tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 20 January 2012

வீடியோகான் நிறுவனம்வெள்ளி விழா சலுகை

நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், வீடியோகான் நிறுவனம், அதன் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் அனிருத் தூத் கூறியதாவது:நிறுவனத்தின், 25வது ஆண்டு விழாவையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு, 101 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.நிறுவனத்தின் எல்.சி.டி.,/எல்.இ.டி., "டிவி', ரெப்ஜிரேட்டர், ஆட்டோமேடிக் வாஷிங்மெஷின், "ஏசி' ஆகியவை வாங்குவோருக்கு, 2,500 முதல் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன்களும், இதர சாதனங்களுக்கு, 1,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் பரிசு கூப்பன்கள் வழங்கப்படும். இச்சலுகைத் திட்டம் பிப்., 29ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அனிருத் கூறினார்.

No comments:

Post a Comment