tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Sunday, 12 June 2011

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.



இந்த இணைய Newspaper Map பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Thursday, 2 June 2011

இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு,,,,,,,,,?

இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு,,,,,,,,,?
 திமுக தலைவர் மு. கருணாநிதியின் அக்கா பேரனான தயாநிதி மாறன் 2004 ஜூன் முதல் 2007 மே வரையில் மத்திய அரசில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கருணாநிதி குடும்பத்தில் ஹிந்தி மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர்தான் கருணாநிதிக்கும் சோனியாவுக்கும் இடையில் கண்களாகவும் காதுகளாகவும் - தொடர்பாளராக - செயல்பட்டார். இளமையும் துடிப்பும் மிக்க தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார். அந்தக் கூட்டணியில் திமுகவின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்டது.  அப்போது மாறன் எவ்வளவு செல்வாக்குடன் திகழ்ந்தார் என்பதற்கு சான்று வேண்டுமா? டி.டி.எச். நிறுவனத்தில் ரத்தன் டாடாவுக்கு இருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பங்கைத் தங்களுடைய குடும்ப நிறுவனத்துக்குத் தர வேண்டும், இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரத்தன் டாடாவையே மிரட்டினார் என்று பேசப்பட்டது. அத்தோடு மட்டும் அல்ல, நான் மிரட்டினேன் என்பதை வெளியில் சொல்லக்கூடாது என்று கூடுதலாக வேறு மிரட்டியிருக்கிறார்.  அப்படி இருந்த மாறன் திடீரென கோபுரத்திலிருந்து குப்பைமேட்டுக்கு வந்துவிட்டார். எல்லாம் குடும்ப ஊடகங்கள் மிதமிஞ்சிய கர்வத்தில் செய்த கோளாறுதான். தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் யார் என்று வாசகர்களிடையே கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி, அதில் கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரிக்கு மு.க. ஸ்டாலினைவிட செல்வாக்கு மிகவும் குறைவு என்று முடிவை வெளியிட்டது.  இந்த முடிவு வெளியான 9.5.2007-ல் மதுரையில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. கலாநிதி மாறனின் தினகரன் பத்திரிகை அலுவலகத்துக்குள் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ஒரு கும்பல் புகுந்து அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி, பொருள்களைச் சேதப்படுத்தி வன்முறையில் இறங்கியது. அதில் அப்பாவிகளான 3 பேர் உயிரிழந்தனர். கருணாநிதி உடனே அழகிரிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தயாநிதி மாறனை மத்திய அரசிலிருந்து விலக்கினார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல்களைச் சேகரித்தது.  மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. தயாநிதி மாறன் துறைக்கு ஆ. ராசா அமைச்சரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத்தொடர்புத்துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.  இதற்கிடையே 2009-ல் மக்களவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப்பட்டது. மகன்களுக்கும் அக்கா பேரன்களுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தி மீண்டும் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டினார் கருணாநிதி. அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் இக்காட்சியைக் காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது, கண்கள் பனிக்கின்றன என்று உருகினார் கருணாநிதி. ஒரு வேளை சி.பி.ஐ.யின் அந்த கடிதத்தைக் காட்டித்தான் அக்கா பேரன்களை வழிக்குக் கொண்டுவந்தாரோ என்னவோ?  2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத்தகவல் தொடர்புத்துறையைப் பெற தயாநிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்றுவரை அந்தப்பதவியில் நீடிக்கிறார்.  குடும்பத்துக்குள் பூசல் தணிந்துவிட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவனிக்கப்படாமல் தொலைத்தகவல் தொடர்புத்துறையில் எங்கோ தூங்குகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ. ராசா பதவியை ராஜிநாமா செய்தார். கபில் சிபல் அத்துறை அமைச்சரானார். அன்றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மாவே இருக்கிறார்.  ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.  எங்காவது ஊழல் நடந்தால் கணமும் தாமதிக்காமல் மிகத் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டும் யோகாசன குரு பாபா ராம்தேவுக்குக் கடிதம் எழுதுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.  தயாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் சோனியா காந்தியோ இன்னமும் ஒருபடி மேலேபோய், ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது - அதாவது மற்றவர்களின் ஊழலை - சகித்துக்கொள்ளவே முடியாது என்பதை அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.  ஊழலுக்கு எதிராக சோனியா விடுத்துள்ள போர்ப்பரணியும், காலதாமதம் செய்யாமல் ஊழலை ஒழித்தே தீருவேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் செய்துள்ள கர்ஜனையும் நம்மை விலா நோகச் சிரிக்க வைக்கின்றன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியவரை எதிரில் வைத்துக் கொண்டே இவர்கள் செய்யும் அட்டகாச அறிவிப்புகளைக் கண்டு வேறு என்னதான் செய்வது?                                                                                                                                                                             தயாநிதி மாறன் கடந்த சில நாள்களில் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியே சந்தித்து நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. ஊழல் செய்தவரைப் போலவே இவர்களுக்கும் வெட்கம் இல்லை என்று தெரிகிறது.



 


மாற்று எரிபொருள் இருக்க பெட்ரோல் இறக்குமதி ஏன்?

JUNE 2, "எத்தனால்" இது கரும்பு, மக்காசோளம், போன்றவற்றில் இருந்து தாயாரிக்கப்படுகிறது.

இதை பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக உபயோகிக்கலாம். 

இன்னும் சொல்லப்போனால் இது பெட்ரொலை விட சிறந்தது என்றே சொல்லாம். அதுமட்டுமல்லாது இதன் விலையோ மிக குறைவு.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் இன்றைய இந்தியாவில் "எத்தனால்" உற்பத்தி 4,80,000 டன்தான்.

"எத்தனால்" உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.

எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் "எத்தனால் பம்ப்" தனியாக இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் "எத்தனாலைக்" கலந்து கொள்ளலாம். "எத்தனாலில்" மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு.

"எத்தனாலின்" விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, "எத்தனால்" அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.

24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம்.

அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.

Monday, 30 May 2011

இலவச கணினி wallpapers டவுன்லோட்









இலவச கணினி wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்

கணினியில் வால் பேப்பர்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அனைவரும் நம்முடைய கணினியின் வால்பேப்பர்களை அடிக்கடி மாற்றி அதை  நம் கணினியில் பார்த்து ரசிப்போம். இப்படி அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றி ரசிப்பவரா நீங்கள் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. இணையத்தில் வால்பேப்பர்கள் இலவசமாக வழங்க நிறைய இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த இருபது தளங்களை இங்கு வெளியிடுகிறேன்.



இணையத்தில் மிக அதிகளவிலான இலவச வால்பேப்பர்களை கொண்டு உள்ளது இந்த தளம். இது தான் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய பிரபலமான தளமாகும். இதில் ஆயிரகணக்கான வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான வால்பேப்பர்களை நீங்களே தேடி கொள்ளலாம்.


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இந்த தளத்தில் 3D வால்பேப்பர்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.

Wall Paper Stock

தளத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே இந்த தளத்தில் வால்பேப்பர்கள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன. இந்த தளத்திலும் நமக்கு தேவையான குறிச்சொல்லை கொடுத்து நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. இந்த தளத்தில் நம்முடைய வால்பேப்பர்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிரலாம்.


இந்த தளத்தில் இயற்க்கை சம்பந்தமான வால்பேப்பர்கள் மிக அற்ப்புதம். பார்த்தவுடனே டவுன்லோட் செய்ய தூண்டும் அளவிற்கு வால்பேப்பர்கள் மிக அழகு. இதிலும் உங்கள் கணினி திரையின் அளவை கொடுத்து அதற்கேற்ற மாதிரி டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. 


இதில் உள்ள சிறப்பு அனிமேஷன் வால்பேப்பர்கள் அதிக அளவில் உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள முக்கியமான வசதிகள் இந்த தளத்திலும் உள்ளது. இது புதிய தளம் என்பதால் பல நவீன வால்பேப்பர்கள் இதில் அடங்கி உள்ளது.


இந்த தளம் வால்பேப்பருக்கான தளமில்லை ஆனால் மிக சிறந்த 15 வால்பேப்பர்கள் இதில் ஒரு பிரிவில் உள்ளது. இந்த 15 வால்பேப்பர்களும் உலகளவில் மிக பிரபலமானவை.



இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் இலவசமாக கிடைக்கிறது. இதில் உள்ள வால்பேப்பர்கள் அனைத்தும் கேமரா மூலம் எடுக்கப்பட்டவையே. மற்றும் இந்த தளத்தில் ஒவ்வொரு வால்பேப்பர்களுக்கும் தனி தனியே Description காணப்படும். இந்த தளத்திலும் பல அழகான இயற்க்கை காட்சி வால்பேப்பர்கள் காணப்படுகின்றன.


இது ஒரு மிக சிறிய தளமாகும். இந்த தளத்திலும் நமக்கு தேவையான பிரிவில் இருந்து வால்பேப்பர்களை தேடி பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். 


இந்த தளத்தில் பல தரமான வால்பேப்பர்கள் கிடைக்கும். இந்த தளத்தில் ஸ்க்ரீன் சேவர்களும் இலவசமாக கிடைக்கும். இந்த தளத்தில் கூகுள் அட்சென்ஸ் நிறுவி உள்ளதால் வால்பேப்பர்களின் உண்மையான லிங்கை கண்டறிந்து டவுன்லோட் செய்து கொள்ளவும். 


இதுவும் வால்பேப்பர்களை டவுன்லோட் செய்ய மிகப்பெரிய தளமாகும். இந்த தளம் என்னை மிகவும் கவர்ந்தது ஏனென்றால் இந்த தளத்தில் இந்த வால்பேப்பர் எடுத்த விதம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் எந்த கேமராவில் இருந்து எடுக்கப்பட்டது எடுத்தவர் யார் போன்ற அனைத்து செய்திகளும் இதில் உள்ளது. இந்த தளத்திலும் நம் கணினி திரைக்கு ஏற்ற அளவில் வால்பேப்பர் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


நீங்கள் வால்பேப்பர்களின் தீவிர ரசிகர் என்றால் இந்த தளமும் உங்களை வெகுவாக கவரும். இந்த தளத்திலும் இலவச ஸ்க்ரீன் சேவர்களும் கிடைக்கும். இதில் வால்பேப்பர்கள் 30 க்கும் மேற்ப்பட்ட பிரிவுகளாக பிரித்து சேமித்து வைக்கப்பட்டுள்ளன. 


இந்த தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. 


இந்த தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி பயன்படுத்தி கொள்ளலாம். 


பார்ப்பதற்கு எதுவுமே இல்லாதது போன்று காணப்படும் கீழே உள்ள பிரிவுகளை க்ளிக் செய்தால் வால்பேப்பர்கள் நிரந்து காணப்படும். 


இந்த தளம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தளமாகும். இந்த தளத்தில் பல அழகான பாதுகாப்பான வால்பேப்பர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில் வால்பேப்பர்கள் விண்டோஸ் 7 கணினிகளுக்கு என்று போட்டிருக்கும் ஆனால் அந்த வால்பேப்பர்களை 1995 இருந்து windows7 வரை உள்ள அனைத்து கணினிகளுக்கும் உபயோகிக்கலாம். 


இந்த தளத்தை வால்பேப்பர்களின் குடோன் என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த தளத்தில் வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கிறது. இந்த தளத்தில் சுமார் 27000 வால்பேப்பர்கள் குவிந்து காணப்படுகின்றன. மற்றும் அந்த 27000 வால்பேப்பர்களும் 949 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


இந்த தளம் செல்லும் அனைத்து ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில் பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின் வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும். மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.


இந்த தளத்திலும் சுமார் 20000 வால்பேப்பர்கள் நிரம்பி உள்ளது. மற்றும் மேற்கூறிய தளங்களில் உள்ள அனைத்து வசதியும் இந்த தளத்தில் உள்ளது. மற்றும் பலவேறு பிரிவுகளில் வால்பேப்பர்கள் பிரித்து சேமிக்கப்பட்டுள்ளன. 

கணினியின் இணைய வேகத்தை அறிந்து கொள்ள சிறந்த 25 தளங்கள்


நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆகவே நம் கணினியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் இணையத்தில் ஏராளம். அதில் சிறந்த 25 தளங்களை பற்றி கீழே காண்போம்.
கணினியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது. மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும்.  இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இந்த தளத்தில் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம். உங்கள் இருப்பிடத்திற்கு பக்கத்தில் உள்ள Myspeed சர்வரை தேர்ந்தெடுத்து துல்லியமான முடிவை அறிந்து கொள்ளுங்கள்.

கணினி menporutkalai  இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் பிகப்பெரிய தளமான CNET வழங்கும் சேவையாகும்.

இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன. 

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

இதிலும் சுலபமாக இணைய வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

12. Test My Speed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

13. Speed Test tool
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

14. WUGNET - Speed Test
இந்த தளத்தில் துல்லியமாக நம் கணினியின் இணையவேகத்தை அறிந்து கொள்ளலாம்.

15. Internet Broadband Speed Checkup Tool
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

16. MSN Internet Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

17. Numion - YourSpeed and SiteSpeed
இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

18. Internet DSL Speed Test
இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.

19. Broadband Speedtest on ZDNet UK
இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

22. Internet Performance and Speed Test
இந்த தளத்திலும் நம் கணினியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் டௌன்லோட் வேகம்,அப்லோட் வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.

இந்த தளமும் சற்று வித்தியாசமாக நம்முடைய நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப இணைய வேகத்தை கணக்கிடுகிறது.

இந்த தளமும் அதிகம் உபயோகப் படுத்தப்படும் இணையதளமாகும்.