*****அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்....
*****இதற்க்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம்...
*****நான் தற்போது கூற இருப்பது வைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்கும் பத்து வழிகளை தான்..
*10.REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.
*09.தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக்கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.*08.அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன..ஏன் நானே! இது மாறி பாதிக்கப்பட்டுள்ளேன்.
*07.இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது...தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை...
*****நம்பிக்கை வாய்ந்த தளங்களை காண இங்கு நம்பிக்கை வாய்ந்த தளங்கள் பதிவிறக்க கிளிக் செய்யவும்.
*06.இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள்..மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும்...தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது..இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ்,மால்வேர்,டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. ஆதாலல் இதை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்..
*05.தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டிவைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்
*04.தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP)போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும்...மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்துவிடவும்.
*03.தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALLயை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள்...ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.
*02.தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்துவிடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை நண்பர்களே!
*01.தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! பின்னர்....கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திடவேண்டும்...
*****இலவச ஆவஸ்ட் (AVAST FREE ANTIVIRUES) சிறந்த ஆண்டிவைரஸை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்...
*****இதலாம் சரி...தங்கள் கணினியில் வைரஸ் எப்படியோ நுழைந்து, கணினியை முடக்குவிட்டது...என்ன பண்ணுவிங்க....ம்ம்ம்ம்? ஹாலோ உங்கள தான்..ம்ம் தெரிந்துக்கொள்ள இங்கு தங்கள் கணினியில் வைரஸ் வந்து விட்டதா! கிளிக் செய்யவும்...
No comments:
Post a Comment