யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங்கும் ஒரு சேவையாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப் படுகிறதாம். இந்தியாவில் ஒருவர் சராசரியாக 58வீடியோக்களை ஒரு மாதத்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த யாகூ நிறுவனம் யூடியுப் தளத்திற்கு போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது.
இந்த தளத்திலும் யூடியுப் தளத்தில் உள்ளதை போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். யாஹூ தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட ஒரிஜினல் வீடியோக்களை மட்டுமே இந்த தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. யாகூ நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டுவந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
கீழே வீடியோக்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் பட்டியல்
Category | Partners |
News | NDTV, Headlines Today , Aajtak, Newzstreet, ANI, Star News, Star Majha, Star Ananda |
Movies | Digit 9, Shemaroo, Ultra, Reliance Pictures,Sri Ganesh Video, Star Entertainment, PVR Pictures, Shree International |
TV Shows | Star Plus, Star One, Channel V, Star PravahStar Jalsa, Star Vijay, Star World, 9XM |
Regional and English Movies | Digit 9, Shemaroo, Ultra, Kavithalaya,Sri Ganesh Video |
Finance | NDTV (Profit) |
Bollywood | NDTV, Newzstreet, Lehren, Glamsham, Saanskruti, Movie Talkies, Nine Winds, Digit 9 |
அவ்வளவும் ஒரிஜினல் வீடியோக்கள் என்பதால் தரத்தை பற்றி கவலை இல்லை. ஆனால் வாசகர்கள் வீடியோக்களை அப்லோட் செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை. ஆதலால் தற்பொழுது யூடியுப் தளத்துடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது. பிற்காலத்தில் மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்த தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை.
இந்த தளத்திற்கு செல்ல - http://in.video.yahoo.com/
No comments:
Post a Comment