tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday, 5 May 2011

USB DRIVEஇல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட !



உங்கள் நண்பர்களின் usb drive இல் உள்ள file களையோ அல்லது உங்களுக்கு தெரியாதவர்களின் usb drive இலுள்ள file களையோ அவர்கள் அறியாமலே திருடுவதற்கு Hidden file Copire என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.
அவர்கள் உங்கள் கணினியில் தங்கள் usb drive ஐ பயன்படுத்தும் போது அவர்களது usb drive இல் உள்ள file கள் அனைத்தும் அவர்களுக்கு தெரியாமலே உங்களது கணினியில் copy செய்யப்பட்டுவிடும். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இருக்காது. இந்த மென்பொரு மூலம் copy செய்யப்படும் File கள் C:\WINDOWS\sysbackup என்ற இடத்தில் save செய்யப்படும்.
மென்பொருள் தரவிறக்கம் செய்ய

http://www.mediafire.com/?i25zp596mhukuuj

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்



கீழே இருக்கும் தகவல்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.கண்டிப்பாக நமக்கோ நமக்கு தெரிந்தவர்களுக்கோ சில சமயங்களில் தேவையாக இருக்கலாம் .உங்களால் முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.ஒரே ஒரு நபர் இதனால் பயன்பட்டாலும் கூட நமக்கு நிறைவாய் இருக்கும்,ஆயிரம் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை விட இந்த செய்திகள் தேவையானவரை சென்று அடைந்தால் நமக்கு பெரிய மகிழ்ச்சி தான்.



  • நீங்கள் இந்தியாவில்,சிறுவர்கள் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் "  RED SOCIETY"     என்று கூறி இந்த 99402-17816  போன் நம்பருக்கு அழைத்தால் அவர்கள் அந்த குழந்தைகளை  தத்தெடுத்து, படிக்க  உதவுவார்கள்.

  • உங்களுக்கு  திடீரென்று  அவசரமாக ரத்தம தேவைபட்டால்   www.friendstosupport.org   சென்று  உங்களுக்கு  தேவையான ரத்த வகைகளை  பெற்றுகொள்ளலாம்.

  • பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கீழே இருக்கும் தளம் மிக பயன் வாய்ந்தது.இங்கு சென்று மாணவர்கள் பதிவு செய்து கொண்டால் "ஆப் கம்புஸ்"(Off campus) மூலமாக பல நேர்முக தேர்வில் பங்கு பெறலாம். "www.campuscouncil.com".


  • மாற்று திறனாளிகள் பயன்பெற அவர்களுக்கு இலவசமாக படிப்பு மற்றும் தங்கும் வசதி (Hostel )தகவல் பெற "9842062501 & 9894067506" எண்களை தொடர்பு கொள்ளலாம்.


  • நீங்கள் Driving license, Ration card, Passport, Bank Pass Book, போன்ற ஆவணங்களை கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள போஸ்ட் பாக்சில் சேர்த்து விட்டால், அது  உரியவரிடம்  போய் சேர்ந்து விடும்.


  • நீங்கள் கண்  தானம்    செய்ய விருபபட்டாலோ அல்லது  உங்களுக்கு கண்  சிகிச்சைக்காக  கண்   தேவைபட்டலோ  இந்த எண்ணுக்கு "04428281919/04428271616" அழைத்துபேசலாம்.http://ruraleye.org


  • ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக இருதய ஆபரேஷன் சிகிச்சை அளிக்க 9916737471 (Sri Valli Baba Institute Banglore),எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.


  • 'Imitinef Mercilet' என்ற medicine ரத்த புற்று நோயை வெகுவாக தடுகிறது.இது இலவசமாக "Adyar Cancer Institute " கிடைகிறது. 
  • Address:
    East Canal Bank Road, Gandhi Nagar
    Adyar ,
    Chennai -600020
    Landmark: Near Michael School
    Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241


சில நேரம் நம் கல்யாண அல்லது வேறு நிகழ்ச்சியில் உணவு மிச்சமாகும். 1098 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவர்களே வந்து மீதமான உணவை எடுத்து பட்டினியால் வாடும் நிறைய சிறுவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.(முடிந்தவரை  இந்த தகலவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் )

Wednesday, 4 May 2011

பின்லேடனுக்கு கலைஞரின் இரங்கற்பா..!



ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
முன்னுக்கு நிற்ப்பது மு.கா
என்று எண்ணியிருக்க
என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!

இறுதியாய்  ஒரு தடவை பார்த்து
காண்ணீர் விட்ட பின் 
கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
கயவர்கள்  உன்னை
கடலுக்குள் புதைத்தார்களோ!

உடன் பிறவா சகோதரனே
ஊழலில் நீ எப்படியோ தெரியல ..
ஆனாலும்  உண்மையிலே
எமக்குள் ஒற்றுமை பல!

புனிதப்போர் என்று
உயிர்களை  கொன்றாய் நீ
புள்ளை குட்டிக்கென்று
உடைமைகள் கொண்டேன் நான்!

மதங்களை வச்சு
மக்களை கொன்றாய் நீ
மக்களை வச்சு 
ஆட்சி வென்றேன் நான்
அடிப்படையில் நமக்கு
பலிக்கடா மக்கள் தான்!

ஆரம்பத்தில் நீயும் 
அமெரிக்கனின் அடிமையாமே, 
கடைசி வரை நான்
காங்கிரசுக்கு அடிமை!
புளைக்க தெரியாதவன் நீ;
இன்று பார்
இடையிலே  கொள்கை மாறியதால்
இறந்துவிட்டாய்!
இறுதி வரை நான்
கொண்ட கொள்கையிலே.. 
இறக்கும் வரை முதல்வன்!

தாடி வைத்த தூயவனே,
தங்கரதத்தில் அனுப்பியுன்னை 
கொடநாட்டு பெண்மணிக்கு
குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
பாதியிலே நீ போனதால் 
பதை பதைக்கிறது உள்ளம்
இன்னும் எழுத எண்ணவே
என் கண்ணீரால் நனைந்தது காகிதம்!  

உண்மையை சொல்கிறேன்
இறக்கவில்லை நீ
என் போல் மனிதர்களில்
என்றும் வாழ்வாய் !
                                                                             இங்கனம் 
                                                                             பாசத்தலைவன்
                                                                            மு. கா 

Monday, 2 May 2011

முடிந்தது ஒசாமா தலைஎழுத்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஆப்ரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா டி.வி.,யில் தோன்றி அறிவித்தார்.
சவுதியில் பிறந்து மதவாதியான ஒசாமா பின்லேடன் பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவரானான். இவனுக்கு வயது 54. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு பயங்கரவாத அமைப்பை உலகமே கண்டு அச்சுறும் வகையில் மிக ரகசியமாக நடத்தி வந்தான். இவனது அமைப்பில் உள்ளவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் கில்லாடிகள். அமெரிக்காவே எங்கள் எதிரி என்றும், அவர்களுக்கு எதிராகவே எங்களின் போர் நடக்கும் என ஒசாமா கூறி வந்தான்.

கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக இரட்டை கோபுரத்தை விமானத்தை கொண்டு மோதி தூள், தூளாக்கினான். இதில் அமெரிக்கா நிலைகுலைந்து பெரும் அழிவை சந்தித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்த நாள் முதல் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தான் ஒசாமா .

இவனை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன்நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர்கள் புஷ், பராக்ஒபாமா உறுதியாக சொல்லி வந்தனர். ஒசாமா பாகிஸ்தான் பகுதிகளில்தான் பதுங்கி இருப்பான் என அமெரிக்க அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், உயர் அதிகாரிகள் கூறி வந்தனர். ( பாகிஸ்தான் இதனை மறுத்து வந்தது ) ஒசாமாவை பிடிப்பதே முக்கியப்பணியாக இருக்கும் என்றனர். இதனையடுத்து இந்த பகுதிகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.

ஒசாமாவின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. பல முறை ஒசாமா கொல்லப்பட்டான் என்ற செய்தி வருவதும், இதனை அல்குவைதா மறுப்பதும் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இன்றைய ஒசாமா பலி குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த முறை இவனது உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. இவன் கொல்லப்பட்ட இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.

ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டது எப்படி? : பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் அருகே 150 கி.மீட்டர் தொலைவில் அபாட்டாபாத் நகரில் பின்லேடன் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து இவனை எப்படி கொல்வது என திட்டமிடப்பட்டது.

இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இந்த பங்களா மேல் பறந்தபடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இவருடன் இருந்த சிலரும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் பாகிஸ்தான் உதவியை அமெரிக்கா நாடவில்லை. ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பான் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறான். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா பிணமானான். அமெரிக்காவின் முக்கியப்பணி முடிந்தது.

அதிபர் பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லேடன் இறந்ததகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூர்கிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் அமெரிக்கர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வீதிகளில் நாட்டுக்கொடியை ‌கையில் ஏந்தி கொண்டு வலம் வருகின்றனர்.


இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டனம் : பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் வழங்கியது அப்பட்டமாக தெரிகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் ; மும்பை தாக்குதலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளும் பாகிஸ்தானில்தானனில் உள்ளனர் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

ஒபாமா கையெழுத்து- ஒசாமா தலை எழுத்து: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொலை செய்ய ஏப்ரல் 29ம் தேதியன்று அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் முத‌ல் திட்டம் தீட்டி, நேர்த்தியாக அதை வழிநடத்திச் சென்ற அமெரிக்கா, எப்ரல் 29ம் தேதியன்று ஒசாமாவை கொல்ல அமெரிக்க ராணுவத்துக்கு அனுமதி அளித்துள்ளது. அலபாமாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அதிபர் ஒபாமாவுக்கு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் ஒசாமாவை நெருங்கி விட்ட செய்தியை கூறினர். அதனை கேட்ட ஒபாமா, ஒசாமாவை கொன்று விடுமாறு உத்தரவிட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலன் தான் அதிபர் ஒபாமாவின் உத்தரவை தயார் செய்து அதனை படை கமாண்டர்களுக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது குறித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது.

Thursday, 21 April 2011

பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு





இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.

1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது.

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும் புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை www.virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனே அவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகி றீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.

24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.