + N: புதிய பிரவுசர் விண்டோவினைத் திறக்கும்.
Ctrl + P: அப்போதைய இணையப் பக்கத்தினை அச்சிட.
Ctrl + T: புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
Ctrl + F4 or Ctrl +W: அப்போதைய டேப்பினை அப்போதைக்கு மூடும்.
Ctrl + Shift + T: அப்போது மூடப்பட்ட டேப்பில் இருந்த விண்டோவினைத் திறக்கும்.
Ctrl + Tab: திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டேப்கள் வழியாகச் செல்ல இவை உதவும்.
Spacebar: இணையதளப் பக்கத்தில் கீழாக ஒரு பக்கம் செல்ல இந்த கீகள் பயன்படுத்தப்படுகின்றன.
Shift + Spacebar: இணையதளப் பக்கம் ஒன்று மேலாகச் செல்லும்.
Alt + Down arrow: டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்த அல்லது கீழ்விரி மெனுவில் தந்த டெக்ஸ்ட் அனைத்தையும் காட்டும்.
No comments:
Post a Comment