tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Saturday, 26 November 2011

Yahoo Video புதிய வீடியோ தளம்

யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங்கும் ஒரு சேவையாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப் படுகிறதாம். இந்தியாவில் ஒருவர் சராசரியாக 58வீடியோக்களை ஒரு மாதத்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யாகூ நிறுவனம் யூடியுப் தளத்திற்கு போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.


இந்த தளத்திலும் யூடியுப் தளத்தில் உள்ளதை போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். யாஹூ தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட ஒரிஜினல் வீடியோக்களை மட்டுமே இந்த தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. யாகூ நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டுவந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.


கீழே வீடியோக்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் பட்டியல்

Category
Partners
NewsNDTV, Headlines Today , Aajtak, Newzstreet, ANI, Star News, Star Majha, Star Ananda
MoviesDigit 9, Shemaroo, Ultra, Reliance Pictures,Sri Ganesh Video, Star Entertainment, PVR Pictures, Shree International
TV ShowsStar Plus, Star One, Channel V, Star PravahStar Jalsa, Star Vijay, Star World, 9XM
Regional and English MoviesDigit 9, Shemaroo, Ultra, Kavithalaya,Sri Ganesh Video
FinanceNDTV (Profit)
BollywoodNDTV, Newzstreet, Lehren, Glamsham, Saanskruti, Movie Talkies, Nine Winds, Digit 9

அவ்வளவும் ஒரிஜினல் வீடியோக்கள் என்பதால் தரத்தை பற்றி கவலை இல்லை. ஆனால் வாசகர்கள் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை. ஆதலால் தற்பொழுது யூடியுப் தளத்துடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது. பிற்காலத்தில் மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்த தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை.

இந்த தளத்திற்கு செல்ல - http://in.video.yahoo.com/

Friday, 25 November 2011

ரம்மி" சூதாட்டம் அல்ல என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு


சென்னை : "ரம்மி" சூதாட்டம் அல்ல என்று சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை தி.நகரில் இயங்கி வரும் மகாலெட்சுமி கலாச்சார மையத்தில், ரம்மி விளையாடியதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்க‌ளை விடுதலை செய்யக் கோரி அந்த மையம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், ரம்மி சூதாட்டமல்ல என்றும், அது அறிவை வளர்க்கும் விளையாட்டு என்று தீர்ப்பு அளித்துள்ளார். அதேபோல், ரம்மி விளையாட்டின் போது பந்தயம் கட்டி விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 21 November 2011

மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்

மொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தளங்கள் மூலமாக மொபைல்களுக்கு தேவையான கேம்ஸ், அப்ளிக்கேஷன்ஸ், தீம்ஸ், ரிங்டோன்ஸ், அனிமேஷன் படங்கள், 3gp வீடியோஸ், MP3 சாங்ஸ், ப்ளாஷ் படங்கள், சாப்ட்வேர்ஸ் ஆகியவைகளை இந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.










மேற்கண்ட தளங்கள் மொபைல் அப்ளிக்கேஷன்ஸ்களுக்கு முன்னணித் தளங்கள் ஆகும். இத்தளங்களில் இருந்து ஜாவா, சிம்பியன், விண்டோஸ், ஆண்ட்ராய்டு போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை கொண்ட மொபைல்களுக்கும், முன்னணி மொபைல் பிராண்ட்களில் இருந்து சைனா பிராண்ட் வரை எல்லா தரப்பு மொபைல்களுக்கும் தேவையான அனைத்தும் டவுன்லோட் செய்யலாம். கிட்டத்தட்ட எல்லாமே இலவசமாக கிடைக்கிறது. சில தளங்களில் உறுப்பினரானால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதை கருத்தில் கொள்க.

Friday, 18 November 2011

airtel கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.


  மிகப் பெரிய தனியார் துறை தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதால் சர்தேச அழைப்புக்களுக்கான கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான சலுகை கட்டண சேவைகளையும் ஏர்டெல் குறைத்துள்ளது. சர்வதேச அளவில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கென ரோமிங் கட்டண குறைப்பு உள்ளிட்ட சில சேவைகளையும் ஏர்டெல் வழங்க உள்ளது. இந்த கட்டண குறைப்பிற்கான வாலிடிட்டிடய அரையாண்டு முதல் 6 மாதங்கள் வரை நீடிக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று மொபைலுக்கான வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜி.பி.ஆர்.எஸ்., சேவையில் தற்போதுள்ள ரூ.98 கட்டணத்தில் 1 ஜிபி டேட்டா டவுன்லோட் அளவிற்கு பதிலாக 2 ஜிபி டேட்டா டவுன்லோட் சேவை வழங்கப்பட உள்ளது.