tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 1 April 2011

பெரியார் தி.க.வினர் 71 பேர் கைது!

தஞ்சலி யோகா சமிதி நடத்தி வருபவர் சுவாமி பாபா ராம்தேவ். இவரது யோகா நிகழ்ச்சி கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் சுவாமி பாபாராம் தேவ் கலந்து கொண்டார். இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறைச்சிக்காக மாடு வெட்டு பவர்களை தூக்கில் போட வேண்டும் என சொன்ன சுவாமி பாபாராம்தேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று அதி காலை வ.உ.சி. மைதானம் முன்பு பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் சாஜித், மாவட்ட தலைவர் கோபால் ஆகியோர் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது.   போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் முத்துராஜ், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 71 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு பரபரப்பு அடங்கியது.              

You might also like:

No comments:

Post a Comment