tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday, 9 November 2011

இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.

உலகின் பிரபலமான நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது. இன்று கூட நீங்கள் கூகுளின் லோகோவை பார்த்தால்  மேரி கியூரியின் 144 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாற்றி அமைத்து உள்ளது. இந்த வரிசையில் தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.
இனி உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday .... என்ற வாழ்த்தும் வரும். 


இது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும். 

2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம். 

கூகுளின் இந்த அறிவிப்பை காண - googleblog

வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது. 

வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளிக்கும் கூகுளுக்கு எனது நன்றிகள்.

Friday, 4 November 2011

இந்தியர்களுக்கு கூகுளின் அதிரடி சலுகை - Google offers Free Website for Indians

இணையம் என்பது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது. இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை. ஒரு குண்டூசி தேவை என்றால் கூட எங்கு கிடைக்கும் என இணையத்தில் முகவரியை தேடி பிறகு சென்று வாங்கும் அளவுக்கு இணையம் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. இணையதளங்கள் மிகப்பெரிய விளம்பர மையமாக உள்ளது. வெளிநாடுகளில் ஒரு சிறு நிறுவனம் என்றால் கூட அதற்க்கான இணையதளம் உருவாக்கி அவர்கள் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றனர். ஆனால் இந்த முறை இந்தியாவில் குறைவு. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் எண்ணிக்கையிலும், சிறு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையிலும் கூகுள் நிறுவனம் ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இலவசமாக இணையதளங்கள் உருவாக்கி கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது.

இந்த சலுகையின் படி இலவச ஹாஸ்டிங், இலவச டொமைன் போன்ற வசதிகளை ஒருவருடத்திற்கு இலவசமாக பெறலாம். முக்கியமான விஷயம் இதன் மூலம் இணையதளங்கள் ஆரம்பிக்க நீங்கள் தொழில்நுட்ப அறிவு அதிகம் பெற்று இருக்க வேண்டிய அவசியமில்லை வெறும் 15 நிமிடத்தில் உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம்.


ஒருவருடத்திற்கு பிறகு இந்த சேவையை தொடர்ந்து பெற விரும்பினால் பணம் கட்டி தொடரலாம் இல்லை அப்படியே விட்டுவிடலாம் நமக்கு எந்த பண விரயமும் ஆகாது. இந்த வசதியின் மூலம் உருவாக்கப்படும் இலவச இணையதளங்களில் .in டொமைன் தான் கிடைக்கும்.


மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் டொமைன் பெயரில் ஈமெயில் முகவரிகளும் உருவாக்கி கொள்ளலாம் இதுவும் இலவசம் தான்.

இந்த லிங்கில் சென்று India Get Online இலவச இணையத்தை உருவாக்கி கொள்ளுங்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் வந்தால் 1800-266-3000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் இதற்கும் எந்தவிதமான கட்டணமும் உங்களிடம் இருந்து மாட்டார்கள். இது சம்பந்தமாக கூகுள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்.



இந்த இலவச சேவை வசதியை பிரபல ஹாஸ்டிங் நிறுவனமான HostGator நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் வழங்குகிறது.

யூடியுபில் 1500க்கும் அதிகமான இந்திய திரைப்படங்களை இலவசமாக காண- 1500+ Indian movies on Youtube

இயந்திரம் போல் ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் சினிமாக்கள் தான் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு பண்டிகையா அல்லது விசேஷ நாட்களோ வந்தால் எந்த டிவியில் என்னென்ன படம் போடுராங்கன்னு தான் முதலில் பார்ப்போம். அந்த அளவு டிவியும் திரைப்படங்களும் நம்மை அடிமை படுத்தி விட்டது என்று கூட கூறலாம். Youtube பற்றி அனைவரும் அறிந்து இருப்போம் இணையத்தில் வீடியோக்களை கண்டு ரசிக்க கூகுள் நிறுவனம் வழங்கும் சேவையாகும். தற்பொழுது youtube தளத்தில் வீடியோக்கள் மட்டுமின்றி முழு நீளத் திரைப்படங்களையும் கண்டு ரசிக்கலாம். இந்த youtube தளத்தில் 1500 இந்திய திரைப்படங்களை இலவசமாக காணலாம். ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி, குஜராத்தி இப்படி பல மொழிகளில் திரைப்படங்கள் காணப்படுகிறது.


இந்த சேனலில் ஹிந்தி மொழியில் தான் அதிக அளவு திரைப்படங்கள் காணப்படுகிறது. தமிழில் 50க்கும் அதிகமான திரைப்படங்கள் காணப்படுகிறது. இந்த youtube சேனலில் கீழே உள்ள பல்வேறு வகைகளில் திரைப்படங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • New Releases
  • Action & Adventure
  • Animations & Cartoons
  • Classics
  • Comedy
  • Crime
  • Documentary
  • Drama
  • Family
  • Foreign Film
  • Horror
  • Indian Cinema
  • Mystery Suspense
  • Romance
  • Science Fiction
இந்த Youtube சேனலில் நாளுக்கு நாள் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 

மொத்த திரைப்படங்களை காண - All Movies
தமிழ் திரைப்படங்களை மட்டும் காண - Tamil Movies Only

