tamilkalangiyam

இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.
Friday, 17 February 2012
இந்தியாவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது
இந்தியாவில் பயகங்ரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக இஸ்ரேலிய எரிசக்தித் துறை அமைச்சர் உசி லாண்டவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதுடெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததன் மூலம், இந்தியாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தீவிரமாக உள்ளது என்றார்.
மேலும், பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவும் இஸ்ரேலும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதன்பிறகு, இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைய வேண்டும். இருநாடுகளும் ஒன்றிணைந்து, பயங்கரவாத ஒழிப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது இரு நாடுகளுக்கும் புதிதல்ல. எனினும், வளர்ந்து வரும் பயங்கரவாதத்தால் நமது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்ததோடு, அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாகவும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment