tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday, 28 December 2011

தஞ்சை பெரியகோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/44ca4002-feab-424a-90a1-07fd64ec65fd_S_secvpf.gif
தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு “மர்ம” போன் வந்தது.
போனில் பேசியவர், தஞ்சை பெரிய கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். உடனே பரபரப்படைந்த போலீசார் தஞ்சை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவலை தெரிவித்து உஷார் படுத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து தஞ்சை டி.எஸ்.பி. ஜோஸ் தங்கையா தலைமையில் போலீஸ் படையினர் தஞ்சை பெரிய கோவிலை முற்றுகையிட்டு தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் இந்த சோதனையில் ஈடுபடுத்தபட்டனர். நள்ளிரவில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
ஆனாலும் தஞ்சை பெரிய கோவிலில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த பட்டு உள்ளது. பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்ட்டனர். தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்ட்டனர்.
இதற்கிடையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த டெலிபோன் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாபு என்பவர் மகன் சங்கர் (36) என்பவர் தான் தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
பார்வையற்ற வாலிபரான சங்கருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் சங்கர் குடிபோதையில் போலீசுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. ஆனாலும் தொடர்ந்து சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment