tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Tuesday, 29 March 2011

System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்) வணக்கம் நண்பர்களே! தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்.... என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது..... அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore என்னும் ஒரு வழி உள்ளது... இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..! System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்.... இதை எப்படி மேற்கொள்வது..... முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode என்பதை தெர்ந்துடுங்கள்... தற்போது...தாங்கள் கணினியில் Control Panelலை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Click செய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்... அதில் மூன்று Optionகள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும். அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date).. மிக்க நன்றி!.......நண்பர்களே...தாங்களுக்கு பிடித்து இருந்தால் தாங்கள் கருத்துகளை கூறாலாம்.... Image Help

     தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.

     நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.

     இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!



     நான் தற்போது தாங்களுக்கு இந்த மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறேன்...முதலில் இந்த மென்பொருளை தங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பின்னர் இதை இயக்குங்கள்...தற்போது தாங்களுக்கு பைலின் வகை படுத்த ஓர் விண்டோ தோன்றும். இதில் தாங்கள் தேடயிருக்கும் பைலின் வகையை தேர்வு செய்யவும்..

பின்னர் NEXT என்பதை அழுத்தவும்...தற்போது தாங்கள் தேட இருக்கும் பைலின் இருப்பிடத்தை தேர்வுசெய்யவு. உதரணமாக நான் எனது பென்டிரைபில் அழிந்த பைல்களை தேட எண்ணுகிறேன் என்றால். On my video card or ipod என்பதை தேர்வு செய்ய வேண்டும்...இல்லை எனக்கு அனைத்து டிரைவுகளிலும் தேட வேண்டும் என்றால் I'am not sure என்பதை தேர்வு செய்யவும்...

     பின்னர் Next என்பதை தேர்வு செய்ய வேண்டும்...தற்போது தோன்றும் திரையில் கீழே Enable Deep Scan என இருக்கிறதா! இது எதற்கு என்றால் நன்கு ஆழமாக தேட வேண்டும் என்றால் இதன் அருகில் இருக்கும் பெட்டியில் டிக் குறியீட்டை இடவும்...

     பின்னர் Start என்பதை அழுத்துங்கள். சிறிது நேரம் காத்துயிருக்கவும்...தற்போது தேடப்பட்ட பைல்கள் அனைத்தும் காட்டப்படும்...
இதில் தாங்களுக்கு தேவைப்படும் படங்கள் தேர்வு செய்து. பின்னர் கடைசியாக  Recover என்பதை தரவும்....அவ்வளவு தான்...வேலை முடிந்தது...

மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
Download this Software Click Down:
Download Link(1)
Download Link (2)
Download Link(3)

தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா!



System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்)

வணக்கம் நண்பர்களே!   தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்....

என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது.....


அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore
என்னும் ஒரு வழி உள்ளது...

இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..!




System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்....


இதை எப்படி மேற்கொள்வது.....

முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode  என்பதை தெர்ந்துடுங்கள்...

தற்போது...தாங்கள் கணினியில் Control Panelலை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Click செய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்...

அதில் மூன்று Optionகள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும்.

அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date)..

மிக்க நன்றி!.......நண்பர்களே...தாங்களுக்கு பிடித்து இருந்தால் தாங்கள் கருத்துகளை கூறாலாம்....
Image Help



கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்

*****அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்....

*****இதற்க்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம்...

*****நான் தற்போது கூற இருப்பது வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்கும் பத்து வழிகளை தான்..

*10.REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.

*09.தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக்கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.

*08.அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன..ஏன் நானே! இது மாறி பாதிக்கப்பட்டுள்ளேன்.

*07.இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது...தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை...

*****நம்பிக்கை வாய்ந்த தளங்களை காண இங்கு நம்பிக்கை வாய்ந்த தளங்கள் பதிவிறக்க கிளிக் செய்யவும்.

*06.இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள்..மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும்...தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது..இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ்,மால்வேர்,டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. ஆதாலல் இதை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்..

*05.தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டிவைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்

*04.தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP)போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும்...மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்துவிடவும்.

*03.தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALLயை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள்...ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODOZONEALARAM போன்றவை.

*02.தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்துவிடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை நண்பர்களே!

*01.தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! பின்னர்....கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திடவேண்டும்...

*****இலவச ஆவஸ்ட் (AVAST FREE ANTIVIRUES) சிறந்த ஆண்டிவைரஸை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்...

*****இதலாம் சரி...தங்கள் கணினியில் வைரஸ் எப்படியோ நுழைந்து, கணினியை முடக்குவிட்டது...என்ன பண்ணுவிங்க....ம்ம்ம்ம்? ஹாலோ உங்கள தான்..ம்ம் தெரிந்துக்கொள்ள இங்கு தங்கள் கணினியில் வைரஸ் வந்து விட்டதா! கிளிக் செய்யவும்...

ஜீமெயில் வழங்கும் இலவச ஆன்லைன் சேமிப்பகம்/Gmail Drive

Drive

     *நண்பர்களே! ஓர் சிறந்த சேவை தங்களுக்கு அதவும் ஜீமெயில் நிறுவனத்தால் வழங்கப்படும் ஓர் சிறந்த சேவைகளுள் ஒன்று தான் இது.
இதை சிலர் அறிந்துயிருப்பிர்கள், அறியாதவர்களுக்காக இந்த பதிப்பு.
     *நம் அன்றாட கணினி வாழ்வில் பொதுவாக எழும் ஓர் பிரச்சனை சேமிப்பகம் தான். அரம்பத்தில் நாம் வாங்கிய சேமிப்பகம் (HARD DISK) தங்களுக்கு போதுமானது என தோன்றியிருக்கும். ஆனால் நாளடைவில் நமது சேமிப்பகத்தின்(HARD DISK) கொள்ளலவில் (SPACE) பாற்றகுறை ஏற்ப்படும்.



     *இந்த கவலை போக்க மிக அருமையான சேவை தான் இந்த ஜீமெயில்(GMAIL) வழங்கும் இலவச ஆன்லைன் FREE ONLINE SPACEசேமிப்பகம்...இதை பெற தாங்கள் ஒன்றும் பணமோ அல்லது அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம். இதை பெற தாங்கள் ஜீமெயில்(GMAIL) அக்கொண்ட் வைத்துயிருந்தால் போதும்.
     *இதை பெறுவது எப்படி! சப்ப, மேட்டருங்க! இங்கு GMail-Drive-Download கிளிக் செய்து இதற்கான சிறிய இணைப்பு பைலை பதிவிறக்கிக்கொள்ளுங்கள்...இது சொல்லவேண்டுமென்றால், ஓர் மிக சிறிய மென்பொருளை போன்று தான்..

*இதை தாங்கள், கணினியில் நிறுவியவுடனே,
*தங்கள் MY COMPUTER விண்டோவில் C-DRIVE, D-DRIVE போன்று GMAIL DRIVE என வந்துயிருப்பதை தாங்கள் காணலாம்.
*பின்னர் தாங்கள் GMAIL DRIVE என்பதில் ரைட் கிளிக் செய்தால் Log In என்றுயிருக்கும்,
*அதில் தங்கள் Mail Id மற்றும் PASSWORD தந்து Log In செய்யவும்...அவ்வளவு தான்...முடிந்தது...

மேலும் தெரிந்து கொள்ள ஆங்கிலத்தில்:
Gmail-Disk

கோடையையும் குளுகுளுவென்று ஆக்க இதுபோல் நம்மால் முடிந்ததைச் செய்யலாமே!


கோடை காலத்தில் வியர்வை நாற்றம் வராமல் தவிர்க்க குளிக்கும் நீரில் சிறிது யூடிகோலோன் அல்லது பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம். வியர்வை நாற்றம் வருகிறதே என்று அளவுக்கு அதிகமாக பவுடர் உபயோகிப்பது நல்லதல்ல. கோடையில் எவ்வளவுக்கு எவ்வளவு பவுடர் உபயோகிப்பதைக் குறைக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. கோடையில் அதிகம் வியர்ப்பதால் பவுடர் போடும் போது சரும துவாரங்களில் பவுடர் அடைத்துக் கொள்வதுடன் வியர்வை அழுக்குகள் சேர்வதால் முகப்பரு மற்றும் உஷ்ணக் கட்டிகள் வர வாய்ப்புகள் அதிகமாகிறது.

வெயில் நேரத்தில் செல்லும் போது கூடுமானவரை சூரிய ஒளி நேராக உடம்பைத் தாக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் அணிய ஏற்றவை பருத்தி ஆடைகளே. பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சிக் கொள்வதோடு வெப்பம் உடலை அதிகம் தாக்காமல் பாதுகாக்கிறது.
கோடையில் உட்கொள்ளும் உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். நாள் ஒன்றுக்கு பத்து டம்ளருக்கு குறையாமல் தண்ணீர் அருந்துவது நல்லது. நன்கு கனிந்த பழங்களாக வாங்கி வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அருந்துவது நல்லது. இளநீர், நீர்மோர், தர்பூசணி, முலாம் பழம் போன்றவைகள் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க ஏற்றவை.
மாலை நேரத்தில் சூடாக காபி, டீ அருந்துவதற்குப் பதிலாக பழச்சாறு அல்லது ப்ரூட் சாலட் செய்து சாப்பிடலாம். மதியம் உணவின் போது வாரத்திற்கு மூன்று முறையாவது வெள்ளரிக்காயை சாலட்டாகவோ கூட்டு தயாரித்தோ தயிர்ப்பச்சடி செய்தோ சாப்பிடலாம்.
பொதுவாக கோடையில் வெப்பத்தைத் தணிக்க வீட்டைச் சுற்றிலும் குளிர்ந்த தண்ணீர் தெளித்து வைக்கலாம். வீட்டிற்கு மேல் மொட்டை மாடியானால் தளத்தில் குளிர்ந்த தண்ணீர் தெளிப்பது கோடையின் கடுமையைச் சிறிது தணிக்கும்.
கோடையையும் குளுகுளுவென்று ஆக்க இதுபோல் நம்மால் முடிந்ததைச் செய்யலாமே!
சுகாதாரமாகவும், சுத்தமாகவும் உணவை உண்ணுவதைப் போல் அந்த உணவை தயாரிப்பதிலும், பாதுகாப்பதிலும் சுகாதாரத்தை கடைபிடிக்கவேண்டும். இதில் அதிக அக்கறை செலுத்தவேண்டியது, அந்த வீட்டின் குடும்பத்தலைவிதான். அவர் சின்னச் சின்ன விஷயங்களிலும் அக்கறை செலுத்தினால் அது குடும்பத்திற்கு பெரிய அளவில் ஆரோக்கியத்தை அளிக்கும்.
காய்கறிகளை எடுத்துக்கொண்டால், முதலில் அதை கழுவுவதில் கவனம் செலுத்தவேண்டும். பின்பு அவைகளை பிரிஜ்ஜில் வைத்தால் எந்த அளவு டெம்பரேச்சரில் வைக்கவேண்டும்? போன்றவைகளில் கூட கவனம் செலுத்தப்பட வேண்டும். மளிகை சாமான்களாக இருந்தாலும், காய்கறி, பழங்களாக இருந்தாலும் அவைகளை எந்த கடையில் இருந்து வாங்குகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். ஏன் என்றால் சுத்தமான, சுகாதாரமான கடைகளில் வாங்கும் பொருட்களே சுத்தமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
கீரை மற்றும் கிழங்கு வகைகளில் மண் இருக்கும். தக்காளி போன்றவைகளில் மண் இருக்காது. அதனால் இவைகளை சேர்த்து வைக்காமல் தனித்தனியாக வைக்க வேண்டும். வாங்கும் போதும் ஒன்றாக ஒரே கவரில் போட்டு வாங்கக்கூடாது. கீரை, மல்லி இலை போன்றவைகளை வாங்கும் போதே வேர் பகுதியை அப்புறப்படுத்தி விடவேண்டும். வாங்கும் போது அப்புறப்படுத்த முடியாவிட்டாலும், வாங்கியதும் அப்புறப் படுத்திவிட்டுத்தான் பிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
கேரட்டை பச்சையாக கடித்து சாப்பிடும் பழக்கம் பலரிடமும் உள்ளது. அப்படி சாப்பிடுபவர்கள் கேரட்டை அழுத்தி தேய்த்து கழுவினால் மட்டும் போதாது. அவைகளின் மேல் தோலை கத்தியால் சுரண்டி எடுத்து விட்டே சாப்பிடவேண்டும். அப்புறப் படுத்தப்படும் தோல் பகுதியில் ஓரளவு சத்துக்கள் வீண் ஆனாலும் அதில் இருக்கும் கிருமிநாசினி தன்மை நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கிழங்கு வகைகளில் இருக்கும் மண்ணை நீக்குவதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
காய்கறிகளை நறுக்கி அதிக நேரம் வைத்து சமைத்து சாப்பிடுவதில் எந்த பலனும் இல்லை. காலை 10-மணிக்கு நறுக்கிவைக்கும் காய்கறியை மாலை நேரம் வரை வைத்திருந்து சாப்பிடுவது தவிர்க்கப்படவேண்டும். நறுக்காத காய்கறிகளை 10-15 நிமிடங்கள் வரை தண்ணீரில் முக்கி வைக்கவேண்டும். பின்பு அழுத்தி தேய்த்துவிட்டு அவைகளை பைப்பின் அடியில் பிடித்து மீண்டும் ஒரு முறை கழுவி பயன்படுத்துவது மிக அவசியம்.
காய்கறிகளை நறுக்குவதற்கென்றும், மீன், இறைச்சியை நறுக்குவதற்கும் தனித்தனி கட்டிங் போர்டுகளை வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஒரே போர்டில் வைத்து நறுக்குவது ஆரோக்கியமானதல்ல. இவைகளை சமைப்பதற்கும் தனித்தனி பாத்திரங்கள் அவசியம். கத்திகளும் தனித்தனியாக இருக்கவேண்டும். காய்கறி நறுக்கிய கத்தியை கேக் வெட்டக்கூட பயன்படுத்தக்கூடாது.
உணவுப் பொருட்களை வேக வைக்கும் போது கூட கவனிக்க வேண்டிய விஷயங்கள் உண்டு. தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், தீயை குறைத்துவிடவேண்டும். பெருமளவு தீயில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் வேகுவதும் நல்லதல்ல. பச்சைக் காய்கறிகளை வேகவைக்கும் நீரை வீணாக்காமல் அதை சாம்பார் அல்லது ரசத்தில் சேர்க்கவேண்டும். கீரை வகைகளை வேக வைக்க தண்ணீர் விடக்கூடாது. தண்ணீரை தெளிக்க மட்டுமே வேண்டும். நேந்திரன் பழத்தை வேகவைக்க தண்ணீரை பயன்படுத்தாமல், அதனை ஆவியில் தான் வேகவைக்க வேண்டும்.

மக்கள் ஆட்சி நடகுதுங்கோ..........












ப.திருமாவேலன்
படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன்












ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!



42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.


1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!



குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.


ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.


ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.


கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.


கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.


அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.


பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!


டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!


கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
தி.மு.க-வின் முன்னா
ள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!


ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தஅண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!


டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும்.

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!