tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 1 April 2011

பெரியார் தி.க.வினர் 71 பேர் கைது!

தஞ்சலி யோகா சமிதி நடத்தி வருபவர் சுவாமி பாபா ராம்தேவ். இவரது யோகா நிகழ்ச்சி கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் சுவாமி பாபாராம் தேவ் கலந்து கொண்டார். இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறைச்சிக்காக மாடு வெட்டு பவர்களை தூக்கில் போட வேண்டும் என சொன்ன சுவாமி பாபாராம்தேவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று அதி காலை வ.உ.சி. மைதானம் முன்பு பெரியார் திராவிடர் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் சாஜித், மாவட்ட தலைவர் கோபால் ஆகியோர் தலைமையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது.   போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் முத்துராஜ், இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 71 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு பரபரப்பு அடங்கியது.              

You might also like:

1 April 2011 "டாஸ்மாக்' கடைகளுக்கு சீல் வைக்க திட்டம் : பதுக்கலை தடுக்க தேர்தல் கமிஷன் அதிரடி!

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள், மதுபானம் வாங்கிக் கொடுப்பதை தடுக்கும் வகையில், "டாஸ்மாக்' கடைகள், எந்நேரமும் மூடப்படலாம் என, தகவல் பரவியுள்ளதால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில், தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும், ஏப்ரல் 13ம் தேதிக்கு முன், 10 நாள், "டாஸ்மாக்' கடைகளை மூடும்படி தேர்தல் கமிஷன் கடந்த வாரமே அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியது. இந்நிலையில், கடை மூடும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், அது பதுக்கலுக்கு வழி வகுத்து விடும் என, அதிகாரிகள் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. தேர்தல் ஓட்டுப் பதிவு அமைதியாக நடக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள், தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் மூடப்படுவது வழக்கம். தற்போது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதிரடி சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஓட்டுப் பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 10ல் மாநில எல்லைகளை சீல் வைத்து கடும் சோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறும், டாஸ்மாக் கடைகள், இரண்டு நாட்களுக்கு முன், (ஏப்., 11ம் தேதி) மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து தகவல்கள் ஊழியர்கள் மத்தியிலும் பரவியது.

இந்நிலையில், கடை மூடப்படும் தேதி அறிவிக்கப்பட்டால், பதுக்கல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகள் மொத்தமாக சரக்குகளை கொள்முதல் செய்வர். சரக்குகளை வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடக்கக் கூடும் என, அதிகாரிகளுக்கு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு, "டாஸ்மாக்' கடைகளை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அதிகாரிகள் மூட முடிவு செய்துள்ளனர். ஓட்டுப் பதிவுக்கு ஒரு வாரத்துக்கு முன், அதாவது, ஏப்ரல் 5ம் தேதி மாலையில், கடைகள் அனைத்தையும் அதிகாரிகளே அதிரடியாக சீல் வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த உத்தேச தேதிக்கு முன்னதாக கடைகளை மூடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். "டாஸ்மாக்' கடைகள் மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்படும் பார்கள், லைசென்ஸ் பெற்ற மதுபான பார்களையும் மூட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அதிகாரிகளின் திட்டத்தின்படி, கடைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு, அனைத்து சாவிகளும் மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கடையின் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு கடைக்கும் ஊழியர்களில் ஒருவர், போலீசாரையும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பாலானோர் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதையே விரும்புவதாகவும், இந்த கூட்டணிக்கே ஓட்டளிக்க இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆங்கில இதழ் நடத்திய நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் டைரக்டர் ராஜநாயகம் தலைமையில் தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதன்படி 48.6 சதவீதத்தினர் அ.தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டளிக்கவிருப்பதாகவும், 41.7 சவீதத்தினர் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

மார்ச் மாதம் 21 ம் தேதி முதல் 29 ம் தேதிவரை எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 51. 1 சதவீதத்தினர் அ.தி.மு.க கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும், 36. 7 சதவீதத்தினர் மட்டும் தி.மு.க,.கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., 105 சீட்களையும், தி.மு.க., 70 சீட்களையும் பெறும் என்றும் , இரு கட்சிகளும் செல்வாக்குள்ள 59 தொகுதிகள் மிக கடும் போட்டியாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம்விவகாரத்தினால் ராஜா கைது , விலைவாசி உயர்வு, குடிநீர் பற்றாக்குறை , மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளதாவுகவும் தெரியவந்ததாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் நெருங்கும்நேரத்தில் தி.மு.க., கூட்ணியில் பிரசார யுக்திகள் கையாளும் விதத்தில் இந்த கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் ! பிரபல இந்தியா டூடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் நடத்திய கணிப்பிலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டூ டே இதழ்- ஓ.ஆர்.ஜி., இணைந்து வெளியிட்டுள்ள கணிப்பில் ; 164 இடங்களை பிடித்து இந்த கூட்டணி அமோகமாக ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க., கூட்டணி மொத்தம் பதிவாகும் ஓட்டில் 50 சதம் கைப்பற்றும் என்றும் 50.5 சதவீதத்தினர் ஊழல் ஒரு முக்கிய பிரச்னையாக கருதுவதாகவும், இவர்கள் ராஜா விவகாரம் குறித்த தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

விலைவாசி பிரச்னை, முக்கிய பிரச்சனையாக மக்களை ( 59. 3 சதம் ) பாதித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, இலங்கை அரசினால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஊழல் செய்வதில் தி.மு.க.,வை விட, ஜெயலலிதா (அம்மா ) பரவாயில்லை என்றும் 39. 3 சதவீதத்தினர் கூறியுள்ளனர். ஜெயலலிதா - கருணாநிதி இவர்களில் யார் முதல்வராக விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 36.1 சதவீதத்தினர் ஜெ.,வுக்கும், 34.1 சதவீதத்தினர் கருணாநிதியே முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு 50 சதம், தி.மு.க., கூட்டணிக்கு 45 சதமும் ஆதரவு உள்ளன. ஆட்சி மாற்றம் வேண்டும் என 51 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.


அவுட்லுக், எம்டிஆர்ஏ கணிப்பு: அவுட்லுக் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54 சதவீதம் பேரும், திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4 சதவீதத்தினரும் , மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, 29 March 2011

System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்) வணக்கம் நண்பர்களே! தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்.... என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது..... அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore என்னும் ஒரு வழி உள்ளது... இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..! System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்.... இதை எப்படி மேற்கொள்வது..... முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode என்பதை தெர்ந்துடுங்கள்... தற்போது...தாங்கள் கணினியில் Control Panelலை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Click செய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்... அதில் மூன்று Optionகள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும். அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date).. மிக்க நன்றி!.......நண்பர்களே...தாங்களுக்கு பிடித்து இருந்தால் தாங்கள் கருத்துகளை கூறாலாம்.... Image Help

     தங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்பது எப்படி? தாங்கள் அழித்த பைல் Recycle Binயில் இருந்தால் சரி....அதை Restore தந்து மீண்டும் பெறலாம், ஆனால் Recycle Bin இருந்து அழிந்த பைல்களை மீட்பது அதாவது மீண்டும் பெறுவது என்பதை பற்றி தான் கூற இருக்கிறேன்.

     நாம் சில சமயங்களில் ஏன்..பல சமயங்களில் சில பைல்களை தெரியாமல் அழித்துவிடுவோம்...பிறகு தான் தெரியும் ஆகா! ஆகா! அந்த பைல் மீண்டும் வேண்டுமே என்று...அப்படிபட்ட சூழ்நிலையை கையாள மிக அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது . அதன் பெயர் Recuva.

     இதன் மூலம் தங்கள் கணினியில் அழிந்த எந்த வகையான பைல்களையும் மீண்டும் பெறலாம்...அனைத்து டிரைவுகளிலும், மேலும் Removable டிரைவுகளான பென்டிரைவ், மெமரிகார்டு போன்றவற்றில் அழித்த பைல்களை கூட மீண்டும் பெறலாம்...இதில் மிக சந்தோசமான செய்தி என்வென்றால் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே!



     நான் தற்போது தாங்களுக்கு இந்த மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என விளக்குகிறேன்...முதலில் இந்த மென்பொருளை தங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள். பின்னர் இதை இயக்குங்கள்...தற்போது தாங்களுக்கு பைலின் வகை படுத்த ஓர் விண்டோ தோன்றும். இதில் தாங்கள் தேடயிருக்கும் பைலின் வகையை தேர்வு செய்யவும்..

பின்னர் NEXT என்பதை அழுத்தவும்...தற்போது தாங்கள் தேட இருக்கும் பைலின் இருப்பிடத்தை தேர்வுசெய்யவு. உதரணமாக நான் எனது பென்டிரைபில் அழிந்த பைல்களை தேட எண்ணுகிறேன் என்றால். On my video card or ipod என்பதை தேர்வு செய்ய வேண்டும்...இல்லை எனக்கு அனைத்து டிரைவுகளிலும் தேட வேண்டும் என்றால் I'am not sure என்பதை தேர்வு செய்யவும்...

     பின்னர் Next என்பதை தேர்வு செய்ய வேண்டும்...தற்போது தோன்றும் திரையில் கீழே Enable Deep Scan என இருக்கிறதா! இது எதற்கு என்றால் நன்கு ஆழமாக தேட வேண்டும் என்றால் இதன் அருகில் இருக்கும் பெட்டியில் டிக் குறியீட்டை இடவும்...

     பின்னர் Start என்பதை அழுத்துங்கள். சிறிது நேரம் காத்துயிருக்கவும்...தற்போது தேடப்பட்ட பைல்கள் அனைத்தும் காட்டப்படும்...
இதில் தாங்களுக்கு தேவைப்படும் படங்கள் தேர்வு செய்து. பின்னர் கடைசியாக  Recover என்பதை தரவும்....அவ்வளவு தான்...வேலை முடிந்தது...

மென்பொருளை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்:
Download this Software Click Down:
Download Link(1)
Download Link (2)
Download Link(3)

தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா!



System Restore (சிஸ்டம் ரீஸ்டோர்)

வணக்கம் நண்பர்களே!   தங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா! கவலை வேண்டாம்....

என்ன தான் ஆன்டிவைரஸ் பயன்படுத்தினாலும் சில சமயம் நம் கணினியை வைரஸ் முடக்கி விடுகிறது.....


அச்சமயத்தில் தாங்கள் என்ன செய்ய முடியும்.......கவலை வேண்டாம் அதற்கு தான் System Restore
என்னும் ஒரு வழி உள்ளது...

இவ்வழி சிலருக்கு தெரிந்ததே...! ஆயினும் தெரியாதவர்களுகாக...இச்செய்தி..!




System Restore என்ற உடனே தாங்களுக்கு புரிந்து இருக்கும்....ஆம் தாங்கள் நினைத்தது சரியே!... வைரஸ்சால் முடக்கபட்ட கணினியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது தான்....


இதை எப்படி மேற்கொள்வது.....

முதலில் உங்கள் கணிணியை இயக்குங்கள்...உங்களுக்கு திரை வரவில்லை என்றால் Safe Mode இயக்குங்கள்... எப்படி என்றால்......உங்கள் கணினியை ஆன் செய்த உடனே F8 Key யை அழுத்துங்கள் ..உடனே ஒரு Window வரும்...அதில் Safemode  என்பதை தெர்ந்துடுங்கள்...

தற்போது...தாங்கள் கணினியில் Control Panelலை Click செய்க..பின்னர் அதில் Performance and Maintenance என்பதை Click செய்க...அதன் இடதுகை ஓரத்தில் System Restore என்பதை Click செய்க...தற்போது தான் கவனம் தேவை....தாங்களுக்கு தற்போது..System Restore என்னும் Window வந்துருக்கும்...

அதில் மூன்று Optionகள் இருக்கும்..தாங்கள் Restore my computer to an earlier time என்பதை தேர்வு செய்யவும்...தாங்கள் தேர்வு செய்தவுடன் calender போன்று ஒரு window வரும்...அதில் தாங்கள் தங்கள் கணினியில் மாற்றங்கள் செய்த தேதிகள் மட்டும் அழுதமாக (Dark) தெரியும்..தாங்கள் அதில் எப்போது தாங்கள் கணினி நன்றாக இயங்கியதோ..அதை தேர்வு செய்து பின்னர் Next என்பதை Select செய்யவும்.

அவ்வளவு தான் தாங்கள் கணினி நீங்கள் தேர்வு செய்த தேதிக்கு சென்றுவிடும்...(Restore ur computer to tat date)..

மிக்க நன்றி!.......நண்பர்களே...தாங்களுக்கு பிடித்து இருந்தால் தாங்கள் கருத்துகளை கூறாலாம்....
Image Help