tamilkalangiyam

இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.
Friday, 3 February 2012
ஐசிசி ரேங்கிங் : இந்திய வீரர்கள் பின்னடைவு
ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் பின்தங்கி உள்ளனர். சச்சின் 9வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ராகுல் டிராவிட் 15வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கும், வி.வி.எஸ்.லஷ்மண் 21ல் இருந்து 23வது இடத்துக்கும் பின்தங்கினர். சேவக் ஒரு இடம் கீழிறங்கி 24வது ரேங்க் பெற்றுள்ளார்.
தொடக்க வீரர் கம்பீர் 2 இடம் பின்தங்கி 34வது இடத்தில் உள்ளார். ஆஸி. டெஸ்ட் தொடரில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற விராத் கோஹ்லி 17 இடங்கள் முன்னேறி 50வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் 7 இடம் முன்னேறி 3வது இடத்திலும், முன்னாள் கேப்டன் பான்டிங் 8 இடம் முன்னேறி 14வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் மட்டுமே டாப் 10ல் இடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டாப் 20ல் கூட ஒரு இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாகப் பந்துவீசி அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பீட்டர் சிடில், ரியான் ஹாரிஸ், நாதன் லியான் ஆகியோர் தரவரிசையில் முன்னேறி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment