இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோசிக்கக்கூடிய புத்திசாலித்தனம்.
அத்தகைய சாமர்த்தியம் இருந்தால் உலகையே கூறுபோட்டு விற்றுவிடலாம். மேப்கட் இணைய சேவை அதைத்தான் செய்கிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் வரைப்படத்தைக்காட்டி விற்க முடிந்தால் எப்படி இருக்கும்? மேப்கட் இதைத்தான் செய்கிறது. வரைபடத்தில் உங்களுக்கான இடத்தை மேப் கட் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
ஏக்கர் கணக்கில் தரிசாக கிடக்கும் நிலத்தை
பிளாட் போட்டு விற்பது போல மேப் கட் வரைபடத்தில் பிளாட் போட்டு விற்பனை செய்கிறது. உடனே இது ஏதோ மோசடி என்று நினைக்க வேண்டாம்.
இண்டெர்நெட்டை புரிந்து கொண்டதன் பயனாக
ஏற்பட்ட புரிதலினால் வெளிப்பட்ட சாமர்த்தியம் இது.
இண்டெர்நெட்டில் டொமைன் பெயர் எனும் இணைய முகவரிகள் விற்பனை செய்யப்படுகிறது அல்லவா. அதேபோல, தனி நபர்களுக்கான அடையாளமாக விளங்கக்கூடிய பெயர்களை மேப்கட் விற்பனை செய்யும் சேவையை வழங்கி வருகிறது. இணைய முகவரிகளை பதிவு செய்து கொண்டால் அது உங்களது இணைய தளத்திற்கான நுழைவு வாயிலாக அமையும்.
அதே போல, மேப்கட் அடையாளமானது சைபர்
உலகில் உங்களுக்கான அடையாளமாக திகழும் என்கிறது மேப்கட். இண்டர்நெட்டில் எல்லோரும் எதாவது ஒரு வகையில் இடம் பெற்று வருவதையும், இணைய வரைபடத்தில் ஒருவரது இருப்பிடத்தை துல்லியமாக குறிப்பிடமுடிவதையும் அழகாக இணைத்து இந்த சேவையை மேப்கட் உருவாக்கி உள்ளது.
கூகுலின் வரைப்பட சேவையில் ஒருவருடைய வீட்டு முகவரி அல்லது அலுவலக முகவரியை குறிப்பிட்டு இருப்பிடத்தை கண்டறிய முடியும். இது மிகவும் சுலபமானது. ஆனால், அதே நேரத்தில் சிக்கலானது.
காரணம் முகவரி முழுவதும் தெரிந்தால் தான் குறிப்பிட்டு தேட முடியும். வெறும் பெயரை மட்டும் குறிப்பிட்டு தேட முடியாது.
மிகப் பிரபலமாக இருக்கும் நினைவு சின்னங்கள் மற்றும் நிறுவனங்களின் இருப்பிடத்திற்கு மட்டுமே அது சாத்தியம்.
மேப்கட் சேவை சாமான்யர்களுக்கும் இந்த வசதியை வழங்குகிறது. எப்படி என்றால், இணையவாசிகள் இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு தங்கள் பெயர் அல்லது விருப்பமானதொரு அடையாளத்தில் தங்களது இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு, நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களை சந்திக்கும் போது விசிடிங் கார்டு கொடுப்பது போல, மேப்கட் அடையாள சொல்லை மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் அந்த சொல்லை டைப் செய்தால், வரைபடத்தில் இணைய வாசியின் இருப்பிடம் சுட்டிக்காட்டப்படும்.
இப்படி இணையவாசிகள் தங்கள் வசிப்பிடம் அல்லது பணியிடத்தை பதிவு செய்து கொள்ளலாம். மேப்கட்டில் அவற்றுக்கான குறுக்குவழி உருவாக்கப்பட்டிருக்கும். உலகில் உள்ள எந்த இடத்தை வேண்டுமானாலும் இப்படி பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த சேவை அடிப்படையில் இலவசமானது என்றாலும், மேம்பட்ட வசதிகள் தேவை என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் கொடுக்கும் பட்சத்தில் வரைப்படத்தில் இருப்பிடம் காட்டப்படுவதோடு, அதே பக்கத்தில் ஒருவருடைய பேஸ்புக், டிவிட்டர் முகவரி, இமெயில் முகவரி, இணையதளம் என சகலவிதமான தகவல்களையும் இடம் பெற செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் இலவச பதிவு என்றால் வேறு இடத்திற்கு செல்லும் போது, மேப்கட் அடையாளத்தை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் கட்டண சேவையில் இது சாத்தியம்.
உலகில் உள்ள ஒவ்வொரு இடத்திற்குமான இணைய குறுக்குவழி என்று மேப்கட் தன்னை வர்ணித்து கொள்கிறது.

No comments:
Post a Comment