tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 1 April 2011

மவுசின் செயல்பாடுகளை தங்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைக்க


     தங்கள் மவுசின் செயல்பாடுகளை தங்களுக்கு ஏற்றது போல எப்படி மாற்றி அமைப்பது என்பதை தான் நான் தங்களுக்கு தற்போது சொல்ல இருக்கின்றேன்.
     நம் கணினியில் நாம் பெரும்பாலன செயல்களை மவுஸ்ஸின் உதவியோடே மேற்கொள்கிறோம்..அப்படி இருக்கும் சிலருக்கு தங்கள் மவுஸின் செயல்பாடுகள் மேற்கொள்வதில் சற்று சிரமமாக இருக்கும்....

     தங்களுக்கு பிடித்த மாறி தங்கள் மவுஸின் அமைப்பை மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்....அதை எவ்வாறு மேற்கொள்வது என்பதை தான் நான் இந்த பதிப்பில் தங்களுக்கு விளக்க இருக்கின்றேன்...
     தங்கள் மவுஸின் அமைப்புகளை மாற்றி அமைக்க தாங்கள் முதலில் செய்ய வேண்டியது. தங்கள் கணினியை இயக்கிக்கொள்ளுங்கள் பின்னர்

Start Menu
Control Panel
Printers And Other Hardware
Mouse
என்பதைனை தேர்வு செய்யவும்.
தற்போது தங்களுக்கு ஓர் சிறிய விண்டோ தோன்றியிருக்கும். இது தான் மவுஸின் அமைப்புகள் (Settings). முதலில் இருப்பது
Buttons என்னும் பிரிவு.

Button Configuration
     தாங்கள் வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால். எவ்வித மாற்றமும் செய்ய தேவையில்லை. ஆனால் இடக்கை பழக்கம் உள்ளவராக இருந்தால் அங்கு உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்படுத்தி விடுங்கள். இனி தங்கள் மவுஸின் செயல்பாடுகள் இடக்கைக்கு ஏற்றது போல மாறிவிடும்...



Double Click Speed
     தங்கள் மவுஸின் டபுள் கிளிக் வேகத்தை கட்டுப்படுத்த..தாங்களுக்கு ஏற்றாற் போல அமைத்து கொள்ளலாம். அதன் அருகில் Previewம் காட்டபடும்.

ClickLock
     இங்கு உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்படுத்திவிட்டால். இனி தாங்கள் ஒரு பைல் அல்லது போல்டரை இழுத்து அதாவது DRAG செய்யும் போது அந்த பைல் தங்கள் மவுஸ் கர்சருடனே ஓட்டிக்கொள்ளும்.

    இது அனைத்தும் மேற்கொண்டே பிறகு APPLY தந்து வெளியேறவும்.
அடுத்தது
Pointers பிரிவு. 
    இங்கு தங்கள் மவுஸின் வித வித செயல்படுகளுக்கு பயன்படும். கர்சரின் அமைப்புகள் தரப்பட்டு இருக்கும்..இங்கு தங்களுக்கு பிடித்த மாறி அமைத்து கொள்ளலாம்.

அடுத்தது
Pointers Options பிரிவு. இங்கு முதலில் இருப்பது.

Motion
     தங்கள் மவுஸின் நகரும் வேகத்தை மாற்றி அமைக்க தங்கள் விருப்பத்திற்கு கேற்ப அமைத்து கொள்ளலாம்.

Snap To
     இங்கு உள்ள பாக்ஸில் தாங்கள் டிக் மார்க்கை ஏற்ப்படுத்திவிட்டால்...போதும் இனி தங்கள் மவுஸ் கர்சர் Dialog Box வந்தால் தானாகவே அதன் அருகில் சென்றுவிடும்.

Visibility
Display Pointer tails
     அதாவது தங்கள் மவுஸின் கர்சர் பின்னாடி சில கர்சர்கள் வால் மாதிரி ஏற்படுத்த...இந்த முறை இது ஒரு சிறிய Animation மாதிரி. இதை மேற்கொள்ள அருகில் உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்ப்படுத்தவும்.

Show location of pointer when............
     இங்கு உள்ள பாக்ஸில் டிக் மார்கை ஏற்படுத்திவிட்டால்...இனி தாங்கள் மவுஸை கொண்டு ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யும் போது Ctrl Buttonயை அழுத்தி கொண்டே செய்தால் நீங்கள் கிளிக் செய்யும் போது சிறிய வளையம் தோன்றும்..

Wheel
     இங்கு காண இருப்பது தங்கள் மவுசின் Scrolling Wheel Setting தான்.. இங்கு இருக்கும்
The following number of lines at a time: என்பதற்கு கீழ் உள்ள பாக்ஸில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அமைத்து கொள்ளலாம். இது எதற்கு என்றால் தங்கள் மவுஸின் Scroll wheelயை ஒரு முறை நகர்த்தும் போது எத்தனை கோடுகள்(Lines) நகர வேண்டும் என்பதை தேர்வு செய்யதான்.

     இவை அனைத்தையும் மேற்கொண்ட பின்னர் கடைசியாக Apply தந்து வெளியேறவும்..

"ராஜாத்தி அம்மாள் யார்?'

சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள். இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழக முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதில்: "கலைஞர் டி.வி. கருணாநிதிக்குச் சொந்தமானது அல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்' அவ்வளவே!இப்போதும் அதே சாதுர்யத்துடன் தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்போது ரசித்ததுபோல இப்போது அவரது பதிலை ரசிக்க இயலவில்லை. முந்தைய பதிலின் பின்புலத்தில் ஒரு தனிநபரின் அன்பின் விரிவும் ஆழமும் இருந்தது. இப்போதைய பதிலின் பின்புலத்தில் பொதுமக்களின் பணம், சட்ட விதிமீறல், முறைகேடு, அரசியல் ஆதாயம் எல்லாமும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது. ஒரு தனிநபரின் மனைவியும் மகளும் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்திருப்பது புதிதல்ல. முடியாத செயலும் அல்ல. அது ஒருவகையில் பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். அல்லது கணவன், தந்தை வழியாகக் கிடைத்ததாக இருக்கலாம். அல்லது அவர்கள் வணிகம் நடத்தியோ, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோ சம்பாதித்ததாகக்கூட இருக்கலாம். அதேவேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் அந்த மகளோ அல்லது மனைவியோ சட்டவிதிகளை மீறியிருந்தால், பொருளாதாரக் குற்றம் செய்திருந்தால், அவர்களைத்தான் சட்டம் தண்டிக்குமே தவிர, கணவரையோ அல்லது தந்தையையோ அல்ல என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.மகள் 20 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார், மனைவி 60 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார் என்றால், அதற்கான பணம் ரூ.214 கோடியை கடனாகப் பெற்று வட்டியுடன் கடனைச் செலுத்திவிட்டார்கள் என்றால், நல்லது. அப்படியே ஆகட்டும். ஆனால், யாரோ ஒருவரால் எந்தவித அடமானமும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டது ஏன்? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது கட்சியினரான ஆ. ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் லாபம் அடைவதாக இல்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சிக்கு கடன் கொடுத்துக் கைதூக்கிவிட முன்வந்திருக்குமா என்கிற கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதிலளித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது, கலைஞர் டி.வி. செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர் அதில் பங்குதாரர் என்றால், அதனை உரிய படிவத்தில் தெரிவித்திருந்தாரா? அவை கடன்தான் என்பதைக் குறிப்பிட்டிருந்தாரா? முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 4.92 கோடி என்றால், தயாளு, ராஜாத்தி இரு மனைவிமார்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 39.42 கோடி. இப்படியிருக்க, இந்தச் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ரூ. 214 கோடி கடன், எந்த அடமானமும் இல்லாமல், அநியாய வட்டி என்றாலும் பரவாயில்லை, யாராவது தருவார்களா?மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.கஸ்தூரிபா மறுக்கிறார். ""இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்''.ஆனாலும் காந்திஜி சொல்கிறார். ""கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல'' என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.தயாளு அம்மாள் தனது மனைவி என்று ஒத்துக் கொள்கிறார். கனிமொழி தனது மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மனைவியின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார். அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பதுவரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று நாகூசாமல் கூறவும் செய்கிறார்.எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? "கடற்கரையில் காற்று வாங்கும் அண்ணாவிடம் இதையெல்லாம் கூறி வருந்துவதைத் தவிர, வேறென்ன செய்ய?' அப்படி ஓர் அண்ணா, அவருக்கு இப்படி ஒரு தம்பி!

பெரியார் தி.க.வினர் 71 பேர் கைது!

தஞ்சலி யோகா சமிதி நடத்தி வருபவர் சுவாமி பாபா ராம்தேவ். இவரது யோகா நிகழ்ச்சி கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் சுவாமி பாபாராம் தேவ் கலந்து கொண்டார். இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறைச்சிக்காக மாடு வெட்டு பவர்களை தூக்கில் போட வேண்டும் என சொன்ன சுவாமி பாபாராம்தேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று அதி காலை வ.உ.சி. மைதானம் முன்பு பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் சாஜித், மாவட்ட தலைவர் கோபால் ஆகியோர் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது.   போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் முத்துராஜ், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 71 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு பரபரப்பு அடங்கியது.              

You might also like:

1 April 2011 "டாஸ்மாக்' கடைகளுக்கு சீல் வைக்க திட்டம் : பதுக்கலை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி!

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், மதுபானம் வாங்கிக் கொடுப்பதை தடுக்கும் வகையில், "டாஸ்மாக்' கடைகள், எந்நேரமும் மூடப்படலாம் என, தகவல் பரவியுள்ளதால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில், தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், ஏப்ரல் 13ம் தேதிக்கு முன், 10 நாள், "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி தேர்தல் கமிஷன் கடந்த வாரமே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில், கடை மூடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என, அதிகாரிகள் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. தேர்தல் ஓட்டுப் பதிவு அமைதியாக நடக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள், தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் மூடப்படுவது வழக்கம். தற்போது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 10ல் மாநில எல்லைகளை சீல் வைத்து கடும் சோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறும், டாஸ்மாக் கடைகள், இரண்டு நாட்களுக்கு முன், (ஏப்., 11ம் தேதி) மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தகவல்கள் ஊழியர்கள் மத்தியிலும் பரவியது.

இந்நிலையில், கடை மூடப்படும் தேதி அறிவிக்கப்பட்டால், பதுக்கல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகள் மொத்தமாக சரக்குகளை கொள்முதல் செய்வர். சரக்குகளை வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடக்கக் கூடும் என, அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, "டாஸ்மாக்' கடைகளை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அதிகாரிகள் மூட முடிவு செய்துள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன், அதாவது, ஏப்ரல் 5ம் தேதி மாலையில், கடைகள் அனைத்தையும் அதிகாரிகளே அதிரடியாக சீல் வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த உத்தேச தேதிக்கு முன்னதாக கடைகளை மூடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். "டாஸ்மாக்' கடைகள் மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்படும் பார்கள், லைசென்ஸ் பெற்ற மதுபான பார்களையும் மூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அதிகாரிகளின் திட்டத்தின்படி, கடைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, அனைத்து சாவிகளும் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடையின் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு கடைக்கும் ஊழியர்களில் ஒருவர், போலீசாரையும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பாலானோர் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதையே விரும்புவதாகவும், இந்த கூட்டணிக்கே ஓட்டளிக்க இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆங்கில இதழ் நடத்திய நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் டைரக்டர் ராஜநாயகம் தலைமையில் தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதன்படி 48.6 சதவீதத்தினர் அ.தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டளிக்கவிருப்பதாகவும், 41.7 சவீதத்தினர் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

மார்ச் மாதம் 21 ம் தேதி முதல் 29 ம் தேதிவரை எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 51. 1 சதவீதத்தினர் அ.தி.மு.க கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும், 36. 7 சதவீதத்தினர் மட்டும் தி.மு.க,.கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., 105 சீட்களையும், தி.மு.க., 70 சீட்களையும் பெறும் என்றும் , இரு கட்சிகளும் செல்வாக்குள்ள 59 தொகுதிகள் மிக கடும் போட்டியாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம்விவகாரத்தினால் ராஜா கைது , விலைவாசி உயர்வு, குடிநீர் பற்றாக்குறை , மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளதாவுகவும் தெரியவந்ததாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் நெருங்கும்நேரத்தில் தி.மு.க., கூட்ணியில் பிரசார யுக்திகள் கையாளும் விதத்தில் இந்த கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் ! பிரபல இந்தியா டூடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் நடத்திய கணிப்பிலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டூ டே இதழ்- ஓ.ஆர்.ஜி., இணைந்து வெளியிட்டுள்ள கணிப்பில் ; 164 இடங்களை பிடித்து இந்த கூட்டணி அமோகமாக ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க., கூட்டணி மொத்தம் பதிவாகும் ஓட்டில் 50 சதம் கைப்பற்றும் என்றும் 50.5 சதவீதத்தினர் ஊழல் ஒரு முக்கிய பிரச்னையாக கருதுவதாகவும், இவர்கள் ராஜா விவகாரம் குறித்த தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

விலைவாசி பிரச்னை, முக்கிய பிரச்சனையாக மக்களை ( 59. 3 சதம் ) பாதித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, இலங்கை அரசினால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஊழல் செய்வதில் தி.மு.க.,வை விட, ஜெயலலிதா (அம்மா ) பரவாயில்லை என்றும் 39. 3 சதவீதத்தினர் கூறியுள்ளனர். ஜெயலலிதா - கருணாநிதி இவர்களில் யார் முதல்வராக விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 36.1 சதவீதத்தினர் ஜெ.,வுக்கும், 34.1 சதவீதத்தினர் கருணாநிதியே முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு 50 சதம், தி.மு.க., கூட்டணிக்கு 45 சதமும் ஆதரவு உள்ளன. ஆட்சி மாற்றம் வேண்டும் என 51 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.


அவுட்லுக், எம்டிஆர்ஏ கணிப்பு: அவுட்லுக் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54 சதவீதம் பேரும், திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4 சதவீதத்தினரும் , மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.