மொபைல் போன் சேவையில் ஈடுபட்டு வரும், யூனிநார் நிறுவனம் குறைந்த விலையில் பேசக் கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி சிவகுமார் கூறியதாவது:கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு, "பட்ஜெட் பந்தா' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதம்தோறும், 198 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், நிறுவனத்தின் உள்ளூர் இணைப்புகளுக்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் வினாடிகளும், மற்ற உள்ளூர் எண்களுக்கு, 42 ஆயிரம் வினாடிகளும் இலவசமாக பேசி கொள்வதுடன், நாள்தோறும், 100 எஸ்.எம்.எஸ்.,களையும் அனுப்பலாம்.
மேலும், 47 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, மூன்று ஜி.பி., வரை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு சிவகுமார் கூறினார்.
No comments:
Post a Comment