tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday, 19 October 2011

இந்தியா மீது அமெரிக்கா போர்!

இந்தியா மீது அமெரிக்கா போர்! குடவோலை முறை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சோழர் காலத்தில் கிராம நிர்வாகத்திற்கான நபர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. மக்களின் புகார்கள் மற்றும் வழக்குகளை நேர்மையாகவும் முறையாகவும், விசாரித்து தீர்ப்புகள் கூறுவதற்க்காக, இந்த அமைப்பை பயன்படுத்தினார்கள். இராஜராஜ சோழன் அறிமுகம் செய்த இந்த நீதி வழங்கும் முறைதான் உலகின் முதல் நீதித்துறை கட்டமைப்பு. இதுவே உலக நாடுகளின் நீதித்துறை அமைப்புகளுக்கு முன்னோடி என்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்று பிரிட்டீஷ்காரர்கள் எச்சமாய் விட்டுச்சென்ற சட்டங்களையும், நீதித்துறை கட்டமைப்புகளையும் பெருமையோடு கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கென, நம் நாட்டின் சூழலுக்கு தகுந்த சட்டங்களையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் நமக்குத் தகுந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மேம்படுத்தாமல் வெளிநாட்டவன் தயவில் காலம் தள்ளுவதால், இப்போது மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளோம். ஒரு நாட்டைப் பிடிக்க வேண்டுமென்றால், முதலில் அந்நாட்டை நோட்டமிட்டு, எங்கெல்லாம் பாதுகாப்பில் ஓட்டைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்து, மெதுவாக ஊடுறுவி பின் தாக்குதலில் இறங்குவார்கள். இதே முறையில்தான் நம் நாட்டை இப்போது அமெரிக்கா சுற்றி வளைத்துவிட்டது. இதற்காக அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம், இன்டர்நெட். ஏன் இன்டர்நெட்டை தேர்வு செய்ய வேண்டும்? இன்றைய சூழலில் உலகை ஆளுவது இன்டர்நெட் தான் என்பது LKG குழந்தைக்கும் தெரியும். நம் நாட்டின் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை, நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளின் பணப்பரிவர்த்தனைகள், பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களையும், செலுத்தும் வசதி உட்பட அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும், வர்த்தகங்களும் இப்போது இன்டர்நெட்டில் தான். இவைதவிர, வாக்காளர் விபரத்திலிருந்து, நில சர்வே எண் வரை, அரசின் பல்வேறு துறைகளைப் பற்றிய முக்கிய தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன. இப்படி அரசின் செயல்பாடுகள் அனைத்தும், இன்டர்நெட் வடிவத்திற்கு மாறுவதற்குப் பெயர்தான் இ-கவர்னன்ஸ். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த தகவல்களைப் பார்க்க முடியும், சேவைகளைப் பயன்படுத்த முடியும். இதுபோதாதா? திருடனுக்கு வசதியாக ஜன்னல் ஓரம் பீரோவை பூட்டாமல் வைப்பதுபோல நாட்டை முடக்கி விடவேண்டும் என்று களத்தில் இறங்கியிருப்பவர்களுக்கு, ஆன்லைனில் நாம் கதவு திறந்து வைத்திருக்கிறோம். இதை யார் செய்கிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? நம் தகவல்களை வைத்துக் கொண்டு அவர்களால் என்ன செய்ய முடியும்? நம்மிடம் கொட்டிக் கிடக்கும் வளங்களைப் பார்த்து, கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் நம் நாட்டுக்குள் நுழைந்து, நம்மிடம் உள்ள குறைகளை சாத்தியமாக்கி, மெல்ல மெல்ல அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இறுதியில் நம்மை அடிமைகளாக்கி ஆண்டனர். இந்த நிலை இப்போது திரும்புகிறது, ஹைடெக் வடிவில். நமக்கு கிடைத்த ஆதாரப் பூர்வ தகவலின் படி, நம் நாட்டின் மிக முக்கிய தகவல்கள் பங்குச்சந்தை பரிவர்த்தனை உட்பட அனைத்து ஆன்லைன் சேவை உட்பட உண்ணிப்பாக கண்காணித்து சேகரிப்பது, அமெரிக்காவின் உளவுப் பிரிவான சி.ஐ.ஏ! நீண்ட காலமாகவே நமது ஆன்லைன் பேங்கிங், பங்குச்சந்தை பரிவர்த்தனைகளை நோட்டமிட்டுள்ளனர். நம்மிடம் சரியான சைபர் சட்டங்கள், பாதுகாப்பான கட்டுப்பாடுகள் இல்லாததை சாத்தியமாக்கிக் கொண்டு, என்.எஸ்.சி , பி.எஸ்.சி , நாட்டின் அனைத்து வங்கிகளின் ஆன்லைன் பயனாளர்களின் இரகசிய தகவல்கள் (பாஸ்வேர்ட் உட்பட) மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட அனைத்து துறைகள் பற்றிய முக்கிய தகவல்கள், டிவிட்டர், பேஸ்புக், ஆர்குட் மற்றும் அனைத்து மின்னஞ்சல் வலைத்தளங்களிலும் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவரது முக்கிய தகவல்கள் யாவும், இப்போது சி.ஐ.ஏ வின் விரல் நுனியில்! அவர்கள் நினைத்தால், நம் பங்குச்சந்தை பரிவர்த்தனைகளை ஆன்லைனில் அப்படியே நிறுத்த முடியும். இந்தியர்கள் அனைவரது வங்கிக் கணக்குகளை ஆன்லைன் மூலம் முடக்க முடியும். அரசின் ஆன்லைன் செயல்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்ய முடியும். சொல்லப்போனால், சில மணி நேரத்தில் இன்டர்நெட்டில் இந்தியாவின் அனைத்து தகவல்களையும் மொத்தமாக அழித்து விட முடியும். பங்குச்சந்தையில் தொடர்ந்து சில நாட்களுக்கு சிறிய சரிவு ஏற்பட்டாலே நம் பொருளாதாரம் ஆட்டம் காணும் சூழலில்........... மேலே குறிப்பிட்ட அனைத்தும் நடந்து விட்டால்? விபரீதத்தை இப்போது உணர்ந்திருப்பீர்கள். இன்டர்நெட் மூலமாகத்தானே ஊடுருவுகிறார்கள்? நிஜ வாழ்க்கையில் நம் பாக்கெட்டிலிருந்து யாரும் பணத்தை பிடுங்கப் போவதில்லையே என்று அலட்சியமாக இருப்பவர்களுக்கு, பெட்ரோல் விலை உயர்ந்தால் காய்கறி, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்கிறதே, ஏன்….? இதற்கான பதில் உங்கள் அனைவருக்கும் தெரியும். இதே நிலைதான் இந்திய பொருளாதாரத்திற்கும். பங்குச்சந்தைகளை முடக்கினால்......... ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கையும் ஆன்லைன் மூலம் முடக்கினால்.......... இந்தியாவின் நிலைமை சீட்டுக் கட்டு போலச் சரியும். சரிந்தால் மீண்டும் எழவே முடியாது. ஆயுதங்களுடன் நாட்டுக்குள் புகுந்து நம்மை சுட்டுத் தள்ளினாலும், சில நிமிடங்களில் துடித்து அடங்கி மரணிப்போம். ஆனால் பொருளாதாரத்தை சீர்குலைத்து சோற்றுக்கே வழியில்லாமல் செய்து விட்டால்..... பசியால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து, அண்டை நாடுகளிடம் எதை வேண்டுமானாலும் தாரை வார்ப்போம். இது தான் அவர்களது டார்கெட். இது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். நாம் சுற்றிவளைக்கப்பட்டு விட்டோம். சைபர் போருக்கு அந்நியர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். இது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், ஸ்பெக்ட்ரம், இஸ்ரோ அலைவரிசை கையாடல்கள், விளையாட்டுத் துறை ஊழல், என, ஆட்சியாளர்கள் படு பிசியாக இருப்பதால் விபரீதத்தை கண்டும் காணாமல் விட்டிருக்கலாம். அல்லது இந்த விபரீதத்தை கண்டும் காணாமல் விடுவதற்காக கவனிக்கப்பட்டு இருக்கலாம். வெளிநாட்டு பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இந்தியாதான் ஹாட் மார்க்கெட். குறிப்பாக அமெரிக்காவின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் அனைத்தும், அந்நாட்டை விட இரண்டு மடங்கு இந்தியாவில் விற்பனையாகின்றன. இதை சாதகமாக்கிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை மேலும் விரிவடையச் செய்ய வேண்டுமென்றால், இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளை முடக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். கிழக்கிந்திய கம்பெனியைப் போல நம்மிடமுள்ள குறைபாடுகளைச் சாதகமாக்கி உள்ளே புகுந்து அடிமைப்படுத்த வேண்டும் என்பது தான் அமெரிக்காவின் திட்டம். காவலாளி இல்லாத, ஒழுங்காக பராமரிக்காத வேலியைக் கொண்ட வளமான மாந்தோப்பைப் பார்க்கும் போது, பயந்தாங்கொள்ளிக்குக் கூட மாங்காய் பறிக்க ஆசைவரும். இது இயல்பு தானே! நம் நாட்டின் ஆன்லைன் பாதுகாப்பும் மேலே கூறிய மாந்தோப்பைப் போலத் தான். எலெக்ட்ரானிக் சட்டங்கள் இல்லாததால், நம்மை எளிதாக சுற்றி வளைத்து விட்டனர். இந்தியாவைப் போலவே, சீனாவும் பல்வேறு துறைகளில் அமெரிக்க மற்றும் பிரிட்டனை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. ஆனாலும் சீனப் பெருஞ்சுவரைப் போலவே, தங்கள் இ-கவர்னன்ஸ் செயல்பாடுகளுக்கும் கடுமையான சட்டங்களை விதித்து பாதுகாப்பு சுவரை பலப்படுத்தி விட்டது. சீனா மட்டுமின்றி உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பல, 2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி நடத்தப்பட்ட ஒரு சாம்பிள் தாக்குதலில் உஷாராகி, தங்கள் நாட்டின் ஆன்லைன் சட்டங்களை கடுமையாக்கி, பாதுகாப்பை அதிகரித்து விட்டன. குறிப்பிட்ட அந்த தேதியில் சரியாக நான்கு மணி நேரம் ட்விட்டர் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது. சைபர் இரானியன் ஆர்மி என்ற குழு, இந்த வேலையைச் செய்ததாக அறிவிக்கப்பட்டது. நான்கே மணி நேரம் தான். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இழப்பு பல மில்லியன் டாலர்கள். தாக்குதலுக்குக் காரணம் அமெரிக்க உளவுப் பிரிவுதான் என்று ஆணித்தனமாகக் கூறப்படுகிறது. என்னமாதிரியான ரியாக்ஷன் கிளம்புகிறது என்பதை அறியவே இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகமே சுதாரித்துக்கொண்டபோதும், செவிடன் காதில் விழுந்த சங்கு போல தனது வழக்கமான கடமைகளை செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. கூகுள், விக்கிப்பீடியா உடந்தை! எப்போதும் ராணுவம் தடாலடியாக புகுந்து தாக்குதல் நடத்துவார்கள் என்று கூறிவிடமுடியாது. தனது சார்பில் சிலரை அனுப்பி நோட்டம் பார்ப்பார்கள், அவர்கள் மூலம் குழப்பத்தை விளைவிப்பார்கள், மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவார்கள், இது தான் நம் நாட்டில் இப்போது நடக்கிறது. நம்மை குழப்புவது, தவறான தகவல்களை அளித்து திசை மாற்றுவது ஆகிய பணிகளைச் செய்ய, இந்தியர்கள் அதிகம் நம்பும் கூகுள், விக்கிபீடியா ஆகிய சேவைகள் களமிறக்கப் பட்டிருப்பதாகவும் ஆதாரங்களுடன் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிறிய உதாரணம்: கூகுளின் இந்தியத் தளத்தில் (www. google.co.in) “How to” என்று கொடுத்துத் தேடிப்பார்க்கவும். “How to remove dress” “How to have sex” என்று படங்களுடன் வலைத்தளங்கள் தோன்றும். இதே சொல்லை பிரிட்டனுக்கான கூகுள் தளத்தில் (www. google.co.uk) தேடினால் “How to repair computer” உள்பட ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்யும் வலைத்தளங்களின் பட்டியல் தோன்றும். இது போல இந்திய வலைத்தளத்தில் எந்த வார்த்தையை பாதியாக கொடுத்தாலும், செக்ஸ் தொடர்பான விஷயங்கள் தான் நமக்கு முடிவுகளாகக் கிடைக்கும். அதிகமாகப் பார்க்கப்படும் வலைப்பக்கங்கள் தான் முன்னனியில் வரும் என்று கூறினாலும், நம் இளைஞர்களையும், மாணவர்களையும் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே இது போன்ற தேடல் முடிவுகள் திணிக்கப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல விக்கிபீடியாவில் நம் நாட்டைப் பற்றிய முக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் கட்டுரைகளின் ஒவ்வொரு துணைத்தலைப்புகளுக்கும் அருகில் edit என்ற சொல் கொடுத்திருக்கிறார்கள். விக்கிபீடியாவில் இலவசமாக பதிவு செய்து கொண்ட யார் வேண்டுமானாலும் செய்யலாம், தகவல்களை மாற்றலாம், அது எந்த தகவலானாலும் சரி….! இது போன்று மாற்றங்கள் செய்யப்பட்டாலோ, கட்டுரைகளில் உண்மை இல்லையென்றாலோ தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கைவிரிக்கிறது. விக்கிபீடியா கட்டுரைகளை இந்தியாவில் மாணவர்கள் தான் அதிக அளவில் படிக்கிறார்கள். அவர்களுக்கு தவறான தகவல்கள் சென்று சேரும் என்பது நன்றாகத் தெரிந்தும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விக்கிபீடியா கைவிரிப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இவை சிறிய உதாரணங்கள் தான். இதுபோல ஆன்லைனில் நம்மை மறைமுகமாக கேவலப்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க உளவு நிறுவனங்கள் அரங்கேற்றி வருகின்றன. ஏன் தெரியுமா? அடிமைப்படுத்துதலின் முதல் படி, மட்டம் தட்டி தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவது தான். தீர்வுகள் இல்லையா? இந்தியாவில் 80% பேர் விண்டோஸ் பதிப்பைத் தான் பயன்படுத்துகின்றனர். திடீரென, இன்டர்நெட் இணைப்பு வழியாக ஆன்லைன் அப்டேட்கள் என்ற பெயரில் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களும் முடக்கப்பட்டால்…..? உருவாக்கி வைத்திருக்கும் முக்கிய தகவல்களை எதில் திறந்து பார்ப்பது இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தாலே, அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை கண்டுபிடித்து விடலாம். விண்டோஸிற்கு மாற்று லினக்ஸ். பாதுகாப்பாக, உங்கள் வசதிப்படி லினக்ஸை பயன்படுத்தலாம். இதே போல ஆன்லைனில் ஒவ்வோரு செயல்பாட்டிற்கும் அமெரிக்க சேவைகளை நம்பி அவர்களிடம் நம் குடுமியைக் கொடுக்காமல், பாதுகாப்பான மாற்று தேட வேண்டும். பாதுகாப்பான மாற்று வேண்டுமென்றால், நிபுணத்துவம் பெற்றவர்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், நம்மிடமிருக்க வேண்டிய தொழில்நுட்ப அறிவுஜீவிகள் அமெரிக்காவின் பாதங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி ஆங்கில அறிவிலும் சிறந்தவர்கள் இந்தியர்கள் என்பது உலகறியும். எனவே தான் திறமையான, புத்திசாலியான இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கொத்திக் கொண்டு போகும் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், எதிர்பார்க்கும் சம்பளத்தை விட பத்து மடங்கு கொடுத்து ஆடம்பர மாயைக்குள் சிக்க வைத்து அடிமையாக்கிக் கொள்கின்றன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்பட, மைக்ரோசாப்டின் தயாரிப்புகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் 40% இந்திய நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. விண்டோஸ் மட்டுமின்றி, கூகுளின் அனைத்து ஆன்லைன் சேவைகளை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். இவர்கள் தங்களை தாண்டி வேறு எங்கும் செல்லக் கூடாது, சுதந்திரமாக சிந்திக்கக் கூடாது என்பதில் அமெரிக்க நிறுவனங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றன. அப்படியானால் நாம் மீண்டுமொரு முறை நம்மை இழந்து அந்நியர்களிடம் அடிமைப்படுவதை தடுக்கவே முடியாது இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார் திரு. ராம்பிரகாஷ். வழக்கறிஞரான இவர், ஆன்லைன் பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பாக பிரிட்டனில் ஆய்வுப் படிப்பை முடித்தவர். நம் நாட்டின் மீதான சைபர் தாக்குதல் குறித்து தனது ஆய்வின் போது ஆதாரங்களுடன் கண்டுபிடித்தவர். அமெரிக்க உளவுப் பிரிவின் இந்த செயல்பாட்டை சைபர் படையெடுப்பு என்றே கூறுவேன். மிகக் கச்சிதமாக நாம் அவர்களிடம் சிக்கியிருக்கிறோம். நம் வீட்டின் சாவி கிடைத்தும், அவர்கள் ஏன் இன்னும் உள்ளே வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ மிகப் பெரிய திட்டம் இருப்பதால் தான், நம் ஆன்லைன் செயல்பாடுகளை கைப்பற்றிய பின்னரும் அமைதியாக உள்ளனர். அனைத்தும் போன பின் குமுறுவதை விட, பாதுகாப்பு நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும். அவர்களிடம் சிக்கிய ஆன்லைன் சொத்துக்களை மீட்க முடியாது. ஆனால் இப்போதே அனைத்து சேவைகளையும் பேக்-அப் எடுத்து, பாதுகாப்பான அரண்களோடு நமக்கான சேவைகளில் பதிவது நல்லது. இவை எல்லாவற்றையும் விட, சைபர் சட்டங்களை உருவாக்கி கடுமையாக்க வேண்டும். மொத்தத்தில் நமக்கான பாதுகாப்பான மின் அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிரி உளவு விமானங்கள் நம் எல்லைக்குள் வரும்போதே கண்டுபிடித்து அழிக்கும் நம் ராணுவத்தைப் போல, ஆன்லைனில் நம் மின் அரசாங்கத்தை அந்நியர்கள் நெருங்கும் போதே இறுக்கிப் பிடிக்கும் சட்டங்கள் வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்ய, நீதித் துறையும், மின் அரசாங்கமும் கைகோர்க்க வேண்டும் என்றார். திரு. ராம்பிரசாத் சுட்டிக் காட்டிய விஷயம். அமெரிக்க சேவைகளுக்கு மாற்றாக, நாம் மிகப் பெரிய பாதுகாப்பு அரண்களை உருவாக்க வேண்டும். உருவாக்குவது மிகப் பெரிய வேலை இல்லை. விண்டோஸ், கூகுளை உருவாக்கிய இந்திய நிபுணர்களுக்கு, நம் நாட்டிற்காக பாதுகாப்பான ஆன்லைன்/ஆஃப்லைன் சேவைகளை உருவாக்குவது கடினமா என்ன....? அமெரிக்காவில் சுகவாழ்வு, டாலர்களில் சம்பளம், ஹைடெக் வாழ்க்கையைக் காட்டிலும் நம் நாடு மிக முக்கியம் என்பதை ஒவ்வொரு தொழில்நுட்ப நிபுணரும் உணர வேண்டும். போர்க்காலங்களில் வீட்டுக்கு ஒருவர் ராணுவத்தில் சேர்வது போல, அமெரிக்க அடிமை வாழ்க்கையில் சிக்கியிருக்கும் நிபுணர்கள் அந்த மாய வலையிலிருந்து வெயியேறி, நம் நாட்டுக்காக, தொழில்நுட்பங்களை உருவாக்க முன்வரவேண்டும். படித்தவுடன் அமெரிக்க நிறுவனங்களில் உங்கள் புத்திசாலித்தனத்தை விற்கும் முட்டாள்தனத்தை இனியும் தொடராதீர்கள். நிபுணர்களே..... அந்நியர்கள் நுழையாதபடி, அவர்களுக்கு சவால் விடும் தொழில்நுட்ப சேவைகளை உருவாக்கி அதன் மூலம் நம் ஆன்லைன் உலகை பலப்படுத்துங்கள்! இல்லையேல், ஊசலாடும் தாயின் உயிரை காப்பாற்ற தண்ணீர் தராமல், காதலியின் பாதங்களைக் கழுவிய பாவத்துக்கு ஆளாவீர்கள்! மார்ச் 2011 ல் கம்ப்யூட்டர் உலகம் என்ற புத்தகத்தில் வெளிவந்தது இந்த பதிவு இந்த பதிவைப் படித்துவிட்டு அனைத்து இந்தியரும் மறக்காமல் ஓட்டு போட்டுவிட்டுச் செல்லுங்கள். மற்றவர்களும் படிக்கட்டும்.

Tuesday, 4 October 2011

தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா!

System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்) வணக்கம் நண்பர்களே! தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்.... என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது..... அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore என்னும் ஒரு வழி உள்ளது... இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..! System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்.... இதை எப்படி மேற்கொள்வது..... முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode என்பதை தெர்ந்துடுங்கள்... தற்போது...தாங்கள் கணினியில் Control Panelலை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Click செய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்... அதில் மூன்று Optionகள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும். அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date).. மிக்க நன்றி!.......நண்பர்களே...தாங்களுக்கு பிடித்து இருந்தால் தாங்கள் கருத்துகளை கூறாலாம்.... Image Help

Wednesday, 28 September 2011

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.

Sunday, 25 September 2011

தியானம்

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?



தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.

ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கலாம்.
உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
பேராசையை தவிர்க்கும்.
உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
கண்பார்வை அதிகரிக்கும்.
அமைதியான மன நிலையை கொடுக்கும்.
மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
நண்பர்கள் வட்டம் பெருகும்.
தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
சமூக அக்கறை அதிகரிக்கும்.
எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.
மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
தற்காப்பை உருவாக்கும்.
வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
இதய நோய்களை கட்டுபடுத்தும்.
உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
தீய பழக்கங்களை ஒழிக்கும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்பனை திறன் அதிகரிக்கும்.
மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.

Thursday, 22 September 2011

இணையத்தில் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

நாம் இணையத்தில் இருந்து பெரிய பைல்களையும் மற்றும் திரைப்படங்கள், கட்டண மென்பொருட்கள் ஆகியவைகளை இலவசமாக டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் டோரென்ட் மூலமாக தான் டவுன்லோட் செய்வோம். இணையத்தில் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட தளங்களே வாசகர்களுக்கு மிக சிறந்த சேவையை தருகின்றன. அதில் சிறந்த பத்து தளங்களை கீழே அதில் உள்ள வசதிகளுடன் பட்டியலிட்டு உள்ளேன் கீழே பார்த்து பயனடைந்து கொள்ளவும்.
Bitsnoop

அலெக்சா தரவரிசையில் இந்த தளம் பெற்றுள்ள இடம் #1772
இணையத்தில் பிரபலமான தளமாகும். துவக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த அபார வளர்ச்சியை பெற்று உள்ளது.
இந்த தலத்தில் முழுக்க முழுக்க வீடியோக்கள், மற்றும் பாடல்கள் நிறைந்து காணப்படுவதாலே அனைவராலும் இந்த தளம் விரும்பப்படுகிறது.
இந்த தளத்தில் நீங்கள் ஒரு குறிச்சொல்லை கொடுத்து தேடினால் ஒரே வினாடியில் உலகளவில் உள்ள முடிவுகளை உங்களுக்கு தரும்.
இந்த தளத்தில் சுமார் 12 மில்லியன் டவுன்லோட் பைல்கள் 400 தளங்களில் இருந்து பெறப்பட்டு நமக்கு கொடுக்க படுகிறது.
நாம் கொடுக்கும் குரிசொல்லுக்கு ஏற்ப verify செய்யப்பட பைல்களையே நமக்கு கொடுக்கும். போலியான பைல்களை காண்பிக்காது.

ISOHunt

அலெக்சா தரவரிசையில் இந்த தளம் பெற்றுள்ள இடம் #245
இந்த தளம் 2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. துவக்க படும் பொது குறைந்த அளவே வீடியோக்களும் பாடல்களும் இந்த தளத்தில் காணப்பட்டன.
ஆனால் தற்போது 37 மில்லியன் டவுன்லோட் பைல்களும் சுமார் 500 தளங்களில் இருந்து பெற்று தகவல்களை நமக்கு தருகிறது.
இந்த தளம் Isohunt, lite, Isohunt.hk போன்ற மூன்று வெவ்வேறு சர்வர்களால் நிவாகிக்க படுகிறது.
இந்த தளம் கூகுளிடம் இருந்து பாராட்டுதல் வாங்கிய தளமாகும்.
ஆனால் தற்போது இந்த தளத்தில் சில ஆபாச விளம்பரங்கள் வெளியிடபடுகிறது.

Torrentz

அலெக்சா தரவரிசையில் இந்த தளம் பெற்றுள்ள இடம் #175
பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் தளமாகும்.
இது ஒரு தேடியந்திரம் படி செயல்படுகிறது. மற்ற தளங்களில் இல்லாத ஒரு வசதி இது இது எந்த தளங்களில் இருந்து தகவல் எடுத்தது என்பதை அறிந்து கொள்ள முடியம்.
இந்த தளத்தில் விளம்பர பிரச்சினை அறவே இல்லை.
இந்த தளம் உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருப்பதால் அனைவரும் டோரென்ட் பைல்களை பெற இந்த தளத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.

Mininov

அலெக்சா தரவரிசையில் இந்த தளம் #4899 இடத்தை பெற்று உள்ளது.
இந்த தளம் 2005 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த தளத்திலும் ஏராளமான டோரென்ட் பைல்கள் கிடைக்கின்றன.
Bit Torrent பைல்களை டவுன்லோட் செய்ய இரண்டாவது பெரிய தளமாக இது திகழ்கிறது.
இந்த தளத்தில் பல கட்டண மென்பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் எந்த வித அனுமதியும் இன்றி.

Pirate Bay

அலெக்சா தரவரிசையில் இந்த தளம் #89 வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த தளம் 2003 ஆம் ஆண்டு வெளியிட பட்டது. சில காப்பி ரைட் செய்யப்பட பைல்களை இலவசமாக டவுன்லோட் செய்ய விரும்புவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த தளம் தான் இணையத்தில் Bit Torrent பைல்களை டவுன்லோட் செய்யும் மிகப்பெரிய தளமாகும்.
இந்த தளத்தில் 27 மில்லியன் டோரென்ட் பைகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் உலகின் பல்வேறு மொழிகளில் காணப்படுகிறது.

BTJunkie

இந்த தளம் அலெக்சா தரவரிசையில் #389 வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த தளத்தில் சுமார் 4 மில்லியன் டோரென்ட் பைல்கள் காணப்படுகிறது.
இந்த தளம் கூகுளை போலவே வேலை செய்கிறது. மற்றும் இந்த தளத்தில் நாம் ஒவ்வொரு பைலுக்கும் ரேட்டிங் கொடுக்கும் வசதி உள்ளதால் சிறந்த பைல்களை நம்மால் கண்டறிய முடிகிறது.
மற்றும் இந்த தளத்தில் டோரென்ட் மெயில் வசதியும் உள்ளது. இதில் நம் மெயில் ஐடியை கொடுத்து பதிவு செய்து கொண்டால் புதிய டோரென்ட் பைல்களை சேர்க்கும் போது உங்களுக்கு அதனை பற்றி மெயில் அனுப்புவார்கள்.

Demonoid

இந்த தளம் அலெக்சா தரவரிசையில் #4297 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த தளம் Forum படி செயல்பட கூடியது.
இந்த தளத்தில் நாம் டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால் இந்த தளத்தில் நாம் உறுப்பினர் ஆனால் மட்டுமே இவ்வசதியை பெற முடியும். இது ஒரு இலவச சேவையாகும்.

Kick Ass Torrents



இந்த தளம் புதிய தளமாகும் ஆகையால் அலெக்சா தரவரிசையில் இன்னும் இடம்பெற வில்லை.
இருந்தாலும் இந்த தளத்தில் எல்லா வகை டோரென்ட் பைல்களும் இலவசமாக கிடைக்கும்.
இந்த தளத்திலும் நாம் பைல்களை அப்லோட் செய்யும் வசதி உள்ளது.
இந்த தளம் பல மொழிகளில் கிடைக்கிறது. பல உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கிறது.

Seedpeer

இந்த தளம் அலெக்சா தரவரிசையில் #5782 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த தளம் 2005ல் meganova என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 2007 ல் Seedpeer என்ற பெயர் மாறி தற்போது வரை இந்த பெயரடோ சேவையை வழங்கி வருகிறது.
இந்த தளம் சிறப்பாக செயல்பட்டாலும் பல புதிய டோரென்ட் பைல்களை சேர்க்க வில்லை என்ற பிரச்சினை வாசகர்களுக்கு உள்ளது.

You Torrent

அலெக்சா தரவரிசையில் இந்த தளம் #47972 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த தளம் ஒரு புதிய தளமாகும். சிறிது காலத்திலேயே இவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த தளம் பார்ப்பதற்கு ஒரு பிளாக் போலவே காணப்படும். அழகாகவும் இருக்கும்.
இந்த தளத்தில் நாம் டவுன்லோட் செய்யும் பைல்களை சமூக தளங்களுக்கு பகிரும் வசதியும் உள்ளது ஆகையால் நம் நண்பர்களுக்கு இதை தெரிவிக்கலாம்.
இந்த டொமைன் முதலில் pirateBay.com நிறுவனத்திடம் இருந்துள்ளது, பின்னர் இதை $20000 USD கொடுத்து இந்த நிறுவனம் வாங்கி உள்ளது.