tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday, 13 April 2011

புதிய சாதனை...

பிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல் கமிஷன் அசத்தல்...

தமிழகத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், 1967-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை எனச் சொல்லலாம்.

மதுரையில் திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் காயமடைந்தனர். எனினும், மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க, பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை தமிழக இதுவரை வாக்கு சதவீதம்...வாக்காளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தலில் பணபலத்தை இயன்ற வரையில் இம்முறை தேர்தல் ஆணையம் தடுத்திருப்பது கவனத்துக்குரியது.

விறுவிறு வாக்குப்பதிவு...

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கின. இதனால், அந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

தீவிர பாதுகாப்பு...

வன்முறையை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக தேர்தல் நடைபெறவும் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

2011 தேர்தல்...
தொகுதிகள் - 234
வேட்பாளர்கள் - 2,748
வாக்காளர்கள் - 4,71,16,687
வாக்குச்சாவடிகள் - 54,314
பாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையினர் உள்பட ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வெப் கேமரா கண்காணிப்பு...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பதற்றமானது என கண்டறியப்பட்ட 9,500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தேர்தல் ஆணையரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை... 

வாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, மே 13-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

மேலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக அதிகமாக  படித்தவர்கள் வாக்கு அதிகம் பதிவாகுது என அர்த்தம்.. அது தி மு க விற்கு அனர்த்தம்.


60 % வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்.. இப்போ தி மு கவிற்கு ....????????????

No comments:

Post a Comment