தொடர்ந்து பறக்க கூடிய விமானம்

இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது. போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்-ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விமான தலைமை டிசைனர் வில்லியம் பிளாக் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த காட்விட் பறவை (‘கண்ணாடி உள்ளான்’ என்ற வகை) இரை, நீர் இல்லாமல் பல கி.மீ. தூரம் பறக்க கூடியது. ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு சுமார் 11,677 கி.மீ. தூரம் நான்-ஸ்டாப்பாக பறந்து சாதனை படைத்தது இந்த பறவை.
தொடர்ந்து Nonstop ஆக பறக்க கூடிய விமானம் : வியக்க வைக்கும் முயற்சி!
இதை முன்உதாரணமாக வைத்துதான் ஸ்டிரேட்டோலைனர் விமானத்தை டிசைன் செய்தேன். அதாவது, இன்ஜின் சூடு தணிக்க, எரிபொருள் நிரப்ப என்று எந்த காரணத்துக்காகவும் தரையிறங்க கூடாது. நான்-ஸ்டாப்பாக வெகு நேரம் பறக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் கீழ் பகுதியைவிட மேல் பகுதியில் காற்று இடைஞ்சல் குறைவாக இருக்கும். ஆனால், அவ்வளவு உயரத்தில் விமானங்கள் பறக்க முடியாது. எனவே, அதிக உயரத்தில் பறப்பதற்கு ஏற்ப காட்விட் பறவை போலவே பெரிய இறக்கைகள், பின்பக்க வால் பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தை அதிக உயரத்துக்கு கொண்டு செல்வதற்காக 4 கிரையோஜெனிக் ஹைட்ரஜன் டர்போஃபேன் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர் விமானங்கள் போல இது குறைந்த எரிபொருளில்கூட இயங்க முடியும். சிறிதுகூட புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படும். விமான வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு வில்லியம் பிளாக் கூறினார்.

நோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்


 கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் நோக்கியா தன் மூன்று ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப் படுத்தியது. இவை நோக்கியா 600, 700 மற்றும் 701. இந்த மூன்று மொபைல்களிலும் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், அண்மை கள தொடர்பு வசதி (NFC – Near Field Communication), புளுடூத் 3.0 மற்றும் டபிள்யூ லேன் சப்போர்ட் ஆகிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் நோக்கியா 700, உலகிலேயே மிகச் சிறிய ஸ்மார்ட் போன் எனப் பெயர் பெற்றது. இதனை வடிவமைக்கையில், ஸீட்டா என்ற பெயர் கொண்டிருந்தது. இதன் திரை கொரில்லா கிளாஸ் கொண்டு 3.2 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டது. 320 x 640 என்ற அளவில் பிக்ஸெல் திறன் கொண்டது. இந்த மொபைல் மறு சுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் மற்றும் பயோ பிளாஸ்டிக்ஸ் கொண்டு அமைக்கப்பட்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோவினை எடுக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள புளுடூத் 3.0 பதிப்பைச் சேர்ந்தது. இதனால், கூடுதல் வேகத்தில், நொடிக்கு 24 எம்.பி. டேட்டா பரிமாறப்படும். 1080 mAh திறன் கொண்ட பேட்டரி, 2ஜி அழைப்பு எனில் 7 மணி நேரம் பேசுவதற்கும், 3ஜி அழைப்பில் 4.5 மணி நேரம் பேசுவதற்கும் சக்தி தருகிறது. இவற்று டன் ஒருங்கிணைந்த ஜி.பி.எஸ்., காம்பஸ், அக்ஸிலரோமீட்டர், வை-பி நெட்வொர்க் இணைப்பிற்கான சப்போர்ட் ஆகியவற்றைக் கொண்டது. ஐந்து வண்ணங்களில் இது கிடைக்கின்றன.

நோக்கியா 701, முதலில் ஹெலன் என அழைக்கப்பட்டது. மிகவும் பிரகாசமான அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதிலும் கொரில்லா கிளாஸ் திரை 3.5 அங்குல அகலத்தில் உள்ளது. 360x640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன், இரண்டு எல்.இ.டி.பிளாஷ் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளது. வீடியோ அழைப்புகளில் பயன்படுத்த முன்பக்கமாக ஒரு கேமரா தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்பு ஆகிய வசதிகளும் கிடைக்கின்றன. இதன் 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, 7 மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது. மூன்று வண்ணங்களில் நோக்கியா இதனைத் தருகிறது.

மூன்றாவதான நோக்கியா 600 அதிக சத்தமுள்ள ஸ்மார்ட் போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குகையில் சிண்டி என இதனை நோக்கியா பெயரிட்டிருந்தது. திரை 3.2 டி.எப்.டி. எல்சிடி திரையாகும். 360x640 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டது. இதன் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. நொடிக்கு 30 பிரேம் கொண்ட எச்.டி. தன்மை கொண்ட வீடியோ வினை எடுக்கும் திறன் கொண்டது. குறைந்த மின்சக்தி செலவில், கூடுதல் வேகத்தில் டேட்டா பரிமாறும் திறன் கொண்ட யு.எஸ்.பி. 3.0 இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

வை-பி நெட்வொர்க், எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர், 3ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கிறது. இதன் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி, 15மணி நேரம் (2ஜி) மற்றும் 6.5 மணி நேரம் (3ஜி) பேசும் திறனைத் தருகிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்திலும் அண்மைக் கள தொலை தொடர்பு (NFC – Near Field Communication) கொண்டுள்ளதால், இந்தியா வில் தற்போது தொடங்கப்பட்டிருக்கும், மொபைல் வழி நிதி பரிமாற்றத்தில் இந்த போன்கள் மிகவும் உதவும். நோக்கியா 600 ரூ.12,000, நோக்கியா 700 ரூ. 18,000 மற்றும் நோக்கியா 701 ரூ.12,000 என அதிக பட்ச விலையைக் கொண்டுள்ளன.