tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 2 December 2011

நீங்கள் ஒரு இணையதளத்திற்கு இதுவரை எத்தனை முறை போனீர்கள் என கண்டுபிடிப்பது எப்படி?

நாம் தினம் தினம் ஒவ்வொரு இணையதளத்திற்கு செல்வோம்.அதிலும் குறிப்பாக இணைய இணைப்பு பெற்றவுடன் Facebook , Gmail , Youtube , Twitter,Yahoo , Hotmail போன்ற தளங்களுக்கு அடிக்கடி மறக்காமல் போய்க்கொண்டு இருப்போம்.நாம் அந்த தளங்களுக்கு இதுவரை எத்தனை முறை போய் உள்ளோம் என்று கண்டுபிடிக்க ஒரு முறை உள்ளது அதை பற்றி இன்று பார்ப்போம்.

இதை Mozilla Firefox பயன்படுத்துபவர்கள் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும்.Mozilla Firefox ஓபன் பன்னி நீங்கள் கண்டுபிடிக்க நினைக்கும் இணையதளத்திற்கு செல்லுங்கள்.பிறகு பட்ததை பார்த்து செய்து கொள்ளுங்கள்.






உங்கள் பகுதியில் பூகம்ப எச்சரிக்கை செய்யும் இணையத்தளம்




அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம்

முழுதும் ஏற்படும் நில நடுக்கங்களை கண்காணித்து வருகின்றது.

உங்கள் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிட நேரங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு இணையத்தளம்.

மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கும் இவ்வசதியை செயற்படுத்துவதற்கு,

https://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subcribe செய்த பின்னர் சாம்பிள் மின்னஞ்சல் வந்து சேரும்.

அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகிளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்னர் சேமித்து விடவும்.

இனிமேல் பூகம்ப எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.

குறிப்பு - அமெரிக்காவில் ஏற்படும் பூகம்ப தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும்.

ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் என தெரிவிக்கின்றது இந்த தளம்.


இணைப்பு - https://sslearthquake.usgs.gov/ens/

opera mini 6.5 புதிய வசதி

புதிதாக வந்து இருக்கும் opera mini 6.5 இல் பல புதிய வசதிககளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.Data Usage view என்ற வசதி மிக அருமையாக உள்ளது.இதன் மூலம் opera mini பெற்றுக்கொண்ட Data மிக குறைவு என்பதை ஆதாரத்துடன் நிறுபித்து இருக்கிறார்கள்.அதாவது 1MB கொண்ட இணைய பக்கத்தை opera mini இல் நாம் பார்க்கும் போது opera mini ஆனாது வெறும் 100KB இற்கு அந்த பக்கத்தை சுருக்கி நமக்கு காட்டுகிறது.

குறித்த நேரத்தில் எவ்வளவு வீதம் Data களை சேமித்து இருக்கிறது என்பதையும், இதுவரை எவ்வளவு Data களை சேமித்து இருக்கிறது என்பதையும் நாம் Data Usage view இற்கு சென்று பார்க்கலாம்.இதில் புதிதாக சேர்க்கப்பட்டவைகளை பாருங்கள்.

  • Added Data Usage view
  • Added star bookmark in URL
  • Added crash logger*
  • Added support for system bookmarks
  • Added support for Symbian Status Bar, Notification Bar*
  • Added protocol setting in advanced options
  • Added share pages through email
  • Improved compression with WebP instead of JPEG images*
  • Improved localization for more languages
  • Fixed various stability and performance issues
  • *Not Supported on Symbian S60 2nd edition

Opera mini 6.5 ஐ Download செய்வதற்கு m.opera.com இற்கு செல்லவும்.

'A', 'B', 'C சுவாரஸ்யமான தகவல்கள்

A', 'B', 'C' மற்றும் 'D' ஆனது 1 முதல் 99 வரை உள்ள இதற்கு இடைபட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை

எழுத்து 'D'
ஆனது ( Hundred ) முதல் முறையாக வரும்

'A', 'B' மற்றும் 'C' ஆனது 1 முதல் 999 வரை உள்ள இதற்கு இடைபட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை

எழுத்து 'A'
ஆனது ( Thousand ) முதல் முறையாக வரும்

'B' மற்றும் 'C' ஆனது 1 முதல் 999.999.999 வரை உள்ள இதற்கு இடைபட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை

எழுத்து 'B'
ஆனது ( Billion ) முதல் முறையாக வரும்

எழுத்து 'C' ஆனது முழு ஆங்கிலம் எண்ணிக்கையிடுதலில் சொற்களில் எங்கும் தோன்றும் இல்லை

புதிய அடையாள குறியுடன் ரூ.10, ரூ.1000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு


உலகின் முன்னணி நாடுகளில் இருந்து வெளியாகும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறிகள் இடம் பெற்று இருப்பதை காணலாம். ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் வெளியிடப்படும் கரன்சிகளில் பிரத்யேக அடையாள குறி கிடையாது.


ரூபாய் என்பதை குறிக்கும் வகையில் ஆர்.எஸ்.என்று பண மதிப்புக்கு முன்னாடி போடப்படுகின்றன. அந்த குறையை போக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கிய பிரத்யேக அடையாள குறியை ரிசர்வ் வங்கி எற்றுக் கொண்டது.

அந்த புதிய அடையாள குறி, நாணயங்களில் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கரன்சிகளில் இதுவரை பயன்படுத்தவில்லை. விரைவில் புதிய அடையாள குறியை தாங்கி ரூபாய் நோட்டுகள் வெளிவர உள்ளன. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி, ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய அடையாள குறியுடன் முதல் முதலில் ரூ.10, ரூ.1000 நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விழாக்கால சீஷனில் இந்த வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. பழைய நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும். அடுத்த கட்டமாக அனைத்து மதிப்பிலான ரூபாய் நோட்டுகளிலும், புதிய அடையாள குறி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.