சீனாவில் 2011 டிசம்பர் மாத கணக்கின்படி, இணையதளத்தை பயன்படுத்தியோர் எண்ணிக்கை 51.30 கோடியை எட்டி உள்ளது. இது முந்தைய 2010ம் ஆண்டின் எண்ணிக்கையைவிட 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, மேலும் அதிகரிக்கும் என அந்நாட்டின் இணையதள பயன்பாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், மொபைல் போன்கள் வாயிலாக இணையதள வசதியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 17.50 சதவீதம் அதிகரித்து 35.60 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment