tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday, 21 April 2011

பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு





இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.

1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது.

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும் புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை www.virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனே அவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகி றீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.

24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

தண்ணீரில் மொபைல் விழுந்தால் ! ! !





நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறைகளுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு வருகையில், வைப்ரேஷன் ஏற்பட்டு தானாக, போன் தண்ணீரில் விழலாம்.
சில வேளைகளில் நம் அன்புச் செல்வங்களான குழந்தைகள், மொபைல் போனை எடுத்து, தண்ணீரில் போட்டு விளையாடலாம்.
இது போன்ற வேளைகளில் என்ன செய்திட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.

1.முதலாவதாக, மொபைல் போனில் எதனை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முடியுமோ, அவற்றை எல்லாம் பிரித்து எடுத்திடவும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் ஆகியவை இதில் அடங்கும்.

2. அடுத்து, மொபைல் போனில் எங்கெல்லாம் தண்ணீர் இருக்கும் என்று எண்ணுகிறீர்களோ, அங்கு சிறிய மெல்லிய துணி, அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு சுத்தம் செய்து, நீரை உறிஞ்சி எடுக்கவும். போனை முழுவதுமாக உலரச் செய்திடவும்.

3. ஹேர் ட்ரையர் ஒன்று இருந்தால், அதனை எடுத்து, மொபைல் போன் மீதாகப் பயன்படுத்தி, ஈரத்தை உலர்த்தவும். குறிப்பாக, பேட்டரி வைத்திடும் இடத்தில் உள்ள ஈரத்தை முழுமையாக நீக்கவும். இவ்வாறு உலர வைக்கையில், ஹேர் ட்ரையரை, மொபைல் போனுக்கு மிக அருகே கொண்டு செல்லக் கூடாது. அது மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். எனவே சற்று தள்ளி வைத்து, 20 முதல் 30 நிமிடம் வரை இவ்வாறு உலரவைக்கும் வேலையை மேற்கொள்ளவும்.

இந்த வேலையை மேற்கொள்கையில், மொபைல் போனை வெவ்வேறு நிலையில் வைத்து உலர வைக்கவும். இதனால் வெவ்வேறு இடங்களில் ஒட்டியிருக்கும் ஈரம் வெளியேறி உலரும்.

இதே போல பேட்டரி, சிம் கார்டு ஆகியவற்றில் உள்ள ஈரத்தையும் உலர வைக்கவும்.

நன்றாக உலர்ந்த பின்னர், காற்றோட்டமான இடத்தில் வெகுநேரம் வைத்த பின்னர், பேட்டரி, சிம் ஆகியவற்றைப் பொருத்தி இயக்கவும். அப்போதும் சரியாக இயங்கவில்லை எனில், இன்னும் சில மணி நேரம் காத்திருந்து, ஈரம் தானாக உலரும் வரைப் பொறுத்திருக்கவும். அதன் பின்னரும் இயங்கவில்லை எனில், மொபைல் போன் சரி செய்திடும் பணியாளரிடம் சென்று, நீரில் விழுந்ததை மறைக்காமல் கூறி, நீங்கள் மேற்கொண்ட செயல்களையும் கூறி சரி செய்திடச் சொல்லவும்.

ஏழை, பணக்காரர் என இரு இந்தியாவா? பட்டினிச் சாவு கண்டு சுப்ரீம் கோர்ட் கோபம்

புதுடில்லி: நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், ""ஊட்டச் சத்து குறைபாட்டை தீர்க்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதிப்பாடு கொண்டுள்ளது. பொது வினியோக முறையை முறைப்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன,'' என்றார்.

இதன்பின் நீதிபதிகள் கூறியதாவது: நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


நன்றி
-தினமலர் -

Wednesday, 20 April 2011

”கொக்கோ கோலா” _ஒரு நச்சுப் பானம்.

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.


தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்.
எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம் மட்டுமல்ல. எதைக் குடிப்பது – உண்பது – உடுத்துவது – பார்ப்பது – படிப்பது – கருதுவது – ரசிப்பது – நேசிப்பது என்ற அமெரிக்க வாழ்க்கை முறையின் – பண்பாட்டின் சின்னம். அத்தகைய அமெரிக்க தாகத்தை, ஏக்கத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்துவதே அதன்முதன்மைப் பணி.
கொக்கோ – கோலாவைப் போல அமெரிக்கப் பண்பாட்டினைப் பிரதிநிதித்துவம் செய்யும் பன்னாட்டு நிறுவனம் வேறு எதுவுமில்லை. ஹாலிவுட், வால்ட்-டிஸ்னி, மெக்டோனால்டு, ஃபோர்டு கார், பாப் – ராக்கிசை என பல அமெரிக்க வகை மாதிரிகளில் கோக் மட்டுமே நெடுங்காலமாய் அமெரிக்காவின் தூதுவனாய் உலகெங்கும் செல்வாக்குடன் இடைவிடாமல் சுற்றி வருகிறது. இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் கோக் அதற்கான சாதனையை முதலில் தான் அவதரித்த திருத்தலத்திலேயே செய்து காட்டியிருக்கிறது.
ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட  கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
_____________________________________________
இரண்டு அமெரிக்க சோடாக் கம்பெனிகள் உலகை ஆக்ரமித்த வரலாறு!
1886- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் ஜான் ஸ்டித் எனும் மருந்தாளுநர் கோக்கின் சோடா இனிப்பு கரைசலை உருவாக்கினார். அன்று நாளொன்றுக்கு 9 பாட்டில்கள் தலா 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோக், 2000ஆம் ஆண்டின் முதல் 4 மாத இலாபமாக மட்டும் 5000 கோடி ரூபாயை அள்ளியிருக்கிறது. மேலும் இன்று தனது சோடாக் கரைசலையும் கோக், கிளாசிக் கோக், காஃபின் இல்லாத கோக், டயட் கோக், செர்ரி கோக், ஃபேண்டா, ஸ்பிரிட், மிஸ்டர் பிப், மெல்லோ யெல்லோ என 25 வகைகளாய் பெருக்கியிருக்கிறது. இன்று அதன் சொத்து மதிப்பு சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய்.
1898ஆம் ஆண்டு பெப்சியின் சோடாக் கரைசலை கால்ப் ப்ராதம் என்ற மருந்தாளுநர் உருவாக்கினார். குளிர்பானம், நொறுக்குத் தீனி, உணவகங்கள் என்று பெப்சியின் பேரரசு 150 நாடுகளில் 4,80,000 ஊழியர்களுடன் நடந்து வருகிறது. சொத்துமதிப்பு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய்.
உலக குளிர்பான சந்தையில் 46 சதம் வருவாய் கோக்கிற்கும், 21 சதம் பெப்சிக்கும் போய்ச் சேருகிறது. இப்படி இரண்டு நிறுவனங்ளும் உலகின் தாகம் தீர்க்கும் தேவன்களாக, பல்லாயிரம் கோடி ரூபாயை ஆண்டுதோறும் சுருட்டி வருவது எப்படி சாத்தியமானது? நம்மூரில் தயாரிக்கப்படும் கலர் கோலி சோடாவின் கரைசலை விட பெப்சி – கோக்கின் கரைசல் அப்படி ஒன்றும் உயர்ந்ததல்ல. கார்பன் வாயு, இனிப்பு, வண்ணம், நீர் கொண்டு கலக்கப்படும் இக்கரைசல் தயாரிப்பதற்கு எளிதானதே. அதி உயர் தொழில்நுட்பமோ, ரகசியமோ எதுவும் கிடையாது. அதே சமயம் இந்தக் கோலாக்களில் இருக்கும் மற்ற வேதிப்பொருட்கள், போதை போல அடிமைப்படுத்தும் பொருட்கள் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது. இவற்றை கண்டுபிடிப்பு இரகசியம் என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் வெளியிட மறுக்கின்றன.
ஆனாலும் உலகெங்கும் சாதாரணத் தொழிலாக நடத்தி வந்த இத்தகைய சிறு குளிர்பான உற்பத்தியாளர்களை இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஒரு நூற்றாண்டாய் ஒழித்து விட்டன. இந்த இரண்டு கோலாக்களும் ஏதோ சொர்க்கத்தில் தயாரித்து அளிக்கப்படும் அழகான, தரமான அமுது என்ற சித்திரத்தையும் தமது வஞ்சகமான பிரச்சாரத்தால் ஏற்படுத்தி விடட்ன.
________________________________________________
கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு!
இதற்கு நமது இந்திய எடுத்துக்காட்டையே பார்க்கலாம். 77இல் ஜனதா அரசால் கோக் வெளியேற்றப்பட்ட பிறகு குளிர்பானச் சந்தையில் பார்லே நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. பார்லேயின் தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் போன்ற பானங்கள் அப்போது பிரபலமாக இருந்தன. 90களின் ஆரம்பத்தில் 60 சதவீத சந்தையைக் கைப்பற்றிய பார்வே நிறுவனம் கேம்பா கோலா, த்ரில், டபுள் கோலா போன்ற போட்டி பானங்களை எளிதில் வென்றது. இவை இந்திய அளவில் விற்கப்பட்ட பானங்கள். இது போக மாநில, வட்டார, உள்ளூர் அளவில் ஏராளமான பானங்கள் இருந்தன.
தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. விருதுநகரில் 1916இல் பழனியப்ப நாடாரால் துவங்கப்பட்ட காளிமார்க் 80கள் வரை 30 சதவீத தமிழக சந்தையை வைத்திருந்தது. மேலும் இந்திய அளவில் பழரச பானத்திற்கு கிராக்கி இருந்தது. பார்லேயின் ப்ரூட்டி, பயோமா இன்டஸ்ட்ரியின் ரசனா போன்றவை பழரச சந்தையில் ஆதிக்கம் செலுத்தின.
பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது. 1980களில் இருந்தே பெப்சி நிறுவனம் சில இந்திய தரகு முதலாளிகளின் உதவியுடன் இந்தியாவில் நுழைய முயன்று, இறுதியில் 1990ஆம் ஆண்டு வென்றது. 100 சதவீத பங்குகள் வைத்திருக்கவும், உள்நாட்டு பாட்டில் தொழிற்சாலைகளை வாங்கவும், காய்கனி, டப்பா உணவு ஏற்றுமதி செய்யவும்… என ஏராளமான சலுகைகள் இந்திய அரசால் பெப்சிக்கு வழங்கப்பட்டன. பெப்சியும் வந்த வேகத்தில் 20 சதவீத குளிர்பான சந்தையைக் கைப்பற்றியது.
இங்கிருந்து வெளியேற்றப்பட்ட கோக் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1993ஆம் ஆண்டு மீண்டும் குதித்தது. கோத்ரெஜ், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் கோக்குடன் கூட்டு சேர்ந்தன. சந்திரசாமியின் அரசியல் பினாமியான சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு கோக்கிற்கு அனுமதி வழங்கியது. இப்படியாக அமெரிக்காவின் இரண்டு சோடாக் கம்பெனிகள் வறண்டு போன இந்தியாவைக் குளிப்பாட்டி கொள்ளையடிக்கும் வேலையை ஆரம்பித்தன.
அன்றைய இந்தியாவின் குளிர்பான சந்தை 1200 கோடி ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஒரு இந்தியன் ஒராண்டுக்கு குடிக்கும் பாட்டில்கள் 3 மட்டுமே தனிநபர் சராசரியாய் இருந்தது. மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதம்தான். இன்றோ வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக மாறிவிட்டது. அன்று விற்பனையான குளிர்பான பாட்டில்கள் 276 கோடி, இன்று 350 கோடி பாட்டில்களாக உயர்ந்து விட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் இதை 1200 கோடிப் பாட்டில்களாக உயர்த்தப் போவதாக கோக்கும் – பெப்சியும் மார்தட்டி வருகின்றன.
இன்று குளிர்பானச் சந்தையில் ஏக போகம் வகிக்கும் நிலையை கோக்கும் – பெப்சியும் அடைந்துவிட்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆதாயங்களை நேரடியாகவும், சதி, ஏமாற்று, மிரட்டல், கைப்பற்றுதல், பிரம்மாண்டமான விளம்பர இயக்கம் என மறைமுகமாகவும் பயன்படுத்தி இந்த ஏகபோகம் எட்டப்பட்டது.
கோக் வருகைக்கு முன்பு இங்கே கோலா வகை பானங்களுக்கு வரி அதிகமாகவும், பழரச வகைகளுக்கு குறைவாகவும் இருந்தது. இந்தியாவில் பழவகை விளைச்சல் அதிகம் என்பதால் விவசாயத்துக்கு ஆதரவாக அரசால் இக்கொள்கை பின்பற்றப்பட்டது. பின்னர் காட் ஒப்பந்தப் படி கோலாவுக்கான வரி குறைக்கப்பட்டது. அதன் பின்பே கோலாக்களின் விற்பனை பழரசத்தை விட உயர்ந்தது. இப்படி அரசால் பெற்ற சலுகைகள் ஏராளம்.
அடுத்து 50% குளிர்பான சந்தையை வைத்திருந்த பார்லே நிறுவனத்தை இந்தியா வந்த ஆறே மாதங்களில் கோக் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதன் மூலம் 60 பாட்டில் தொழிலதிபர்களும், 2 இலட்சம் சில்லறை விற்பனையாளர்களும், நாடு தழுவிய வலுவான விற்பனை வலைப்பின்னலும் கோக்கிடம் சரணடைந்தன. தம்ஸ் அப்பும், லிம்காவும், கோக்கின் தயாரிப்பு என விற்கப்பட்டன. பார்லே நிறுவனத்தில் அதிபர் ரமேஷ் சவுகானும், கோக்கின் யானை பலத்துடன் போட்டியிட முடியாது எனத் தெரிந்து கொண்டு தனது நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்று விட்டார்.
மிகப்பெரும் தரகு முதலாளியான பார்லேவுக்கே கதி இதுதான் எனும்போது காளிமார்க் போன்ற சிறுமுதலாளிகள் என்ன செய்வார்கள்? தினத்தந்தியின் உள்ளூர் பதிப்பில் விளம்பரம், காடாத் துணி பேனர் விளம்பரம் என்றிருந்த காளிமார்க், அமெரிக்க சோடாக் கம்பெனிகளின் அதிரடியான வானொளி விளம்பரத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இப்படியாக கோக் – பெப்சி எனும் அமெரிக்க கழுகுகள் ஆளின்றி நாட்டைக் கவ்வ ஆரம்பித்தன.
இவ்விரு பன்னாட்டு நிறுவனங்களும் பிரம்மாண்டமான முதலீடு, மிக விரிவான உற்பத்தி – வலைப் பின்னல், குண்டு வெடிப்பைப் போன்ற விளம்பரங்கள் ஆகிய முப்பெரும் அஸ்திரங்கள் கொண்டு இந்தியாவில் வேரூன்றி விட்டன. இன்று குளிர்பான சந்தையில் 53 சதவீதம் கோக்கிடமும், 40 சதவீதம் பெப்சியிடமும் உள்ளன. சந்தையின் மதிப்பு 5 ஆயிரம் கோடி ரூபாய்.
______________________________________________________________
விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!
தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம் தெரியாது.
பிடித்த பொருள் கிடைக்க வில்லையென்றால் கிடைக்கும் பொருளை வாங்குவது நுகர்வோர் வழக்கம். அதன்படி தமது பானங்களை மட்டுமே கடைக்காரர் விற்க வேண்டும் என்பதை இந்நிறுவனங்கள் தமது வர்த்தகக் கொள்கையாக வைத்திருக்கின்றன. கடைக்காரருக்கு குளிர்பதன பெட்டியை மலிவு விலையில் அல்லது இலவசமாய் வழங்குவார்கள். முதல் மிச்சம் என கடைக்காரர் நினைப்பார். ஆனால் கோக் அல்லது பெப்சி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும், அதை விற்றே கடன் அடைக்க வேண்டும், அதனால் அதிகமாக அந்த பானங்களை இருப்பு வைக்க வேண்டும் என்ற சுழலில் தாம் சிக்குவோம் என்பதை அவர் அறியமாட்டார். மேலும் பெயர்ப் பலகைகள், சுவர்க்கடிகாரம், பனியன், தொப்பி என்ற பரிசுப் பொருட்கள், முதல் கொள்முதல் இலவசம் போன்ற சலுகைகளாலும் கடைக்காரர்களை அவர்களை அறியாமலே விலை போக வைத்துவிட்டனர்.
தமது பானங்கள் போகாத புதிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு தாதா ஏஜெண்டுகளை வைத்திருக்கின்றனர். தாதாக்கள் அப்பகுதியைப் பழக்கிய பிறகு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் சந்தையைத் தொடருவர்.  உணவகங்கள், பெரும் அங்காடிகள், திரையரங்குகள் போன்ற பெரிய விற்பனையாளர்களுக்கு பெரும் தொகையைக் கொடுத்து தமது குளிர்பானங்களை மட்டும் விற்க வைக்கின்றனர்.
புது தில்லியில் பி.வி.ஆர் மல்டி பிளக்ஸ் திரையரங்கிற்கு 60 இலட்சமும், பம்பாயின் ஸ்டெர்லிங் திரையரங்கிற்கு 30 இலட்சமும் கொடுத்த பெப்சி சமீபத்தில் மதுரை மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கிற்கும் ஒருபெரும் தொகை கொடுத்து  தனது பாட்டில்களை மட்டும் விற்க வைத்திருக்கிறது. கோக், பெப்சி இரண்டும் இதற்காக மட்டும் வருடந்தோறும் 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றன.
குளிர்பான விற்பனையில் பாட்டில்கள் சுழற்சி அதாவது பாட்டில் தொழிற்சாலை – கடை – மீண்டும் தொழிற்சாலை என இடையறாமல் பயணம் செய்வது முக்கியம். ஒரு வருடத்தில் ஒருபாட்டில் 10 முறையாவது விற்கப்பட்டால்தான் லாபம். இதில் 30 சதவீதம் பாட்டில்கள் உடைபடும். மீதி சுற்றிவரும். அப்படி சுற்றி வரும் தனது எதிர் நிறுவன பாட்டில்களை முடக்குவதற்கு இந்நிறுவனங்கள் ஏராளமான சதி வேலைகள் செய்கின்றன.
அடுத்து குளிர்பானத் தயாரிப்பு – விற்பனைக்கான அடிப்படை கட்டுமான வசதிகளுக்காக இந்நிறுவனங்கள் பாதியை மட்டும் முதலீடு செய்கின்றன. மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலம் முதலீடு செய்ய வைக்கின்றன. பெப்சி – கோக்கின் ரசாயன கரைசல் கூழ் (எசன்ஸ்) மட்டும் அமெரிக்காவிலிருந்து வரும். கூழை நீரில் கலந்து பாட்டிலில் விற்பதற்கென்றே உலகம் முழுவதும் பிராந்திய அளவில் ஏராளமான பாட்டில் தொழிற்சாலைகளை வைத்திருக்கின்றனர். இந்தியாவில் கோக்கிற்கு 60, பெப்சிக்கு 26 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் கோக் மட்டும் பாதியை சொந்தமாகவும் மீதியை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவும் வைத்திருக்கின்றது.
இத்தகைய பாட்டில் தொழிற்சாலைகளின் அதிபர்கள் கோக் கோருகின்ற அளவு முதலீடு செய்ய வேண்டும். கோக் பானங்களை மட்டும் தயாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும். இவையெல்லாம் ஒப்பந்த விதிகள். தற்போது இத்தொழிற்சாலைகளை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கி வருகிறது கோக். சிலரை பாதி பங்குகளை தருமாறு கட்டளையிடுகிறது. கோக்கின் மிரட்டலை எதிர்த்து 23 அதிபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். “எங்களை அதிக முதலீடு செய்ய வைத்துவிட்டு, இப்போது ஒப்பந்தத்தை ரத்துசெய், அல்லது விற்றுவிடு” என்று கோக் மிரட்டுவதாக பூனா பாட்டிலிங் தொழிற்சாலை அதிபர் தனது வழக்கில் கூறியிருக்கிறார்.
அதே போன்று மொத்த வியாபாரிகளும் கோக்கினால் அச்சுறுத்தப்பபடுகின்றனர். தமிழக நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேஷ், “கோக்கின் அநீதியான வர்த்தகப்படி எங்களுக்கு மாதம் 2000 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. எதிர்த்துக் கேட்டால் வேறு வணிகர்களை நியமனம் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்” என்கிறார்.
இது போக பெப்சியும், கோக்கும் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். தனது நிர்வாகிகளை கோக் விலைக்கு வாங்குவதாக பெப்சி வழக்குத் தொடுத்திருக்கிறது. இதில் பெப்சிக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர் தேசபக்த ஆர்.எஸ்.எஸ் இன் அருண் ஜெட்லி, “2000 கோடி முதலீடு செய்திருக்கும் பெப்சிக்கு இழைக்கப்படும் அநீதி” என்று நீதிமன்றத்தில் உருகினார். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பபடி ஒரு ஊழியர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் உரிமையை தடை செய்ய முடியாது” என்று கோக் திருப்பியடித்தது. பெப்சியும், கோக்கின் பானங்களைத் தயாரித்து வந்த குஜராத், கோவா பாட்டில் தொழிற்சாலைகளை விலைக்கு வாங்கியிருக்கிறது. இப்படி இருவரும் தங்களது வியாபார மோசடிகளுக்காக இந்தியாவில் மட்டும் 300 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள்.
இப்போது குடிநீர் என்றாலே ‘மினரல் வாட்டர்’ என்றாக்கி விட்டார்கள். இந்தியாவின் மினரல் குடிநீர் சந்தை மதிப்பு 1250 கோடி ரூபாயாகும். வருடந்தோறும் 100 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் இத்துறையையும் அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை. கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.
இதற்கு மேல் பல மாநிலங்களில் பல ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கின்றனர். ஆய்வகம், சரக்கு லாரி கட்டும் பனிமணை, பழரச உற்பத்தி, காய் – கனி பண்ணை, நொறுக்குத்தீனி, டப்பா உணவு ஏற்றுமதி என ஏராளமான திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இந்தியாவின் 15 கோடி நடுத்தவர வர்க்க மக்களைக் கொண்ட வலுவான சந்தையைக் கைப்பற்றுவதை தமது நோக்கமாகக் கொண்டுள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பம் ஒருமாதம் பல நூறு ரூபாய்களை தங்களுக்கு மொய் எழுதவேண்டும் என்பதே அவர்களது இலக்கு.
கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்தைக் கள் ஊற்றி மதி மயங்க வைக்கும் வித்தைக்காக பல விளம்பர படைப்பாளிகள் பெப்சி – கோக்குக்காக உழைக்கின்றனர். விளம்பர நிறுவனங்களுக்கு மட்டும் இரு நிறுவனங்களும் தலா 50 கோடியை கட்டணமாகக் கொடுக்கின்றன. இதுபோக வானொளி, ஏனைய விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஷாருக்கான், டெண்டுல்கர், ஐஸ்வர்யாராய் போன்ற நிழலுலக நட்சத்திரங்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
“உலக அளவில் கொள்ளையடிக்க உள்ளுர்ககாரனாக வேடம் போடு” என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டும் செயல் திட்டம். அதற்கேற்ப தங்களது விளம்பரங்களுக்கு அந்தந்த மாநில நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். கோக் ஆந்திராவில் சிரஞ்சீவியையும், தமிழ்நாட்டில் விஜயையும், பெப்சி தமிழகத்தில் மாதவனையும், தெலுங்கில் கல்யானையும் விளம்பரங்களில் இறக்கியிருக்கின்றன. இனி இன்பத் தமிழிலும் சுந்தரத்தெலுங்கிலும் “என்ஜாய் கொக்கோ கோலா, ஏ தில் மாங்கே மோர் – ஆஹா”வும் கவிதையாய் பொழியும்.
இதுவும் போக டி ஷர்ட், தொப்பி, கிரிக்கெட், சினிமா ஸ்பான்சர், மூடி சேகரிப்பு, ஹாலிவுட் – மல்யுத்த நட்சததிரங்களின் ஸ்டிக்கர்கள், அறிமுக விலை தள்ளுபடி, சென்னையில் இட்லிக்கு கோக் இலவசம், மும்பையில் சப்பாத்திக்கு இலவசம்,  பெங்களூருவில் பிஸ்ஸா வாங்கினால் பெப்சி கேன் இலவசம் என மேட்டுக்குடியைக் கவர ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.
ஏராளமான மினுக்குத் திட்டங்கள்.
____________________________________________________________
இது அமெரிக்காவின் குளிர்பானக் கம்பெனிகள் இந்தியாவில் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு போர்!
3 ஷிப்ட்களில் 150 தொழிலாளிகள் வேலைபார்த்த காளிமார்க்கின் விருதுநகர் பாட்டில் தொழிற்சாலையில் இன்று இருபது பேர், ஒரு ஷிப்ட் மட்டும் வேலை செய்கின்றனர். தென் மாவட்டங்களில் இன்று காளிமார்க்கை பரிதாபமான ஒரிரு பெட்டிக் கடைகளில் மட்டும் காணலாம். திருச்சியில் வின்சென்ட் குளிர்பான அலுவலகப் பெயர் பலகை பாழடைந்து சவக்களையுடன் காணப்படுகிறது. மதுரை மாப்பிள்ளை விநாயகர் குளிர்பானம் தமது திரையரங்குகளில் கூட விற்க முடியாத அவல நிலையில் இறந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற பன்னீர் சோடா நிறுவனங்களை இனி தொல்பொருள் ஆராய்ச்சியில்தான் தேட வேண்டும். மோரும், இளநீரும், போஞ்சியும், பானகமும் அருகி வருகின்றன. நீராகாரம் என்பது என்னவென்றே நகர்ப்புற இளைஞர்களுக்குத் தெரியாது.
10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான இந்திய குளிர்பான நிறுவனங்களும், இலட்சக்கணக்கான தொழிலாளர்களும்  வேலையிழந்திருக்கின்னர். நமது விவசாய பொருளாதார, தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமான மரபு வகை பானங்களை மறந்துவிட்டோம். அமெரிக்காவின் கார்பன் வாயு கலந்த ஆல கால விடத்தை குடிக்க பழக்கப்படுத்தப்படுகிறோம். பெப்சியும், கோக்கும் தமது எசன்ஸை மட்டும் அமெரிக்காவில் இருந்து அனுப்பி, உள்ளூர் பாட்டில் தொழிலதிபர்களை வைத்து நீர் கலந்து, ஏஜெண்டுகளை வைத்து விநியோகித்து, விளம்ரங்களுக்கு நுகர்வோரிடமே பிடுங்கிக் கொண்டு, ஏராளமான சொத்துக்களை வாங்கிக் கொண்டு, டப்பா உணவு ஏற்றுமதி – கோலா விற்பனை இரண்டிலும் சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.
இந்தியா மட்டுமல்ல முழு உலகும் இந்தக் கொள்ளையிலிருந்து தப்பவில்லை. அமெரிக்காவுக்கு கீழே இருக்கும் மெக்சிகோ நம்மைப் போன்ற ஏழை நாடுதான். அங்கேயும் ஆண்டுக்கு ஒருவர் 500 பாட்டில்களை குடிக்கும் அளவுக்கு தனிநபர் நுகர்வை ஏற்றி விட்டார்கள். எங்கெல்லாம் அமெரிக்க இராணுவம் நுழைந்ததோ அங்கெல்லாம் பெப்சியும், கோக்கும் நுழைந்தன. பின்னர் இராணுவம் திரும்பினாலும் கோலாக்கள் திரும்பவில்லை.
ஜப்பான், கொரியா, ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து இங்கெல்லாம் கோலாக்கள் அம்மக்களின் ரத்தத்தில் கலந்துவிட்டன. சிங்கப்பூரில் ஒரு ஓட்டலுக்கு சென்றால் முதலில் குடிநீர் வைக்கமாட்டார்கள். கோக்தான் தருவார்கள். இப்படி தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
தொன்மையான புகழ் பெற்ற நாகரிகங்களெல்லாம் நதிக்கரையில் தோன்றின. மனித குலநாகரிகத்தில் நீரின் பங்கு அத்தகையது. இன்றும் நல்லநீர் கிடைக்காமல், மழை பெய்யாமல், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் ஏராளமான நாடுகள் உள்ளன. வருடா வருடம் ஒரிஸா, ராஜஸ்தான், குஜராத்தில் பிளந்து கிடக்கும் மண்ணுக்கும், மக்களுக்கும் அந்த நீரின் அருமை தெரியும். தண்ணீர் நமது உடலில் இரண்டறக் கலந்தது. நமது பண்பாடு. விவசாயத்தின் உயிர். அத்தகைய நீரை நமது சிந்தனையில் இருந்து அழிக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரம்?
பெப்சி – கோக்கின் ரசாயனக் கலவையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. வியாபார ரகசியம் என்ற உரிமையால் பாதுகாக்கப்படும் அந்தக் கலவையின் தீங்கை மேற்குலகிலேயே பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர். பெப்சி – கோக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘டயட்’ என்ற பானத்தில் (கலோரி இல்லாத இனிப்பு நீர்) உள்ள ‘ஆஸ்பார்ட்டாம்’ என்ற ரசாயனப்பொருள் உடலுக்கு நேரடித் தீங்கை விளைவிக்கக் கூடியது என அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் கிளம்பியிருக்கிறது. ஆனால் அதிகார வர்க்கத்தைச் சரிகட்டி கோக் தொடர்ந்து அதை விற்கிறது.
பிரான்சில் மக்கள் அருந்தும் பானமும், ஏற்றுமதி செய்யப்படுவதும் ஒயின்தான். பிரெஞ்சு நாடு திராட்சை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு. அந்த விவசாய பொருளாதாரத்தை வைத்து இந்த பானம் அவர்களிடையே மரபு வகை பழக்கமாக உள்ளது. கோக், பெப்சியின் வருகையால் பிரெஞ்சு விவசாயிகள் பாதிக்கப்பட்டு எதிர்த்துப் போராடுகின்றனர்.
இப்படி உலகம் முழுவதும் அந்தந்த மக்களது வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம் மூன்றும் அமெரிக்காவின் ஆக்ரமிப்பு நுகர்வுப் பண்பாட்டால் அழிக்கப்படுகின்றது. பிஸ்ஸா, பர்கர், எம்.டி.வி, ஹாலிவுட், துரித உணவகம், பேரங்காடி, டபிள்யூ. டபிள்யூ. எஃப், நைக், மெக்டோனால்டு போன்றவையே நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. கற்றுக்கொடுக்கின்ற தேவன்களாக மாறிவிட்டன.
உழைப்பாளிகளின் பானமான தேநீரை நடுத்தர – மேட்டுக்குடி இளைஞர்களிடம் கொண்டு செல்ல நெஸ்லேயும் – கோக்கும், பெப்சியும் – இந்துஸ்தான் லீவரும் இணைந்து ஐஸ் டீ, ரெடிமேடு டீ போன்றவைகளைத் தர இருக்கிறார்கள். கோக், பெப்சி இரண்டும் உலகம் முழுவதும், ஏன் கழிப்பறைகளில் கூட கிடைக்க வேண்டும் என்பது வரை போய்விட்டன. சமீபத்தில் போன் செய்தால் கோக் டின் கொட்டும் ‘டயல் எ கோக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இந்தக் கொள்ளையடிக்கும் உத்திக்கு முடிவு கிடையாது.
இது வெறும் குளிர்பானமல்ல. உங்களை உங்கள் மண்ணிலிருந்து பிடுங்கி எறியும் ஒரு வெடிகுண்டு. பெப்சி – கோக் காசு கொடுத்த்து குடிப்பது தாயைக் கூட்டிக் கொடுப்பதை விடக் கேவலமானது. இந்த மண்ணையும், மக்களையும் உதறித்தள்ளி அமெரிக்க நாய்களுக்கு அடிமையாக இருப்போம் என்பவர்கள்தான் கோக் குடிக்க முடியும். ஆம். பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்

Tuesday, 19 April 2011

நல்ல நூல்களில் இருந்து படித்து தேர்வு செய்யப்பட்ட வரிகளின் தொகுப்பு..


01. மரணம் என்பது திரையை விலத்தி ஓர் அறையில் இருந்து இன்னோர் அறைக்கு செல்வதுதான்.
02. கூண்டின் கம்பிகளை திறந்துவிட்டால் நீங்கள் பறவைக்கு தீமை செய்வதில்லை, அதற்கு நன்மைதான் செய்கிறீர்கள், அதுபோன்றதுதான் மரணமும்.

03. இறந்துபோன உங்கள் நண்பர்களுக்காக ஓரளவுக்கு மேல் துயரம் கொள்ளாதீர்கள். அவர்கள் இறக்கவில்லை ஆனால் தமது பயணத்தை முடித்து விட்டார்கள். நாம் எல்லோருமே நமது பயணம் முடிவடைய அந்த வரவேற்பறைக்கு சென்றேயாக வேண்டும்.

04. நாளைபற்றி யோசிக்காதீர்கள் நாளை தனக்குத்தானே பார்த்துக் கொள்ளும், இந்தநாளே உயர்ந்தது.
05. உண்மையான நம்பிக்கையுடன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து கடவுளைக் கூப்பிடுபவர்களுக்கு அவர் செவி சாய்ப்பார். அவர்கள் கேட்டது, ஆசைப்;பட்டது கட்டாயம் கிடைக்கும்.
06. கனவுகளைவிட பிரார்த்தனைகளாலேயே அதிக விஷயங்கள் நடக்கின்றன. எனவே உங்கள் குரல் இரவும் பகலும் ஊற்றுப்போல உயரட்டும்.
07. பிரார்த்தனை என்பது வேண்டுதல் மட்டுமல்ல, மனிதனின் கண்ணுக்குத் தெரியாத  சக்தியிலேயே மிகவும் சக்திவாய்ந்த வடிவம் அல்லது வெளிப்பாடுதான் அது.
08. பிரார்த்தனையின் போது உணர்வு நிலையின் அடியின் ஆழத்திலிருந்து ஒரு தீபம் சுடர்விடுகிறது அங்கு மனிதன் தன்னைத்தானே அடையாளம் காண்கிறான்.
09. புவியீர்ப்பு விசையைப் போலவே பிரார்த்தனையும் உண்மையான ஒரு சக்தியாகும். எல்லாமோ தோல்வியடைந்த நிலையில் பிரார்த்தனை இறுதி வெற்றி தந்திருக்கிறது.
10. கவலைக்கான தன்னிகரற்ற மருந்து பிரார்த்தனையாகும்.
11. தெய்வீக உதவியின்றி என்னால் வெற்றிபெற முடியாது அதுபோல தெய்வீக உதவியின்றி என்னால் தோற்கவும் முடியாது.
12. கடவுள் மனிதருடைய செயல்களை கட்டுப்படுத்துகிறார். அவருக்கு தெரியாமல் ஒரு குருவி தரையில் விழாது என்றால் அவரது உதவியின்றி ஒரு ராஜாங்கம் உயருமா என்ன ? – பெஞ்சமின் பிராங்கிளின்
13. நம்பிக்கை என்ற சக்தியில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள் அது இல்லாதபோது வீழ்ச்சியடைகிறார்கள்.
14. நாம் எப்போதுமே வாழ்வை எளிதாக ஒரேமாதிரியாக வாழ்ந்துவிடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் எல்லோருமே பிரச்சனைகளை, கவலைகளை, பயங்களை உணருகிறோம். இவை வாழ்வின் பாகங்கள் அதிலிருந்து தப்பிவிட யாராலுமே முடியாது.
15. எப்போதுமே வலி, பிரச்சனைகள் வந்தால் அவற்றை சமாளிக்கக் கூடியவாறு உங்கள் மனதைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
16. போராட்டமான நேரத்தில் மனிதனுக்கு உதவக்கூடிய வாசகத்தை கண்டு பிடிக்கும்படி ஒரு ராஜா ஐந்து அறிஞர்களை கேட்டார். அவர்கள் கண்டறிந்து சொன்ன மந்திரம் இதுதான்  – இது கூட கடந்து சென்றுவிடும் -  இதோ அந்த மந்திரப் பாடல் :
துயரத்தில் இருக்கிறாயா தோழா ?
உனக்காக நான் பிரார்த்திக்கிறேன்
ஆறுதல் கொள் இதுகூட கடந்து சென்றுவிடும்.
மேன்மையடைந்துவிட்டாயா சந்தோஷத்தில் தள்ளாடாதே
மனதைக் கட்டுப்படுத்து இதுகூட கடந்து சென்றுவிடும்.
ஆபத்தில் இருக்கிறாயா ? மனம் அலை பாய்கிறதா ?
நம்பிக்கை கொள்..! இதுகூட கடந்து சென்றுவிடும்.
போரிலும் புகழிலும் மமதை கொள்கிறாயா ?
ராஜாபோல திரிகிறாயா ? இதுகூட கடந்து சென்றுவிடும்.
நீ யாராக இருந்தாலும், உன் பாதம் எங்கு சென்றாலும்
இந்த ஞானமுள்ள வார்த்தையைக் கேள் இதுகூட கடந்து சென்றுவிடும்.

17. உங்கள் துயரத்தை மறந்துவிடுங்கள் அது தண்ணீர் ஓடிச் சென்றதுபோல ஓடிவிடும்.
18. பிரபஞ்சத்தின் அடிப்படையான பொருள் என்பது ஒரு நதி தொடர்ந்து ஓடுவதைப் போல ஓடுகிறது. எல்லா பொருட்களும் தொடர்ந்து மாறுவது மட்டுமன்றி மற்றப் பொருட்களிலும் தொடர்ந்து முடிவில்லா மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.
19. நீ ஒரு விளிம்பில் நிற்கிறாய் உனக்குப்பின்னால் கடந்தகாலம் என்ற பாதாளம் முன்னால் எல்லாவற்றையும் விழுங்கப்போகும் எதிர்காலம் இப்போது எதற்காக நீ கவலைப்படுகிறாய் ?
20. வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே ! உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது.
21. இன்னும் பிறக்காத வருடங்களின் அனுபவிக்காத சந்தோஷம் இன்று துக்கப்படும் இதயத்தை நாளை துரோகி என்று நிரூபிக்கும். கண்களை கண்ணீர்த் துளிகளுக்கு விசுவாசமற்றதாக்கும்.
22. யோசனையின்றி எடுத்து வைக்கும் அடிகளைப்பற்றி ஜாக்கிரதையாக இருங்கள். நாளைவரை வாழப்போகும் இருண்ட நாளும் மறைந்துவிட்டிருக்கும்.
23. வாழ்வின் துன்பங்களை, சோதனைகளை கடந்து மேலெழ உதவும் சமநிலை பொறுமையைத் தவிர வேறென்ன இருக்கப்போகிறது.
24. கடலுக்குள் நீண்டிருக்கும் நிலத்தைப்போல நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதன் மேல் அலைகள் தொடர்ந்து மோதினாலும்  அது உறுதியாக இருக்கிறது. இறுதியில் அதன் மேல் மோதும் ஆர்ப்பரிக்கும் அலைகள் அடங்கி அமைதியாகின்றன.
25. ஈக்வானிமிடஸ் என்பது ஒரு மந்திரச் சொல் இதன் பொருள் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு மேலாக செல்வதாகும்.

தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்



பள்ளி வயதில் காக்கை குருவி ஓணான்களும், ஹெலிகாப்டர் பூச்சிகளும்தான் எங்கள் தோழர்கள். கொட்டாங்கச்சியில் தண்ணீர் பிடித்துத் துவைக்கிற கல்லின் மேல் வைத்துவிட்டுக் காத்திருந்தால் சிட்டுக் குருவிகள் வந்து உட்காரும். சின்ன வாயால் அவை தண்ணீர் மொண்டு தலையைச் சாய்த்துக் குடிக்கிற அழகே அழகு. சில குருவிகள் அந்தக் கொட்டாங்கச்சித் தண்ணீரிலேயே சிக்கனமாகச் சென்னைவாசி போல் குளித்துவிட்டுப் போகும்.

       இந்த 2010-ல் என் குருவிகள் எல்லாம் எங்கே? சென்னையில் கண் பூக்கத் தேடினாலும் சிட்டுக் குருவி தட்டுப்பட மறுக்கிறது. அன்றைக்கு உலக சிட்டுக் குருவி தினம் என்று மீடியாவில் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுப் பொடியன் மொட்டை மாடியில் அரிசி வைத்துவிட்டுக் காத்திருக்கிறான். மீதி இருக்கும் குருவிகள் எங்கிருந்தாலும் இதைத் தந்தி போல் பாவித்து உடனே வேளச்சேரிக்கு வரவும்.
       சிட்டுக் குருவிகள் போலவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன், தேனீக்கள். இரண்டுமே மறைந்து போவதற்குக் காரணம், பேராசையே அடிப்படையாகக் கொண்ட நம் வாழ்க்கை முறை. அடுத்த ரெசிஷனுக்குள் முடிந்தவரை சம்பாதித்துவிட வேண்டும் என்ற அவசரம்.
       மூன்று வருடங்களுக்கு முன்னால் உலகில் தேனீக்கள் வேகமாகக் குறைய ஆரம்பித்தன. (ஜோ க்ளார்க்). முதலில் இதன் காரணம் யாருக் கும் பிடிபடவில்லை.
       இந்த மர்மக் கதையின் ஆரம்பம் நவம்பர் 12, 2006. ஃப்ளாரிடாவில் தொழில் முறையில் தேனீ வளர்க்கும் விவசாயியான டேவ். அன்று காலையில் தன் தேனீப் பெட்டிகளைக் கவனித் தார். வழக்கமாகப் பெட்டியைச் சுற்றித் தேனீக்கள் குற்றாலக் குறவஞ்சியில் வர்ணிப்பது போல முரலும். ஆனால் அன்றைக்குத் தேனீக்கள் ஏதும் கண்ணில் படவில்லை. சோம்பேறிப் பூச்சிகள், இன்னும் தூங்குகிறதோ என்று பெட்டியைத் திறந்து பார்த்தால், பகீரென்றது. கூட்டில் ராணித் தேனீ, குஞ்சுப் புழுக்கள், மற்றும் ஒரு சில எடுபிடி ஏவலாட்கள் மட்டும்தான் இருந்தார்கள். பதற்றத்துடன் ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து திறந்து பார்த்தார். மிகச் சில தேனீக்களே மீதி இருக்க, மற்ற அத்தனையும் போன இடம் தெரியவில்லை.
       விரைவிலேயே இது தொடர் கதையாக ஆயிற்று. அமெரிக்கா முழுவதும் தேனீக் கூட்டங்கள் ஒட்டு மொத்தமாகக் காணாமல் போக ஆரம்பித்தன. 2007 பிப்ரவரிக்குள் கரை முதல் கரை வரை தேனீ மரணங்கள். சில விவசாயிகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரை இழப்பு!
       வருடா வருடம் ஒட்டுண்ணி, வைரஸ் போன்ற பிரச்னைகளால் சில தேன் கூடுகள் காலியாவது உண்டுதான். ஆனால் குறுகிய காலத்தில் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை தேன்கூடுகள் செத்துவிட்டதன் காரணம் புதிராகவே இருந்தது. என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடியாததால் இதற்கு காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர் (CCD) என்று சராசரி விவசாயியின் வாயில் நுழையாத பெயராக வைத்தார்கள்.
       நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்வதற்கு, அமெரிக்கப் பொருளாதாரத்தில் தேனீக்கள் பங்கு பற்றிப் பார்க்கவேண்டும். அங்கே பயிர்களில் கிட்டத்தட்ட 23 சதவீதம் தேனீக்களால்தான் மகரந்தச் சேர்க்கை பெற்றுச் சூல் கொள்கின்றன.
       தேனீக்கள் முதன்முதலில் அமெரிக்கா வுக்குப் போன வருடம் 1622. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த இந்த புதிய பூச்சியைப் பார்த்த செவ்விந்தியப் பழங்குடியினர் அதற்கு ‘வெள்ளைக்காரன் ஈ’ என்று பெயர் வைத்தார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மெல்ல ஐரோப்பியக் குடியிருப்புகள் பரவ ஆரம்பித்த போது அதற்குச் சற்று முந்திக்கொண்டு தேனீக்களும் அமெரிக்காவுக்குள் ஊடுருவின. எனவே தேனீக்கள்தான் நாகரிகம், நவீனத்துவத்திற்குக் கட்டியம் கூறியவை. அத்தோடு கூடவே பழங் குடியினரின் அழிவுக்கும் அவை கெட்ட சகுனமாக ஆகிவிட்டது வேறு கதை. குறைந்த சோனித் தேனீக்கள் மட்டுமே பெருகி வளர்ந்தன. இது சிசிடி விடுகதைக்கு முதல் சாவி.
       புதிய கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்த மற்றொரு தாவரம் ஆப்பிள். ஆப்பிள் போன்ற பயிர்களை மகரந்தச் சேர்க்கை செய்வதற்குத் தேனீக்கள் அவசியம். குறிப்பாக ஏக்கர் கணக்கில் ஒரே வகைப் பயிரை வளர்க்க வேண்டுமென்றால் தேனீக்களின் உதவி இல்லாமல் முடியாது. தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தேனீயையும் கையோடு கொண்டு வந்தார்கள்.
       கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மானோ கல்ச்சர் முறை, தொழிற்புரட்சி காலத்தில் டிராக்டரில் ஏறிச் சவாரி செய்தது. இருபதாம் நூற்றாண்டு பிறந்த போது கண்ட கண்ட நைட்ரஜன் உரங்கள், பூச்சி மருந்து, அறுவடையை நாலா புறமும் அனுப்ப, ரயில் பாதை என்று மேலும் மேலும் பெரிய பண்ணை கள் உருவாகத் தேவையான அனைத்தும் அமெரிக் காவுக்குக் கிடைத்துவிட்டன. ஃபோர்டு கார் தயாரிப்பது போலவே அவர்கள் விவசாயத்தையும் செய்ய முயற்சித்ததுதான் சிசிடியின் இரண்டாவது சாவி.
       பண்ணைகள் அளவுக்கு மீறிப் பெரியதான போது அத்தனை ஏக்கராவில் அத்தனை கோடிப் பூக்களுக்கு மகரந்தம் கொண்டு சேர்க்கத் தேனீக்கள் போதவில்லை. அப்போது பிறந்தது தான் நடமாடும் தேனீப் பண்ணை ஐடியா. பெட்டி பெட்டியாகத் தேன் கூடுகளை லாரியில் ஏற்றி நாடு பூரா கொண்டு போவார்கள். இந்த சீசனுக்கு கலிபோர்னியாவில் பாதாம் தோட்டங்கள். அடுத்த சில மாதங்களில் சர்க்கஸ் கூடாரத்தைக் கிளம்பிக் கொண்டு போய் வாஷிங்டனில் ஆப்பிள்கள் அங்கிருந்து நேராக ஃப்ளோரிடா.... இப்படி ஒரு வசதி கிடைத்துவிட்டதால் மானோ கல்ச்சர் என்பது அமெரிக்காவின் தலைவிதியாகவே ஆகிவிட்டது.
       இத்தனை கலாட்டாக்களையும் தாங்கிக் கொண்டு வருடம் முழுவதும் அவைகளை உயிருடன் வைத்திருப்பதற்காக, தேனீக்களுக்கு செயற்கையான உணவு கொடுத்து வளர்த்தார்கள். என்ன என்னவோ ஃப்ரக்டோஸ் சிரப்கள், மானோ சக்கரைடுகள் என்று சீப்பாக சாப்பாடு போட்டு சமாளித்தார்கள். டெண்டுல்கரை வைத்து விளம்பரம் செய்து நம் குழந்தைகளுக்கு அவர்கள் புட்டி புட்டியாக விற்கும் அதே வெற்று சர்க்கரைக் கரைசல்கள்! தேனீக்கள் வசந்த காலப் பூச்சிகள். அமைதி விரும்பிகள். இப்போது அவைகள் எல்லாப் பருவங்களிலும் டிராவலிங் சேல்ஸ் மேன் மாதிரி டை கட்டிக் கொண்டு ஊர்ஊராக அலைந்து கிடைத்ததைத் தின்று வாழ நேர்ந்தது.
       இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் வயல்கள் மூர்க்கமாக இயந்திர மயமாயின. ஆயிரக் கணக்கான சிறு விவசாயிகள் ‘ஏரின் உழாஅர் உழவர்’ என்று மனம் உடைந்துபோய், வயிற்றுப்பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார்கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது
       தேனீ வளர்ப்பவர்கள் அவ்வப்போது பெட்டியைக் கையில் தூக்கிப் பார்ப்பார்கள். கனமாக இருந்தால் நிறையத் தேன் சேர்ந்துவிட்டது என்று உடனே பூச்சிகளைக் கொன்று தேனை அறுவடை செய்து கொண்டார் கள். பெட்டி லேசாக இருந்தால் இரண்டு மூன்று கூடுகளை ஒன்றாகச் சேர்த்து, இப்போதாவது தேன் சேருகிறதா என்று பார்த்தார்கள். இதன் விளைவு, டார்வினின் மரபீனி விதிகளுக்கு நேர் மாறாக இருந்தது : சுறுசுறுப்பான தேனீக்கள் எல்லாம் சீக்கிரம் கொல்லப்பட்டு, உற்பத்தித் திறன் பிழைப்புக்காக வடக்கே நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதனால் பண்ணையார் கள் எண்ணமெல்லாம், இன்னும் பரந்த ஏரியாவில் ஒரு பயிரை வளர்த்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியுமா என்பதிலேயே போயிற்று. தேனீக்களின் சுமை அதிகரித்தது.
       இது எப்படி சிசிடிக்கு இட்டுச் சென்றது என்பதற்கு வருவோம். மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின் றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விடுகிறது என்ப தற்கும் பல ஆராய்ச்சி முடிவு கள் சாட்சி இருக்கின்றன. அதுவும், பற்பல ஆபத்தான பூச்சி மருந்துகளில் சொட்டச் சொட்ட நனைந்த மகரந்தம்.
       இது வரை நாம் தயாரித்த பூச்சி மருந்துகள் 19 வகைகளில் அடங்கும். அதில் DDT போன்ற சில மருந்துகளைத் தடை செய்து 25 வருடம் ஆகிறது. இருந்தும் ஆயிரக் கணக்கான மகரந்தத் துகள் கள், தேன் மெழுகு சாம்பிள்களை சோதித்துப் பார்த்தபோது டிடிடி உள்பட எல்லா மருந்து களின் மிச்சங்களும் அதில், காணக் கிடைத்தன. அதாவது, பூச்சி மருந்துகள் ஜாடி பூதம் மாதிரி. ஒரு முறை திறந்துவிட்ட பிறகு அவை உலகத்தை விட்டுப் போவதே இல்லை!
       மனிதன் வங்கியில் திருடுவான், வளையலைத் திருடுவான், கிரிக்கெட்டில் திருடுவான், ஆடு மாடுகள் என்று தன்னைவிடக் கீழான பிராணிகளிடமும் பால், தோல் உட்பட அனைத் தையும் திருடிக் கொள்வான். கேவலம் பூச்சிகளிடம்கூட அவற்றின் கடைசிச் சொட்டு உழைப்பு வரை திருடிக் கொள்ளக் கூச்சப்பட மாட்டான் என்பதற்கு வாழும் சாட்சியாக இருப்பவை தேனீக்கள்.

Friday, 15 April 2011

இதை படிக்கவும்...

---------------------
Money can't buy happiness.....

somehow it is convenient to cry in a closed BMW than laughing at cycle....

---------------------
தபால் போட்டா தபால் காரன்...
பால் போட்டா பால்காரன்....
பேப்பர் போட்டா பேப்பர் காரன்....

பிச்சை போட்டா?

முடியல.....

-------------------
என்ன தான் கம்ப்யூட்டர் விண்டோ ல உலகமே தெரிஞ்சாலும்,உன்னால பக்கத்து வீட்டு பிகர சைட் அடிக்க முடியாது....
-------------------
சின்ன விளையாட்டு....

மூன்றில் இருந்து ஒன்பதுக்குள் ஒரு எண் ணை நினைத்து கொள்ளுங்கள்...

அதனுடன் மூன்றை பெருக்கவும்...
வந்த விடையுடன் ஐந்தை கூட்டவும்.....
அதில் இருந்து பன்னிரண்டை கழிக்கவும்...

இப்பொழுது உங்கள் கண்களை மூடி கொள்ளவும்....



"ஒரே இருட்டா இருக்குமே"

-------------------------

இதை படிக்கவும்......

Bow bow bow
bow bow
bow bow bow bow

bowwwwuuuuuu

bow......


ok ட்ரைனிங் முடிஞ்சுது,கேட் முன்னாடி நிக்கவும்....(ஹி ஹி ஹி சும்மா)

------------------------
"செத்த பிறகும் சைட் அடிக்கனுமா?

"Donate your eyes"
நல்ல விஷயம் எப்படி போய் சேர்ந்தா என்ன?
------------------------
"Laughing faces doesn't means that absence of sorrow,but it means that,they have the ability to deal with sorrow" keep smiling.....

---------------------

In life when you get troubles,don't get nervous ,just close your eyes and watch your hearts words ,the heart may be at left but always it tells right....

------------------------
இறைவன் யாரையும் அவர்களுடைய சக்திக்கு மீறி சோதிப்பதில்லை,உனக்கு வரும் சோதனை எல்லாம் உன் சக்திக்கு உட்பட்டது, தைரியமாக எதிர்கொள்....
---------------------------

sardhar and his wife drinking coffee....
sardhar:oye drimk fast...

wife:why?

sardhar:see the board,
Hot coffee-5rs
cold coffee-12 rs
--------------------
An old man's T-shirt quote...
"I'm not 60 "but
"I'm 16 with 44 yrs of experience"
that's attitude....
think different....

Thursday, 14 April 2011

தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் - கூட்டணி ஆட்சியா?

அப்பாடா போறாத வெய்யிலில் எல்லாரும் ஒருவழியாக ஓட்டு போட்டுவிட்டீர்களா!.

தமிழக வாக்காளர்கள் இந்தமுறை சுதாகரித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.  தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 78-80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் பெரிதாக குழம்பிபோய் நிற்கின்றனர்.  எப்போதுமே தமிழக மக்கள் வாக்களிக்கும்போது மிகச்சரியாக தங்கள் வாக்குகளை பயன்படுத்துவார்கள்.  மாற்றம் வேண்டும் என்ற தருணங்களில் மிகச்சரியாக பெரும்பான்மையான வாக்குகளை தனிப்பெரும் கட்சிக்கு அளிப்பார்கள்.  


இந்த முறை எப்படி பார்த்தாலும் இருவரில் ஒருவர்தான் ஆளப்போகிறார்கள்.  எனவே அவர்களுக்கு கடிவாளம் போட்டால் தான் சரியான திசையில் செல்வார்கள் என்பது தமிழக மக்களின் கணிப்பு.  எனவேதான கூறுகிறேன் கூட்டணி ஆட்சிதான் என்று.  மேலும் திமுக பெரும்பாண்மை பெறும் அளவிற்கு போதிய தொகுதிகளில் நிற்கவில்லை என்பதே அது கூட்டணி ஆட்சிக்கு எற்ப தன்னை முன்கூட்டியே தயார் செய்து கொண்டது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.


இந்த முறை ஸ்பெக்ட்ரம், ஈழத்தமிழர்கள் பிரச்சனை, மின்வெட்டு போன்ற விஷயங்களில் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு  இருப்பது உண்மையே.  மற்றபடி பெரிதாக திமுகவிற்கு எதிரான அலைஅடிக்கிறது என்றெல்லாம் கூறிவிட முடியாது.  

கடந்த 5 வருட திமுக ஆட்சியில் பெரும்பாலான நலத்திட்டங்கள் நன்றாகவே நடைபெற்றுள்ளன.  முடிந்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளையே கலைஞர் அரசு வழங்கியுள்ளது.  கடந்த ஜெயா ஆட்சியுடன் ஒப்பிடுகையில் கலைஞர் பரவாயில்லை என்றுதான் மக்கள் நினைக்கின்றனர்.  ஜெயா வந்தால் எல்லோருக்கும் நன்மை செய்கிறாரோ இல்லையோ கசப்பு மருந்து நிச்சயம் தந்துவிடுவார் என்பது  மக்களுக்குத் தெரியும். ஜனநாயகத்தில் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத ஒன்று.  காமராஜர், எம்.ஜி.ஆரையே தேர்தல்களில் மக்கள் ஏமாற்றிவிட்டார்களே.  ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா.

இலவசம் என்பது தவறுதான் என்ன செய்வது, புலிவாலை விட்டால் ஆட்சியை பிடிக்க முடியாதே.  ஆட்சி இல்லையென்றால் எதிரிகள் ஏறிமிதித்து விடுவார்களே.  எனவே இரண்டு பெரிய கட்சிகளும் இலவசங்களை அள்ளி தெளித்துள்ளார்கள்.  தமிழகத்தில் கூட பரவாயில்லை புதுச்சேரியை பாருங்கள் மக்களுக்கு லக்கிலாட்டரி தான் போங்கள்.  இதெல்லாம் நடக்குமென்றா நினைக்கிறீர்கள்.  நிச்சயம் நடக்காது.

எப்படியானாலும் அதிக இடங்களைப் பெறும் தனிப்பெரும் கட்சியாக 70 முதல் 80 இடங்களை திமுக அல்லது அதிமுக பெறக்கூடும் என்பது எனது கருத்து.  நிச்சயம் இந்த முறை தொங்கு சட்டசபை அல்லது கூட்டணி ஆட்சிதான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 

கூட்டணி ஆட்சி என்று வரும் போது 70-80 இடங்களைப்பெறும் தனிப்பெரும் கட்சி ஏதாவது 2 (அ) 3 கட்சிகளின் (தோராயமாக 15-20 இடங்களைப் பெறும் கட்சிகள்) ஆதரவோடு ஆட்சியமைக்க முடியும்.

தேர்தல் முடிவுகளுக்குப்பின்பு கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரசும் ஏறத்தாழ சமமான எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெறுவர் (15-20) என்பது என் கணிப்பு.  காங்கிரஸ் முரண்டுபிடித்தால் கம்யூனிஸ்ட்களின் துணையோடு ஆட்சியமைக்க முடியும்.  

ராமதாஸ் குறித்து கவலையே வேண்டாம் அதிமுகவுக்கு சென்றால் ராஜ்யசபா நிச்சயம் கிடைக்காது எனவே அவரது நிபந்தனையற்ற  ஆதரவு திமுகவுக்கு நிச்சயம் உண்டு.  (ஸீட்டு ஜெயிச்சா அப்புறம் பார்ப்போம்) மற்ற குட்டி கட்சிகளையெல்லாம் கேட்கவே வேண்டாம்.  அவர்களுக்கு எதாவது வாரியத்தில் பதவி கொடுத்தாலே போதுமானது.

விஜயகாந்த் 15-20 இடங்களைப் பெற்றால் கொஞ்ச நாள் குழப்புவார் ஆனால் அவரால் நிச்சயம் அதிமுகவோடு இணைந்து பணியாற்ற முடியாது.  எனவே அவர் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தால் கூட போதுமானது. கலைஞரின் உடல்நிலை ஒத்துழைத்தால் நிச்சயமாக ஸ்டெடியாக 5 வருடங்களை ஓட்டிவிடலாம்.  ஆனால் இந்த அளவிற்கு மணல் கொள்ளை, திரைப்படத்துறையில் ஆதிக்கம் மற்றும் டாஸ்மாக் என்றெல்லாம் விளையாட முடியாது கண்ணா!.

இதன்படி பார்த்தால் கலைஞரால் மட்டும் தான் கூட்டணிகட்சிகளோடு சுமுகமாக இணைந்து ஆட்சியமைக்க முடியும்.  சென்றமுறை இருந்த அளவிற்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி சேரும் கட்சிகள் மக்கள் நலனை வலியுறுத்தி பிரச்சனைகளின் அடிப்படையில் குரல் கொடுக்கும் கட்சிகளாக இருந்தால் சிறப்பானதொரு ஆட்சி இந்தமுறை அமையும் என்பது எனது கருத்து.

தேர்தல் கூட்டணியையே ஆணவத்துடன் அவமதித்த ஜெயலலிதா கூட்டணி ஆட்சி நடத்த தகுதியற்றவர் என்பது என் கருத்து.  ஏனெனில் கட்சிகாரர்களின் ஆலோசனைகளையோ, கூட்டணி கட்சி தலைவரிகளின் கருத்துகளையோ கேட்டு ஆட்சி செய்யும் பொறுமையோ  பக்குவமோ இன்னும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தடாலடி முடிவுகள் எல்லாம் தமிழக மக்கள் அறியாததா.  கொஞ்சம் மாறியிருப்பார் என்று நினைத்தால் தான் மாறவில்லை என்று தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிலேயே அவரே உறுதிபடுத்திவிட்டார்.  தனது சுயநலத்துக்காக வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதா நிச்சயம் கூட்டணி அரசு அமைக்க தகுதியற்றவர்.  மீறி கூட்டணி அரசு ஜெயா தலைமையில் அமைந்தால் தமிழகம் மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க தயாராக இருக்கவேண்டும். 


Wednesday, 13 April 2011

பேசும் கிரெடிட் கார்டுகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு பண அட்டைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கணக்கு வரவு செலவை அட்டையிலேயே அறிந்து கொள்ளும் வகையில் எல்சிடி திரையுடன் கூடிய நவீன பண அட்டையை மாஸ்டர்கார்டு, விசா  நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அட்டைகளில் மைக்ரோ டிரான்ஸ்மீட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அட்டையில் 1 முதல் 0 வரையிலான எண்களும் மெனு பட்டன்களும் உள்ளன. நம்முடைய பின் எண்ணை அழுத்தினால் நம் கணக்கு விபரங்களை திரையில் காட்டுவதுடன், ஸ்பீக்கர்கள் மூலமாக சொல்லவும் செய்யும். தற்போது சோதனையில் உள்ள இக்கார்டுகள் அடுத்த மூன்றாண்டுகளில் பரவலாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சிட்டி பேங்க் நிறுவனமும் ஒரு அட்டையை வெளி்யிட்டுள்ளது.ஆனால் அதில் மேற்கூறிய வசதிகள் இல்லை.அதில் இரண்டு பட்டன்கள் மட்டுமே உள்ளன. அதன் மூலம் சலுகை மற்றும் க‌டன் ஆகிய இருபணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.  


இந்தப் பண அட்டைகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்
ணிக ரீதியாகவும், பணத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே பண அட்டைகள் உருவாக்கப்பட்டன. பணத்தின் மதிப்பு கடனாகவோ அல்லது வங்கி ரொக்கமாகவோ இருக்கும்படியான அட்டைகளே அதிகம்  பயன்பாட்டில் உள்ளன.
கடன் அட்டை  (Credit Card)
1920களில் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க கடன் அட்டை முறையை உருவாக்கின. ஆனால் 1959ல்தான் வங்கிப் பயன்பாட்டிற்கான கடன் அட்டையான `பாங்க் அமெரி கார்டு' அறிமுகமானது. அதுவே பிறகு `விசா' கார்டு என்றானது. 1960களில் காந்தப் பட்டையில் தகவல் பதியப்பட்ட அட்டைகளை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இதில் 70 பைட்டுகள் அளவில் தகவல்களைப் பதிய முடியும். அதற்கடுத்து 1966-ல் `மாஸ்டர் கார்டு' வெளிவந்தது.
கடன் அட்டை என்பது பொருளை வாங்கிய பின் பணத்தை மொத்தமாகவோ தவணை முறையிலோ வட்டியுடன் செலுத்துவதாகும். ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து பிளாட்டினம் கார்டு, கோல்டு கார்டு, சில்வர் கார்டு  என்று பல தர வரிசைகளை உருவாக்கி வங்கிகள்  கடன் அட்டையை வழங்குகின்றன. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இக்கார்டுகள் பொருளாதார வீழ்ச்சி என்ற சுனாமியால் தாக்குண்டு பெரும்பாலான அமெரிக்கவாசிகளின் தூக்கத்தைக் கெடுத்த கதையும் அரங்கேறியது. கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி விகிதம் அதிகம், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதல் வட்டி, அபராதம் என்று மிகப் பெரிய தொகையாக மாறும் சூழலும் நிகழ்கிறது. 
பற்று அட்டை (Debit Card)
இது கடன் அட்டை போல இல்லாமல் நம் வங்கி இருப்பில் இருக்கும் பணத்தின் அளவிற்கு உட்பட்டு பொருட்களை வாங்குவது அல்லது கட்டணம் செலுத்துவதற்கு உதவுகிறது.
விசா நிறுவனத்தால் தற்போது விசா டெபிட் அட்டை புதிதாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக கடன் அட்டைகளைப் போலவே பொருட்களை வாங்க முடியும்.
தானியங்கி பண வழங்கி அட்டை (ATM Card)
வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் இன்று  ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும், விசா அல்லது மாஸ்டர் நிறுவனச் சேவை இணைந்திருந்தால் பொருட்களை வாங்க உதவும் டெபிட் கார்டாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும். Related Posts with Thumbnails

புதிய சாதனை...

பிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல் கமிஷன் அசத்தல்...

தமிழகத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், 1967-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை எனச் சொல்லலாம்.

மதுரையில் திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் காயமடைந்தனர். எனினும், மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க, பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை தமிழக இதுவரை வாக்கு சதவீதம்...வாக்காளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தலில் பணபலத்தை இயன்ற வரையில் இம்முறை தேர்தல் ஆணையம் தடுத்திருப்பது கவனத்துக்குரியது.

விறுவிறு வாக்குப்பதிவு...

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கின. இதனால், அந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

தீவிர பாதுகாப்பு...

வன்முறையை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக தேர்தல் நடைபெறவும் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

2011 தேர்தல்...
தொகுதிகள் - 234
வேட்பாளர்கள் - 2,748
வாக்காளர்கள் - 4,71,16,687
வாக்குச்சாவடிகள் - 54,314
பாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையினர் உள்பட ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வெப் கேமரா கண்காணிப்பு...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பதற்றமானது என கண்டறியப்பட்ட 9,500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தேர்தல் ஆணையரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை... 

வாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, மே 13-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

மேலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக அதிகமாக  படித்தவர்கள் வாக்கு அதிகம் பதிவாகுது என அர்த்தம்.. அது தி மு க விற்கு அனர்த்தம்.


60 % வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்.. இப்போ தி மு கவிற்கு ....????????????

Friday, 1 April 2011

மவுசின் செயல்பாடுகளை தங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைக்க


     தங்கள் மவுசின் செயல்பாடுகளை தங்களுக்கு ஏற்றது போல எப்படி மாற்றி அமைப்பது என்பதை தான் நான் தங்களுக்கு தற்போது சொல்ல இருக்கின்றேன்.
     நம் கணினியில் நாம் பெரும்பாலன செயல்களை மவுஸ்ஸின் உதவியோடே மேற்கொள்கிறோம்..அப்படி இருக்கும் சிலருக்கு தங்கள் மவுஸின் செயல்பாடுகள் மேற்கொள்வதில் சற்று சிரமமாக இருக்கும்....

     தங்களுக்கு பிடித்த மாறி தங்கள் மவுஸின் அமைப்பை மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்....அதை எவ்வாறு மேற்கொள்வது என்பதை தான் நான் இந்த பதிப்பில் தங்களுக்கு விளக்க இருக்கின்றேன்...
     தங்கள் மவுஸின் அமைப்புகளை மாற்றி அமைக்க தாங்கள் முதலில் செய்ய வேண்டியது. தங்கள் கணினியை இயக்கிக்கொள்ளுங்கள் பின்னர்

Start Menu
Control Panel
Printers And Other Hardware
Mouse
என்பதைனை தேர்வு செய்யவும்.
தற்போது தங்களுக்கு ஓர் சிறிய விண்டோ தோன்றியிருக்கும். இது தான் மவுஸின் அமைப்புகள் (Settings). முதலில் இருப்பது
Buttons என்னும் பிரிவு.

Button Configuration
     தாங்கள் வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால். எவ்வித மாற்றமும் செய்ய தேவையில்லை. ஆனால் இடக்கை பழக்கம் உள்ளவராக இருந்தால் அங்கு உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்படுத்தி விடுங்கள். இனி தங்கள் மவுஸின் செயல்பாடுகள் இடக்கைக்கு ஏற்றது போல மாறிவிடும்...



Double Click Speed
     தங்கள் மவுஸின் டபுள் கிளிக் வேகத்தை கட்டுப்படுத்த..தாங்களுக்கு ஏற்றாற் போல அமைத்து கொள்ளலாம். அதன் அருகில் Previewம் காட்டபடும்.

ClickLock
     இங்கு உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்படுத்திவிட்டால். இனி தாங்கள் ஒரு பைல் அல்லது போல்டரை இழுத்து அதாவது DRAG செய்யும் போது அந்த பைல் தங்கள் மவுஸ் கர்சருடனே ஓட்டிக்கொள்ளும்.

    இது அனைத்தும் மேற்கொண்டே பிறகு APPLY தந்து வெளியேறவும்.
அடுத்தது
Pointers பிரிவு. 
    இங்கு தங்கள் மவுஸின் வித வித செயல்படுகளுக்கு பயன்படும். கர்சரின் அமைப்புகள் தரப்பட்டு இருக்கும்..இங்கு தங்களுக்கு பிடித்த மாறி அமைத்து கொள்ளலாம்.

அடுத்தது
Pointers Options பிரிவு. இங்கு முதலில் இருப்பது.

Motion
     தங்கள் மவுஸின் நகரும் வேகத்தை மாற்றி அமைக்க தங்கள் விருப்பத்திற்கு கேற்ப அமைத்து கொள்ளலாம்.

Snap To
     இங்கு உள்ள பாக்ஸில் தாங்கள் டிக் மார்க்கை ஏற்ப்படுத்திவிட்டால்...போதும் இனி தங்கள் மவுஸ் கர்சர் Dialog Box வந்தால் தானாகவே அதன் அருகில் சென்றுவிடும்.

Visibility
Display Pointer tails
     அதாவது தங்கள் மவுஸின் கர்சர் பின்னாடி சில கர்சர்கள் வால் மாதிரி ஏற்படுத்த...இந்த முறை இது ஒரு சிறிய Animation மாதிரி. இதை மேற்கொள்ள அருகில் உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்ப்படுத்தவும்.

Show location of pointer when............
     இங்கு உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்படுத்திவிட்டால்...இனி தாங்கள் மவுஸை கொண்டு ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யும் போது Ctrl Buttonயை அழுத்தி கொண்டே செய்தால் நீங்கள் கிளிக் செய்யும் போது சிறிய வளையம் தோன்றும்..

Wheel
     இங்கு காண இருப்பது தங்கள் மவுசின் Scrolling Wheel Setting தான்.. இங்கு இருக்கும்
The following number of lines at a time: என்பதற்கு கீழ் உள்ள பாக்ஸில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அமைத்து கொள்ளலாம். இது எதற்கு என்றால் தங்கள் மவுஸின் Scroll wheelயை ஒரு முறை நகர்த்தும் போது எத்தனை கோடுகள்(Lines) நகர வேண்டும் என்பதை தேர்வு செய்யதான்.

     இவை அனைத்தையும் மேற்கொண்ட பின்னர் கடைசியாக Apply தந்து வெளியேறவும்..

"ராஜாத்தி அம்மாள் யார்?'

சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள். இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழக முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதில்: "கலைஞர் டி.வி. கருணாநிதிக்குச் சொந்தமானது அல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்' அவ்வளவே!இப்போதும் அதே சாதுர்யத்துடன் தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்போது ரசித்ததுபோல இப்போது அவரது பதிலை ரசிக்க இயலவில்லை. முந்தைய பதிலின் பின்புலத்தில் ஒரு தனிநபரின் அன்பின் விரிவும் ஆழமும் இருந்தது. இப்போதைய பதிலின் பின்புலத்தில் பொதுமக்களின் பணம், சட்ட விதிமீறல், முறைகேடு, அரசியல் ஆதாயம் எல்லாமும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. ஒரு தனிநபரின் மனைவியும் மகளும் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்திருப்பது புதிதல்ல. முடியாத செயலும் அல்ல. அது ஒருவகையில் பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். அல்லது கணவன், தந்தை வழியாகக் கிடைத்ததாக இருக்கலாம். அல்லது அவர்கள் வணிகம் நடத்தியோ, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோ சம்பாதித்ததாகக்கூட இருக்கலாம். அதேவேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் அந்த மகளோ அல்லது மனைவியோ சட்டவிதிகளை மீறியிருந்தால், பொருளாதாரக் குற்றம் செய்திருந்தால், அவர்களைத்தான் சட்டம் தண்டிக்குமே தவிர, கணவரையோ அல்லது தந்தையையோ அல்ல என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.மகள் 20 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார், மனைவி 60 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார் என்றால், அதற்கான பணம் ரூ.214 கோடியை கடனாகப் பெற்று வட்டியுடன் கடனைச் செலுத்திவிட்டார்கள் என்றால், நல்லது. அப்படியே ஆகட்டும். ஆனால், யாரோ ஒருவரால் எந்தவித அடமானமும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டது ஏன்? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது கட்சியினரான ஆ. ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் லாபம் அடைவதாக இல்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சிக்கு கடன் கொடுத்துக் கைதூக்கிவிட முன்வந்திருக்குமா என்கிற கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதிலளித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது, கலைஞர் டி.வி. செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர் அதில் பங்குதாரர் என்றால், அதனை உரிய படிவத்தில் தெரிவித்திருந்தாரா? அவை கடன்தான் என்பதைக் குறிப்பிட்டிருந்தாரா? முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 4.92 கோடி என்றால், தயாளு, ராஜாத்தி இரு மனைவிமார்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 39.42 கோடி. இப்படியிருக்க, இந்தச் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ரூ. 214 கோடி கடன், எந்த அடமானமும் இல்லாமல், அநியாய வட்டி என்றாலும் பரவாயில்லை, யாராவது தருவார்களா?மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.கஸ்தூரிபா மறுக்கிறார். ""இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்''.ஆனாலும் காந்திஜி சொல்கிறார். ""கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல'' என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.தயாளு அம்மாள் தனது மனைவி என்று ஒத்துக் கொள்கிறார். கனிமொழி தனது மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மனைவியின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார். அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பதுவரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று நாகூசாமல் கூறவும் செய்கிறார்.எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? "கடற்கரையில் காற்று வாங்கும் அண்ணாவிடம் இதையெல்லாம் கூறி வருந்துவதைத் தவிர, வேறென்ன செய்ய?' அப்படி ஓர் அண்ணா, அவருக்கு இப்படி ஒரு தம்பி!