tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Tuesday, 31 August 2010

விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்!



விவேகானந்தரின்
மந்திர வார்த்தைகள்!


சுவாமி விவேகானந்தர், மாக்களை மக்களாக்கவும், மனிதர்களைப் புனிதர்களாக்கவும் வந்த இனியவர். அவரது வார்த்தைகளுக்கு இருந்த சக்தி மகத்தானது.

சுவாமிஜியின் கருத்துக்களின் மகிமையை உணர்ந்த மகாத்மா காந்தி, அதனால் தமது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்ததாகக் கூறினார்.

சுவாமிஜியின் வாழ்க்கையைப் படித்த நேதாஜி, அவரது காலடியில் அமர்ந்து ஆன்மிகப் பாடம் பயில விரும்புவதாகக் கூறினார்.

பாரதியார், ‘சுவாமி விவேகானந்தரின் வேதாந்தப் பிரசாரமானது, இந்திய விடுதலை முயற்சிக்குத் தாய் முயற்சி ஆகும்’ என்றார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரொமா ரோலா, சுவாமிஜியின் சக்திமிக்க வார்த்தைகளை முப்பது வருடத்துக்குப் பிறகு படித்தபோதும், தம்முள் ஒரு மின்சார சக்தி பாய்வதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சக்தியைத் தலைவர்களும் அறிஞர்களும் மட்டுமா உணர்ந்தார்கள்? இல்லை. சிரத்தையுடன் கேட்ட ஒவ்வொருவருக்கும் அது கிடைத்தது.

ஐம்பதாண்டுகளில் வணங்க
வேண்டிய தெய்வம்

இந்திய அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் நம் தலைவர்கள் தீவிரவாதம், மிதவாதம் என்று பிரிந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். சுதந்திரம் கிடைத்த பிறகு, அதை நல்ல முறையில் அனுபவிக்கவும், பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணவும் மக்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது.

அப்படி முயன்றவர்களுக்கு முதல் உத்வேகம் தந்தவர் சுவாமி விவேகானந்தர்தான். ஆங்கிலேயரை விரட்டும் முன்பு நாம் பாரதத் தாயிடம் பக்தியும், சிரத்தையும் கொண்டு அவளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது விவேகானந்தரின் எண்ணம்.

அதற்காக அவர், ‘இனி வரும் 50 ஆண்டுகளுக்கு நம் ஆதார சுருதி, ஈடு இணையற்ற நம் இந்தியத் தாயாக இருக்கட்டும். அதுவரை மற்ற எல்லா தெய்வங்களும் நம் மனதிலிருந்து மறைந்து விடட்டும்’ என்றார் (சென்னையில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு ‘இந்தியாவின் எதிர்காலம்’).

சுவாமிஜி அவ்வாறு கூறியது 14.2.1897-ல். அந்த ஆண்டுடன் ஓர் ஐம்பதைக் கூட்டிப் பாருங்கள்.

அங்கு வருவது 1947 மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரமும்தான்.

இந்தியா மீது எப்போது
பக்தி வந்தது?


சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி கிறிஸ்டீன். அவர் தமது நினைவலைகளில் மூழ்கி ஒரு முத்தை எடுத்து நம் முன் வைக்கிறார். ‘எங்களுக்கு (மேலைநாட்டுச் சீடர்கள்) இந்தியா மீது எப்போது பக்தி வந்தது தெரியுமா?’ என்று கேட்டு, அவரே பதிலைக் கூறுகிறார்.

“சுவாமிஜி தமது மதுரமான குரலில் ‘இந்தியா’ என்ற வார்த்தையை உச்சரித்த அன்றே, எங்களுக்கு இந்தியாவின் மீது பக்தி உண்டாயிற்று.”

இந்தியாவை நேசி!

மிஸ். மெக்லவுட், சுவாமிஜியின் மற்றொரு சிஷ்யை. அமெரிக்காவின் சிறந்த பெண்மணி. மிஸ். மெக்லவுட், மேல்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தின் திரட்சி சுவாமிஜி என்று உணர்ந்திருந்த மெக்லவுட் அம்மையார், மேலைநாடுகளில் அவரது சிந்தனைகளை முழு மூச்சுடன் பரப்பி வந்தார். பல நல்ல காரியங்களை அவர் செய்வதற்கு அவருக்குச் சக்தி எங்கிருந்து கிடைத்தது?

தமது குருவான சுவாமிஜியிடம் மெக்லவுட் ஒரு முறை, ‘சுவாமிஜி, உங்களுக்கு எந்த வகையில் நான் சேவையாற்ற வேண்டும்?’ என்று கேட்டார்.

சுவாமிஜி அப்போது தீர்க்கமாக, ‘லிஷீஸ்மீ மிஸீபீவீணீ (இந்தியாவை நேசி)’ என்றார்.

மந்திரம் போன்ற அந்த அறிவுரைதான் அவரை அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட வைத்தது; இந்திய வாழ்க்கை முறையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கவும் வைத்தது.

இந்தியாவை மறந்துவிடு!

சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிகப் பிரசாரம் செய்தார். மேலைநாட்டுச் சிந்தனைகளிடையே இன்று நாம் காணும் ‘இந்தியச் செல்வாக்கு’ சுவாமிஜியால் துவங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த பல ஆன்மிகச் சாதகர்களுக்கு உண்மையான ஆன்மிகத்தை வழங்க நினைத்தார் அவர்.

உலகுக்கும், சிறப்பாக இந்தியாவுக்கும் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருந்த அவருக்கு, ஆன்ம தாகம் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே உடனிருந்து ஆன்ம சாதனைகளைக் கற்றுத் தர நேரமிருந்தது.

அதனால் சுவாமிஜி தமது சகோதரச் சீடரான சுவாமி துரியானந்தரை அமெரிக்காவுக்கு வரவழைத்தார். அப்போது அவர் கூறிய வார்த்தை இது.

‘மேலைநாட்டினருக்கு உண்மையான ஆன்மிக வாழ்க்கையை வாழ்ந்து காட்டு; இந்தியாவை மறந்துவிடு.’

அதன்படி சுவாமி துரியானந்தர் அமெரிக்கா சென்று சாந்தி ஆசிரமம் என்ற ஒன்றை ஆரம்பித்துப் பல சாதகர்களை உருவாக்கினார். இன்றும் அந்த இடம் சாதகர்களுக்கு ஆன்மிக ஆர்வத்தைத் தூண்டுவதாக விளங்குகிறது.

மறந்துவிடு வங்காளத்தை!

ஹரித்துவார் பகுதியில், பல சாதுக்களும் யாத்ரீகர்களும் போதிய மருத்துவ வசதியின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரச்னை ஆண்டவனிடமிருந்து அவர்களது மனங்களை அடிக்கடி திசை திருப்பிக் கொண்டிருந்தது.

சுவாமி விவேகானந்தர் தமது பரிவ்ராஜக காலத்தில் அங்கு சென்றிருந்தபோது அதைக் கவனித்திருந்தார்.

அதனால் அவர் தமது சீடர் சுவாமி கல்யாணானந்தரிடம், அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற பல வகையிலும் தூண்டினார். முடிவில், ‘மக்களுக்குச் சேவை செய், வங்காளத்தை மறந்துவிடு’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

அன்று சுவாமிஜி கூறிய அந்த மந்திரச் சொற்கள் இன்றும் எப்படிச் செயலாற்றுகின்றன தெரியுமா?

தம் முழு ஆற்றலையும் திரட்டி சுவாமி கல்யாணானந்தர், ஹரித்துவாரில் சேவாசிரமத்தை ஆரம்பித்து அங்குள்ள ஏழை எளியவருக்கும், யாத்ரீகர்களுக்கும் மருத்துவ சேவை செய்து வந்தார். அவரது உழைப்பாலும், தியாகத்தாலும் நூறாண்டுகளுக்கும் மேலாக இன்றும் அந்த சேவாசிரமம் செம்மையாக இயங்கி வருகிறது.

‘வங்காளத்தை மறந்துவிடு’ என்று சுவாமிஜி கூறியதை கல்யாணானந்தர் அப்படியே ஏற்றுக் கொண்டார். அதனால் 30 வருடங்களுக்கும் மேல் கங்கலில் பணியாற்றிய சுவாமி கல்யாணானந்தர், தம் சொந்த மாநிலமான வங்காளத்துக்கு ஒருமுறைகூடச் செல்லவில்லை. குரு வாக்கியத்தை மதிப்பது அந்தத் துறவிக்குத்தான் என்னே நிஷ்டை!

‘இந்தியாவை நேசி!’ ‘இந்தியாவை மறந்துவிடு!’

இப்படி, ‘இந்தியாவை நேசி’ என்று கூறி, சுவாமிஜி ஒரு சீடருக்கு உத்வேகம் ஊட்டினார். மறுபுறம் மேலைநாட்டு மக்களும் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக மற்றொருவரைச் சேவை செய்யவும் தூண்டினார். அதற்காக ‘இந்தியாவை மற’ என்றார்.

இப்படி யார் யாருக்கு எந்தெந்த உபதேசங்களைத் தந்தருள வேண்டும் என்று ஒரு சிறந்த குருவால் மட்டுமே போதிக்க முடியும்.

சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், தங்களது துறைகளில் சாதனை புரிந்தார்கள் என்பதை நாம் மேலே கண்டோம். அவரது வார்த்தைகளை இன்று படிப்பவர்களுக்கும் அந்தச் சக்தி வருமா?

ஆம். அவரது வார்த்தைகளுக்கு அன்றும் சக்தி இருந்தது. இன்றும் சக்தி உண்டு.

லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும், சாதிக்க நினைப்பவர்களுக்கும் சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும், இறைவனுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுக்கும், அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன.

தனி மனித, சமூக முன்னேற்றத்துக்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார்.

அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே, அவை நம்முள் கிளர்ந்தெழச் செய்யும் சக்தியைக் கொண்டே நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.

இதோ சில சக்தி வாய்ந்த மந்திரங்கள்.

‘நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.’

‘எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே உள்ளன. உன்னால் எதையும் சாதிக்க முடியும்.’

‘நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாக வேண்டும்; ஆகியே தீர வேண்டும் என்பதே நான் கூறுவது.’

சுவாமிஜியின் இதுபோன்ற பொன்மொழிகள் உணர்ச்சி வேகத்தில் கூறப்பட்டவை அல்ல.

சுவாமி விவேகானந்தர் தமது ஒரு கடிதத்தில், ‘யாரெல்லாம் இந்தக் கடிதத்தைப் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் என் சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள்...’ என எழுதியுள்ளார்.

மற்றொரு கடிதத்தில், ‘நான் உங்களுடன்தான் இருக்கிறேன். நான் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகும் எனது சக்தி உங்களுடன் செயல்படும்’ என்கிறார்.

சுவாமிஜியின் சீடர் மன்மதநாத் கங்குலி. அவர் ஒருமுறை சுவாமிஜியிடம், ‘சுவாமிஜி, நான் உங்களது சொற்படி நடக்காமல், வாழ்க்கையில் வழுக்கி விழுந்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன்பின் எனக்கென்ன நடக்கும்?’ என்று கேட்டார்.

உடனே சுவாமிஜி அந்தச் சீடரைத் தீர்க்கமாகப் பார்த்து, ‘நீ எங்கு சென்றாலும், எந்த ஆழத்துக்குச் சென்றாலும் உன் குடுமியைப் பிடித்து இழுத்தாவது உன்னைக் கரையேற்ற வேண்டியது என் கடமை’ என்றார்.

இப்படி குருசக்தியுடன் கூடிய சுவாமி விவேகானந்தரின் திருவுருவமும், கருத்துகளும், அவரது சாந்நித்தியமும் நம்முள் பேராற்றலைத் தூண்டக்கூடியவை. அந்த அருளார்ந்த சக்தியை வாரி வாரிப் பருகுவோம்.


சுவாமி விமூர்த்தானந்தர்
ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Thursday, 5 August 2010

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன?
டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.
140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.
டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.
அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.
டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.
இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.
இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.
டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.
இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.
நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.
போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.
மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?
இப்படிதான் டிவிட்டர் துவங்கியது.

Thursday, 29 July 2010

இந்திய வரலாறு (வாஸ்கோடகாமாவின் வருகை) – பாகம் 1

1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்று பொழுது விடிந்த போது இந்திய சரித்திரத்தில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
ஆம்! அன்றுதான். பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த நல்வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின், கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில் வந்து சேர்ந்த தினம்.
யார் இந்த வாஸ்கோடகாமா? எதற்கு இவர் இந்தியாவிற்கு வந்தார்? எப்படி இங்கு வந்தார்? எதனால் இவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்தது? என்று பல கேள்விகள் எழுகிறதல்லவா. இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி காலச்சக்கரத்தில் ஏறி சற்றேப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.
கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து, 16 ஆம் நூற்றாண்டு வரையிலான ஐந்நூறு ஆண்டுகளில், இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையே இருந்த வர்த்தக உறவுகள் வலுவானதாய் இருந்தன. குறிப்பாக ஐரோப்பாவில் அதிகம் உட்கொள்ளப் படும் அசைவ உண்வுகளுக்கு சுவையூட்டும் ஏலம், மிளகு, மிளகாய், இலவங்கம் போன்ற வாசனைப் பொருட்களிற்கு, ஐரோப்பிய சந்தைகளில் தேவை மிக அதிகமாக இருந்தது.15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும், மேலை நாடுகளிற்குமிடையே வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்தன.
1.எகிப்தின் வழியாக ஐரோப்பாவை அடையும் மார்க்கம்.
2.ஆக்ஸஸ், காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும் வடக்கு வழி மார்க்கம்.
3.சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலம் ஐரோப்பாவை அடையும் இடைப்பட்ட மார்க்கம்.
ஆனால் இம்மூன்று வியாபார மார்க்கங்களும், துருக்கிப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழே இருந்தன. எனவே துருக்கியர்கள் விதித்த தீர்வைக்குட்பட்டே எவரும் வணிகம் செய்ய வேண்டி இருந்தது மட்டுமின்றி, ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையேயிருந்த பகைமை உறவும் பெரும் பிரச்சினையாய் இருந்தது.
இந்த காரணங்களால், ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமிடையேயான புதிய மற்றும் நேரடி கடல் வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர்கள் ஸ்பானியரும், போர்த்துக்கீசியருமே. ஆனால் இதில் முதலில் வெற்றி கண்டவர்கள் போர்த்துக்கீசியர்களே.
அப்போதைய இளவரசர் ஹென்றி இதற்குத் தேவையான முழு உதவியையும், ஆதரவையும் வழங்கினார்.இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் காலூன்றி, பின்னர் 1471ல் பூமத்திய ரேகையைக் கடந்தனர். 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் 1498 ல் இந்தியாவை வந்தடைந்தனர்.
கள்ளிக்கோட்டைக்கு வாஸ்கோடகாமா வந்தடைந்த போது, இங்கு நிலவிய அரசிய்ல் சூழ்நிலை போர்த்துக்கீசியருக்கு சாதகமாகவே இருந்தது. அப்போது கள்ளிக்கோட்டை ஜமோரின் எனப்படும் இந்து மத அரசரால் ஆளப்பட்டு வந்தது. கள்ளிக்கோட்டையைத் தவிர கொச்சி, கண்ணனூர், விசயநகரம் ஆகிய இடங்கள் இந்து மத அரசர்களாலும், டில்லி,பீஹார், குஜராத், பீஜப்பூர், அகமது நகர் ஆகிய இடங்கள் முஸ்லீம் அரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன.
இவற்றுள் இந்து மன்னர்கள் கோலோச்சி வந்த கேரளக் கடற்கரைப்பகுதியில் வாஸ்கோடகாமா காலடி வைத்ததால், அப்பிரதேச மன்னர்களின் ஆதரவு எடுத்த எடுப்பிலேயே போர்த்துக்கீசியருக்கு கிட்டியது. அது வரை கடல்வழியின் மூலம் இந்திய நாட்டின் வர்த்தக முற்றுரிமையை (Trade Monopoly) முஸ்லீம் வர்த்தகர்களே பெற்றிருந்ந்தனர்.
அந்த சமயத்தில் வாஸ்கோடகாமா கண்டு பிடித்த கடல் மார்க்கமும், இந்து அரசர்களிடம் அவர் பெற்ற ஆதரவும் இந்த முற்றுரிமைக்கு சவால் விடுவதாய் இருந்தது. இது முஸ்லீம் அரசர்களுக்கு, இந்து அரச்ர்களிடமும், போர்த்துக்கீசியர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதைத்தான் இந்தியவுக்குச் செல்வதற்கென கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடல் மார்க்கம் பண்பாட்டு உலகத்தின் மீது ஏற்படுத்திய விளைவுகளைப் போன்று வேறெந்தச் செயலும் இடைக்கால வரலாற்றில் ஏற்படுத்தியிருக்க வில்லைஎன்று சர்.டெனிஸன் ராஸ் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.
இவ்வாறாக வாஸ்கோடகாமாவின் கண்டுபிடிப்பும், வருகையும், இந்திய அரசியலிலும், வாணிகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டு வருவதற்கான, அடிமைத்தனத்திற்கான விதை தெரிந்தோ தெரியாமலோ, வாஸ்கோடகாமாவால் மெல்ல அன்று விதைக்கப்பட்டது.
பி.கு: எப்படியோ ஒரு வழியாக இந்தத் தொடரை தொடங்கியாயிற்று. போகப் போக இது குறித்தான சரித்திர ஆதாரங்களை வேண்டியும், இதிலுள்ள நிகழ்வுகள் குறித்தும் பல்வேறு வகையான விவாதங்கள் வரலாம். எது எப்படியாயினும் உங்களது கருத்துக்களை தயங்காமல் தெரிவியுங்கள்.

Tuesday, 27 July 2010

பயர்பாக்ஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

இணையத்தில் எளிதாகவும், வேகமாகவும் உலா வர கீழே தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம் இணையப் பயணத்தில் நேரம் மிச்சமாவதுடன், நம் உழைப்பும் தேவையற்ற வகையில் செலவாகாது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
Alt + Left Arrow:  இணைய தளம் ஒன்றை பின்பக்கமாகத் தள்ளுகிறது. அதாவது குறிப்பிட்ட தளத்திற்கு முன் உள்ள பக்கத்திற்கு உங்களை மாற்றுகிறது.
Alt + Right Arrow:  மேலே கூறியதன் மாற்றாகச் செயல்படும்
F5: அப்போதைய டேப், பிரேம் மற்றும் இணைய தளத்தினைப் புதுப்பிக்கும்
F11: அப்போதைய இணைய தளத்தினை முழுத் திரையில் காட்ட உதவும். மீண்டும் பழைய நிலைக்குக் காட்டவும் இதனைப் பயன்படுத்தலாம்.
Esc: இறக்கப்படும் ஓர் இணைய தளத்தினை நிறுத்திவிடலாம்.
Ctrl + ( or +): இந்த கீ இணைப்பில், பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தின் டெக்ஸ்ட் எழுத்துக்கள் அளவு பெரியதாகலாம், சிறியதாகலாம். 
Ctrl + Enter:  இணைய தள முகவரி ஒன்றின் பெயர் மட்டும் கொடுத்து, இவற்றைத் தட்டினால் முழுவதுமாகக் கிடைக்கும். (.com என்பதில் முடியும் தளப் பெயர் மட்டும்) எடுத்துக்காட்டாக, http://www.dinamalar.com என்பதற்கு dinamalar என டைப் செய்து, இந்த கீகளை அழுத்தவும். 


Shift + Enter:  மேலே சொன்னபடி ".net"  என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும் .  
Ctrl + Shift + Enter:  மேலே குறிப்பிட்டுள்ளபடி ".org" என முடியும் தளங்களுக்கு இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்.  
Ctrl + Shift + Del:  இந்த கீகளைப் பயன்படுத்தி Clear Data என்ற விண்டோவினைத் திறந்து, நம் பெர்சனல் டேட்டாக்களை நீக்கலாம்.  
Ctrl + D: அப்போது பயன்பாட்டில் உள்ள தளத்திற்கான புக் மார்க் ஒன்றை ஏற்படுத்தும்.  
Ctrl + I: இருக்கின்ற அனைத்து புக்மார்க்குகளையும் காட்டும்.  
Ctrl + J: டவுண்லோட் விண்டோவினைக் காட்டும்.
Ctrl + N: புதிய பிரவுசர் விண்டோவினைத் திறக்கும்.
Ctrl + P: அப்போதைய இணையப் பக்கத்தினை அச்சிட.
Ctrl + T:  புதிய டேப் ஒன்று திறக்கப்படும்.
Ctrl + F4 or Ctrl +W: அப்போதைய டேப்பினை அப்போதைக்கு மூடும்.
Ctrl + Shift + T: அப்போது மூடப்பட்ட டேப்பில் இருந்த விண்டோவினைத் திறக்கும்.
Ctrl + Tab: திறக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டேப்கள் வழியாகச் செல்ல இவை உதவும்.
Spacebar:  இணையதளப் பக்கத்தில் கீழாக ஒரு பக்கம் செல்ல இந்த கீகள் பயன்படுத்தப்படுகின்றன.
Shift + Spacebar:  இணையதளப் பக்கம் ஒன்று மேலாகச் செல்லும்.
Alt + Down arrow:  டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்த அல்லது கீழ்விரி மெனுவில் தந்த டெக்ஸ்ட் அனைத்தையும் காட்டும்.

Sunday, 11 July 2010

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு

பிறப்பு ஜனவரி 12 1863
கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
இறப்பு ஜூலை 4 1902 (அகவை 39)
பேலூர், கல்கத்தா, இந்தியா

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

வாழ்க்கை

பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்

விக்கிமூலத்தில் பின் வரும் தலைப்புக்கான மூலம் தொகுக்கப்பட்டுள்ளது:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.WHAT A MAN YA

விவேகானந்தரின் கருத்துக்கள்

  • மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

    விவேகானந்தரின் பொன்மொழிகள்
    கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.
    [1]

    உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
    [2]

    செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
    [3]

    வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.