இணையம்
என்பது தற்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றாகி விட்டது. இணையத்தில்
கிடைக்காதது எதுவும் இல்லை. ஒரு குண்டூசி தேவை என்றால் கூட எங்கு
கிடைக்கும் என இணையத்தில் முகவரியை தேடி பிறகு சென்று வாங்கும் அளவுக்கு
இணையம் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. இணையதளங்கள் மிகப்பெரிய விளம்பர
மையமாக உள்ளது. வெளிநாடுகளில் ஒரு சிறு நிறுவனம் என்றால் கூட அதற்க்கான
இணையதளம் உருவாக்கி அவர்கள் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்புகின்றனர்.
ஆனால் இந்த முறை இந்தியாவில் குறைவு. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும்
எண்ணிக்கையிலும், சிறு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையிலும் கூகுள்
நிறுவனம் ஒரு புதிய சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் சொந்தமாக தொழில்
செய்பவர்களுக்கு இலவசமாக இணையதளங்கள் உருவாக்கி கொள்ளும் வசதியை
கொடுத்துள்ளது.
இந்த
சலுகையின் படி இலவச ஹாஸ்டிங், இலவச டொமைன் போன்ற வசதிகளை ஒருவருடத்திற்கு
இலவசமாக பெறலாம். முக்கியமான விஷயம் இதன் மூலம் இணையதளங்கள் ஆரம்பிக்க
நீங்கள் தொழில்நுட்ப அறிவு அதிகம் பெற்று இருக்க வேண்டிய அவசியமில்லை
வெறும் 15 நிமிடத்தில் உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம்.
ஒருவருடத்திற்கு பிறகு இந்த சேவையை தொடர்ந்து பெற விரும்பினால் பணம்
கட்டி தொடரலாம் இல்லை அப்படியே விட்டுவிடலாம் நமக்கு எந்த பண விரயமும்
ஆகாது. இந்த வசதியின் மூலம் உருவாக்கப்படும் இலவச இணையதளங்களில் .in டொமைன்
தான் கிடைக்கும்.
மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் டொமைன் பெயரில் ஈமெயில் முகவரிகளும் உருவாக்கி கொள்ளலாம் இதுவும் இலவசம் தான்.
இந்த லிங்கில் சென்று India Get Online இலவச இணையத்தை உருவாக்கி கொள்ளுங்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் வந்தால் 1800-266-3000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் இதற்கும் எந்தவிதமான கட்டணமும் உங்களிடம் இருந்து மாட்டார்கள். இது சம்பந்தமாக கூகுள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
இந்த லிங்கில் சென்று India Get Online இலவச இணையத்தை உருவாக்கி கொள்ளுங்கள். ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் வந்தால் 1800-266-3000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் இதற்கும் எந்தவிதமான கட்டணமும் உங்களிடம் இருந்து மாட்டார்கள். இது சம்பந்தமாக கூகுள் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
இந்த இலவச சேவை வசதியை பிரபல ஹாஸ்டிங் நிறுவனமான HostGator நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் வழங்குகிறது.
No comments:
Post a Comment