tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Sunday, 20 June 2010

3ஜி இணைந்த மூன்று சிம் போன் ??????

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர் மற்றும் ஆலிவ் பார் எவர் ஆன் என்ற இருவகை சிம்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மொபைல் போனையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஆலிவ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஆலிவ் விஸ் (Olive Wiz)  என்ற சோஷியல் நெட்வொர்க் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதில் மூன்று (2 ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ) சிம்களை இணைத்துப் பயன்படுத்தலாம். இதில் ஆப்பரா மினி பிரவுசர் தரப்பட்டுள்ளது. ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களுகுச் செல்லலாம்; பிரவுசிங் மேற்கொள்ளலாம். 

குவெர்ட்டி கீ போர்டு உள்ளது. எளிதாக இமெயில்களைக் கையாள இது உதவுகிறது. ஒரு மொபைல் போனில் காணப்படும் அனைத்து அடிப்படை வசதிகளுடன், 2 மெகா பிக்ஸெல் கேமரா, 4 ஜிபி வரை அதிகப்படுத்தக்கூடிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்,2.2 அங்குல வண்ணத் திரை, இமெயில் பிரவுசிங், WAP/MMS/GPRS  தொழில் நுட்ப வசதிகள், ஸ்டீரியோ ஹெட்செட், ஸ்பீக்கர் போன்,எப்.எம். ரேடியோ ஆகியவை உள்ளன. 

இதன் விலை ரூ.6,000க்கும் குறைவாகத்தான் இருக்கும்

ராவணன் - சினிமா விமர்சனம்

ராமாயணம்” விஞ்ஞான யுகத்தில் நடப்பது மாதிரியான கதை...

கட்டப் பஞ்சாயத்துக்கள் நடத்தி ஊரையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் விக்ரம். ஒரே தங்கை பிரியாமணி உயர் சாதி இளைஞனை காதலிக்கிறார். இரு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடக்கையில் மண மேடையில் அசம்பாவிதம். என் கவுண்டர் போலீஸ் சூப்பிரண்டு பிருதிவிராஜ் மண்டபத்தில் புகுந்து விக்ரமை சுடுகிறார். பிரியாமணியை போலீசார் இழுத்து சென்று கற்பழிக்கின்றனர். அவமானத்தில் அவர் தற்கொலை செய்கிறார்.

பழிதீர்க்க பிருதிவிராஜ் மனைவி ஐஸ்வர்ராயை விக்ரம் கடத்தி காட்டுக்குள் வைக்கிறார். அவரை மீட்க போலீஸ் படையுடன் பிருதிவிராஜ் காட்டில் நுழைகிறார். அங்கு இருவருக்கும் நடக்கும் யுத்தமும் ஐஸ்வர்யாராய் மீட்கப்பட்டாரா என்பதும் கிளைமாக்ஸ்.

முரட்டுத்தனமாக இருவருக்குள் நடக்கும் மோதலில் கவித்துவமான காதலை வைத்து இதயங்களை கனக்க செய்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

போலீசாரை விக்ரம் உயிரோடு எரித்து கொல்வது போல் எதிர்பார்ப்போடு கதை ஆரம்பிக்கிறது. படகில் செல்லும் ஐஸ்வர்யாராயை கடத்தியதும் சூடு பிடிக்கிறது. பிறகு போலீஸ் சேசிங் சண்டை என நீள்கிறது.

கட்டுமஸ்தான முரடனுக்குள் விக்ரம் வாழ்கிறார். டப டப வென்ற கூச்சலுடன் மண்டையில் அடித்து எதிரிகளை ஆவேசமாக துவம்சம் செய்கையிலும் ஐஸ்வர்யாராயை கை கால்கள் கட்டி இம்சிப்பதிலும் அசல் ராவணனாகவே தெரிகிறார். ஐஸ்வர்யாராயை சுட்டுக் கொல்ல துணிவது திக்.

ஐஸ் அழகில் கிறங்குவது அவரை தொடாமலேயே ரசிப்பது அழுத்தமானவை. காட்டில் என்னுடனேயே இருந்து விடுகிறாயா என கேட்கும் ஏக்கமும் பிருதிவிராஜ் மேல் காட்டும் பொறாமையும் நடிப்பில் உச்சம் தொடுபவை...

சந்தேகித்த கணவனை உதறி விட்டு ஐஸ்வர்யாராய் காட்டுக்குள் திரும்பி வந்ததை பார்த்து உருகுவதில் உயிரைத் தொடுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் வசன உரையாடல் ஜீவன். தொங்கு பாலத்தில் பிருதிவிராஜுடன் மோதும் சண்டை காட்சி சீட் நுணிக்கு இழுக்கிறது.

ஐஸ்வர்யாராய், அழகிலும் விக்ரமுடன் போட்டி போடும் நடிப்பிலும் ஜொலிக்கிறார். மழையில் சகதி காட்டில் எதிரிகளிடம் சிக்கி ஜீவமரண போராட்டம் நடத்துகிறார். குழிகள், குகைகள் சறுக்கு பாறைகளில் ஏறி இறங்கி நிறைய மெனக்கட்டுள்ளார். கணவன் சந்தேகத்தில் உடைவதும் விக்ரமுக்குள் ராமன் இருப்பதை உணர்ந்து காப்பாற்ற துடிப்பதும் வலுவானவை..

பிருதிவிராஜ் மிடுக்கான வில்லன் போலீஸ். விக்ரம் அண்ணனாக பிரபு, தங்கையாக பிரியாமணி, தம்பியாக முன்னா வலுவான கேரக்டர்கள். வன ஊழியராக வரும் கார்த்திக் கலகலப்பு.... ராசாத்தி என்ற அரவாணியாக வையாபுரி வருகிறார்.

ஏ.ஆர். ரகுமான் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் நீர் வீழ்ச்சி, பசுமைகளை அள்ளி கண்களில்அப்பும் சந்தோஷ் சிவன், மணிகண்டன் ஒளிப்பதிவும் தூக்கி நிறுத்துகின்றன.


விக்ரமின் கட்ட பஞ்சாயத்துகளும் அங்கு வசிக்கும் மக்களும் வட இந்திய சாயலில் தமிழுக்கு அன்னியப்படுகின்றனர். ஆரம்ப சீன்கள் பிரமாண்டத்துக்குள் மெதுவாய் நகர்கிறது. ஆனாலும் இடைவேளைக்கு பிறகு வரும் விறு விறுப்பும் முத்திரை பதிக்கும் கிளைமாக்சும் குறைகளை மறக்கடிக்க செய்கின்றன.

மணிரத்னம் கட்டிய வலுவான ராவண ராஜ்ஜியம்.


Wednesday, 16 June 2010

தெரிந்து கொள்ளுங்கள்

உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி)

1.எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.

2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.

3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.

4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.

5.தவளகிரி நேபாளம் 26,810.

6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.

8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.

10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11.குக் நியூசிலாந்து 12,340.

தெரிந்து கொள்ளுங்கள்_3

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.


30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்.

தெரிந்து கொள்ளுங்கள்_2

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை.இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.


தெரிந்து கொள்ளுங்கள்_1

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Cointained Underwater Breathing Apparatus]

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

உலகின் நீளமான நதிகள்

நாடுகள்,நீளம்(மைல்கள்)
. 1.நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2.அமேசன் தென் அமெரிக்கா 4000.

3.சாங்சியாங் சீனா 3964.

4.ஹுவாங்கோ சீனா 3395.

5.ஒப் ரஷ்யா 3362.

6.ஆமூர் ரஷ்யா 2744.

7.லீனா ரஷ்யா 2374.

8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.

9.மீகாங் இந்தோ-சீனா 2600.

10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11.எனிசேய் ரஷ்யா 2543.

12.பரானா தென் அமெரிக்கா 2485.

13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14.மிசெளரி ரஷ்யா 2315.

15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.

பொது அறிவு

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா