tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday, 28 December 2011

சாலை அமைக்க வீடு வீடாக பிளாஸ்டிக் சேகரிப்பு

பிளாஸ்டிக் தார் சாலை அமைக்க வீடு வீடாக பிளாஸ்டிக் சேகரிப்பு வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்குகிறது.இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி:பிளாஸ்டிக் தார் சாலை அமைக்க தேவையான அடிப்படை மூலப்பொருள் பிளாஸ்டிக் கழிவுகளாகும். இவை அழுக்கில்லாமலும் காய்ந்த நிலையிலும் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் தார் சாலை அமைக்க தேவையான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். வீடு வீடாக பிளாஸ்டிக்கழிவுகளை சேகரிக்கும் பணி வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை துப்புரவு பணியாளர்களிடம் அளித்து ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைதுண்டுகளாக நறுக்கும் இயந்திரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றிச் செல்வதற்காகவே, பிரத்யேக ரயில்




பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றிச் செல்வதற்காகவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கன்டெயினர் ரயிலை, வரும் புத்தாண்டு முதல் இயக்க, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலைத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ரயில் இது.ரயில்வே துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் கன்டெயினர் கார்ப்பரேஷனும், தேசிய தோட்டக்கலை வாரியமும் இணைந்து, தோட்டக்கலைத் துறைக்கென, பிரத்யேகமான முதல் கன்டெயினர் ரயிலை வடிவமைத்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புஷாவலில் உள்ள சரக்கு காப்பகத்தில் இருந்து, டில்லியில் உள்ள அஜாப்பூர் மண்டி வரை, இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல், இந்த ரயில் இயக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த ரயில், 90 கன்டெயினர்களை உடையதாக இருக்கும். புஷாவாலில் இருந்து 1,000 டன் வாழைப்பழங்களை ஏற்றி வரும் இந்த ரயில், திரும்பச் செல்லும்போது, அதே அளவு உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிளை ஏற்றிச் செல்லும். இந்த ரயில், ஒரு மணி நேரத்துக்கு, 100 கி.மீ., வேகத்தில் செல்லும். பழங்கள், காய்கறிகள், எளிதில் கெட்டுவிடாமல் இருப்பதற்கான குளிர்சாதன வசதியும், மற்ற தொழில்நுட்ப வசதிகளும், இந்த ரயிலில் உள்ள கன்டெயினர்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

புது பஸ்கள் வாங்க ரூ.345 கோடி ஒதுக்கீடு


அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் 3000 பஸ்கள் வாங்க ரூ.345 கோடியை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது : 6 வருடங்களுக்கு மேலாக இயக்கப்பட்டு வரும் பஸ்கள் மற்றும் 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய பஸ்கள் ஆகியவற்றிற்கு பதிலாக புதிதாக 3000 பஸ்கள் வாங்க ரூ.345 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் முதல் கட்டமாக 520 பஸ்கள் வாங்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; தற்போது தமிழக அரசின் நிதி நிலையை சரியாக இல்லாததால் வாகன பாடி எனப்படும் அடிசட்டம் மற்றும் இன்ஜின்கள் ஆகியவற்றை 1450 பஸ்களுக்கு பழுது பார்க்க ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தஞ்சை பெரியகோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/44ca4002-feab-424a-90a1-07fd64ec65fd_S_secvpf.gif
தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு “மர்ம” போன் வந்தது.
போனில் பேசியவர், தஞ்சை பெரிய கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனே பரபரப்படைந்த போலீசார் தஞ்சை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவலை தெரிவித்து உஷார் படுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து தஞ்சை டி.எஸ்.பி. ஜோஸ் தங்கையா தலைமையில் போலீஸ் படையினர் தஞ்சை பெரிய கோவிலை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் இந்த சோதனையில் ஈடுபடுத்தபட்டனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
ஆனாலும் தஞ்சை பெரிய கோவிலில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த பட்டு உள்ளது. பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்ட்டனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்ட்டனர்.
இதற்கிடையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த டெலிபோன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாபு என்பவர் மகன் சங்கர் (36) என்பவர் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பார்வையற்ற வாலிபரான சங்கருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சங்கர் குடிபோதையில் போலீசுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனாலும் தொடர்ந்து சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tuesday, 13 December 2011

நிஸ்ஸான் இல் டீசல் கார்

ஒரு லிட்டர் டீசலில் 21.64 கி.மீ. தூரம் ஓடக் கூடிய டீசல் காரை நிஸ்ஸான் நிறுவனம் இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. உலகப் புகழ் பெற்ற ரெனால்ட் நிறுவனத் தயாரிப்பான கே9கே டீசல் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்ட சன்னி டீசல், நகர வாசிகளுக்கும், நீண்ட நெடிய பயணத்திற்கும் மிகவும் ஏற்றதாகும் என்று நிஸ்ஸான் நிறுவனம் கூறியுள்ளது. நிஸ்ஸான் எக்ஸ்.எல்.எனும் வகையின் விலை ரூ.7,98,000, நிஸ்ஸான் எக்ஸ்.வி. எனும் வகையின் விலை ரூ.8,78,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த கார்கள், மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கபட்டவை என்று நிஸ்ஸான் கூறியுள்ளது. சன்னி டீசல் காரின் விலை இந்தியாவின் எல்லா நகரத்திலும் ஒரே விலைக்கு விற்கப்படும் என்று அறிவித்துள்ள நிஸ்ஸான், தனது 47 விற்பனை நிலையங்களில் இன்று முதல் விற்பனை பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.