புதுடில்லிசென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 64 @காடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
டிசம்பரில், புதிதாக 75 லட்சத்து 50 ஆயிரம் பேர், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையைப் பெற்றுள்ளனர். இது, இதற்கு முந்தைய நவம்பர் மாதத்தை விட, 1.19 சதவீதம் (66 லட்சத்து 80 ஆயிரம் வாடிக்கையாளர்கள்) அதிகமாகும். நவம்பர் மாத இறுதியில், நாட்டின் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 63 கோடியே 21 லட்சமாக இருந்தது.
மதிப்பீட்டு காலத்தில், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம், 23 லட்சத்து 90 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 10 கோடியே 64 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதே மாதத்தில், தொலைத்தொடர்புத் துறையில் முன்னிலையில் உள்ள, பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 லட்சத்து 20 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 17 கோடியே 57 லட்சமாக உயர்ந்துள்ளது.ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களில், ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, டிசம்பரில், 27.46 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, நவம்பரில், 27.64 சதவீதம் என்றளவில் இருந்தது.
வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 9 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14 கோடியே 77 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, டிசம்பரில், 23.10 சதவீதமாகக் குறைந்துள்ளது. நவம்பரில், இது, 23.23 சதவீதமாக இருந்தது.
பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் முறையே, 4 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 44 ஆயிரத்து 664 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதையடுத்து, இந்நிறுவனங்களின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை முறையே, 9 கோடியே 26 லட்சம் மற்றும் 54 லட்சத்து 40 ஆயிரம் என்றளவில் உள்ளது.
ஏர்செல் நிறுவனம், 6 லட்சத்து 80 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியே 16 லட்சமாக உயர்ந்துள்ளது.யூனிநார் நிறுவனம், 21 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களுக்கு, ஜி.எஸ்.எம்., மொபைல் போன் சேவையை வழங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை நவம்பரில், 18 லட்சத்து 60 ஆயிரமாக இருந்தது என, இந்த கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment