tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday, 18 January 2012

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்


திருக்கோவிலூர் இருளர் சமூக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசாரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தியில்லை. ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்கிறது. இதனால் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Wednesday, 11 January 2012

மகரஜோதிக்கு பிறகு தமிழர்கள் மீது தாக்குதல்



கேரளாவில் மகரஜோதிக்கு பிறகு தமிழர்களை தாக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவுப்பிரிவு போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளனர். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையால், தமிழக, கேரள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருமாநில மக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்தில் கேரள மக்களின் சொத்துக்கள் மட்டுமே சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மகரஜோதிக்கு பிறகு அங்குள்ள தமிழர்களையும், அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், என மத்திய உளவுத்துறை எச்சரித்து அறிக்கை அனுப்பி உள்ளது. இந்த செய்தி கேரள பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது. இதனிடையே, தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தமிழகத்தில் உள்ள கேரள மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், என இங்குள்ள மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.

கடந்த டிசம்பரில் கார், பைக் விற்பனை அதிகரிப்பு


கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென கார் விற்பனை குறைந்தது. இதைத்தொடர்ந்து, கார் விற்பனை தொடர்ந்து 3 மாதங்கள் மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், புதிய மாடல்கள் வரவால் கடந்த நவம்பரில் கார் விற்பனை மீண்டும் எழுச்சி பெற துவங்கியது. டிசம்பரிலும் கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. பொதுவாக, ஆண்டு இறுதி என்பதால் டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருக்கும். ஆனால், ஜனவரியில் கார் விலையை உயர்த்த இருப்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்ததால், டிசம்பரிலேயே கார் வாங்க வாடிக்கையாளர்கள் முடிவு செய்ததும் விற்பனை ஏற்றம் பெற்றதற்கு முக்கிய காரணம். தவிர, அனைத்து கார் நிறுவனங்களும் கார்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியதும் கார் விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த டிசம்பர் மாதம் உள்நாட்டு கார் விற்பனை 8.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் 1,46,856 கார்கள் விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் 1,59,325 கார்கள் மொத்தமாக விற்பனையாகி 8.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இதேபோன்று, உள்நாட்டு பைக் விற்பனையும் 8.52 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் 10,06,289 இருசக்கர வாகனங்கள் விற்பனையானது. இது கடந்த டிசம்பரில் 10,91,982 இருசக்கர வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகி 8.52 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது," என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 10 January 2012

சி கிளீனரின் புதிய பதிப்பு



கம்ப்யூட்டரில் சேரும் குக்கீஸ், கேஷ் மெமரி பைல்கள், பிரவுசரின் தற்காலிக பைல்கள், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை அவ்வப்போது நீக்க பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அடிக்கடி இது மேம்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் டிசம்பர் இறுதியில் இதன் புதிய பதிப்பான சிகிளீனர் 3.14.1616 வெளியாகியுள்ளது. இதில் கீழ்க்காணும் புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்டார்ட் அப் டூலின் மேம்பாடான பயன்பாடு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமிற்கான ஆட் ஆன் தொகுப்பு சரிப்படுத்துதல், குக்கீஸ் எக்ஸ்போர்ட் மற்றும் இம்போர்ட் வசதி, குரோம் பிரவுசருக்கான கூடுதல் கிளீனிங் வசதி, ரியல் பிளேயர் 15 மற்றும் விண்டோஸ் மீடியா சென்டருக்கான கூடுதல் வசதிகள் மற்றும் விண் ஆர்.ஏ.ஆர்., விண்டோஸ் லாக் பைல்கள், யு டாரண்ட் மற்றும் அக்ரோபட் டிஸ்டில்லர் 10 ஆகிவற்றைக் கிளீன் செய்வதிலும் புதிய வசதி என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டதாக இந்த புதிய சிகிளீனர் தொகுப்பு கிடைக்கிறது. http://www.piriform.net என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது.


சென்ற டிசம்பரில் மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்குவதில், இந்த பதிப்பு, முந்தை யவற்றைக் காட்டிலும் 38% கூடுதல் வேகத்தில் இயங்கும் என்ற அறிவிப்புடன் இது வெளியாகியுள்ளது.
நவம்பரில் பயர்பாக்ஸ் பதிப்பு 8னை வெளியிட்டு ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது. இதில் “type inference” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம், ஆன்லைன் கேம்ஸ், அதிக பக்கங்கள் கொண்ட இணைய தளங்கள், அதி நவீன வெப் அப்ளிகேஷன்கள் ஆகியவை கூடுதல் வேகத்தில் இயக்கப் படும் என மொஸில்லா கூறியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தினை உருவாக்குவதில், கடந்த ஓராண்டாக மொஸில்லா செயல்பட்டு வந்தது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
இதன் இன்டர்பேஸ் தளத்தில் முக்கிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பில், வைரஸ் மற்றும் பிற மால்வேர்கள் தாக்கக் கூடிய இடங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மிக மிகப் பலவீனமானவையாகும். மெமரியைக் கையாள்வதில் இருந்த 23 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
குரோம் பிரவுசர் தன் அப்டேட் பைல்களை பயன்படுத்துபவர் அறியாமல் கம்ப்யூட்ட ருக்குள் அனுப்பி பிரவுசரை மேம்படுத்தும். ஆனால், பயர்பாக்ஸ் இந்தப் பதிப்பிலும் அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை. அப்படி ஒரு வழக்கத்தைத் தரப்போவதாக மொஸில்லா முன்பு உறுதி அளித்தது. ஆனால் இன்னும் அதனை நடைமுறைப் படுத்தவிலை. வரும் ஏப்ரலில் வெளியிடப் பட இருக்கும் பதிப்பில் இதனை எதிர்பார்க்கலாம்.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான பிரவுசரை வெளியிட்டுள்ள அதே நேரத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பிரவுசருக்குமான பதிப்பும் வெளியிடப்பட் டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான பதிப்பும், டேப்ளட் பிசிக்களுக்கான பதிப்பும் வெளியாகியுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்து இவற்றை டவுண்லோட் செய்திடலாம்.
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் பதிப்பில் பல புதிய மாற்றங்களை இயக்கத்திலும் தோற்றத்திலும் கொண்டு வந்துள்ளது மொஸில்லா.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 9னை மொஸில்லாவின் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4 மற்றும் அதன் பின்னர் வந்த பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த தளத்திலிருந்து அப்டேட் செய்வதற்கான பைல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 31ல் அடுத்த பதிப்பு கிடைக்கும்.
இந்த பதிப்பு வெளியான மறு நாளே, தன் பிரவுசரில் இருந்த ஒரு பிழையைக் கண்டறிந்தது மொஸில்லா. அதனைச் சரி செய்திடும் அப்டேட் பைலையும் வெளியிட்டது. மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில், இந்த பிழையினால் பிரவுசர் கிராஷ் ஆன தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அப்டேட் வெளியானது. இந்த அப்டேட் வெளியான போது, பலர் இதனை ஒரு ஏமாற்று பேர்வழியின் ஹேக் முயற்சி என்றே எண்ணினர். ஏனென்றால், இதுவரை சாப்ட்வேர் உலகில் இது போல மறு நாளே எந்த நிறுவனமும் அப்டேட் வெளியிட்டதில்லை. மொஸில்லாவின் தளத்தில் இந்த செய்தி வெளியான பிறகே அனைவரும் நம்பினர். பயர்பாக்ஸ் 9 பயன்படுத்துபவர்கள், இதுவரை இந்த அப்டேட் செய்திடாமல் இருந்தால், பிரவுசரை இயக்கி, ஹெல்ப் மெனு சென்று இதனைப் பெற்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
புதிய பதிப்பு வெளியான கையோடு, கூகுள் நிறுவனத்துடன் தான் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தினை மொஸில்லா மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, இந்த பிரவுசருக்கான மாறா தேடல் இஞ்சினாக கூகுள் தேடல் சாதனம் இருக்கும். 2008ல் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் சென்ற நவம்பரில் முடிவிற்கு வந்தது. தற்போது இது தொடர்கிறது.
கூகுள் சப்போர்ட் செய்து வருவதால், ஒரு காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசரை "கூகுள் பாக்ஸ்' என அழைத்தனர். இப்போது கூகுள் நிறுவனமே தன் குரோம் பிரவுசரை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆனால் கூகுள் எந்த பிரவுசரையும் போட்டி எனக் கருதாமல், மக்களுக்கு அதி வேகமான இயக்கத்தில் பிரவுசிங் அனுபவத்தினைத் தர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.