உலகின் பிரபலமான
நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி
அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது.
இன்று கூட நீங்கள் கூகுளின் லோகோவை பார்த்தால் மேரி கியூரியின் 144 வது
பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாற்றி அமைத்து உள்ளது. இந்த வரிசையில்
தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி
அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.
இனி
உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி
இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday .... என்ற
வாழ்த்தும் வரும்.
இது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும்.
2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம்.
கூகுளின் இந்த அறிவிப்பை காண - googleblog
வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது.
வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளிக்கும் கூகுளுக்கு எனது நன்றிகள்.
No comments:
Post a Comment