tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Tuesday 31 August 2010

விவேகானந்தரின் மந்திர வார்த்தைகள்!



விவேகானந்தரின்
மந்திர வார்த்தைகள்!


சுவாமி விவேகானந்தர், மாக்களை மக்களாக்கவும், மனிதர்களைப் புனிதர்களாக்கவும் வந்த இனியவர். அவரது வார்த்தைகளுக்கு இருந்த சக்தி மகத்தானது.

சுவாமிஜியின் கருத்துக்களின் மகிமையை உணர்ந்த மகாத்மா காந்தி, அதனால் தமது தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகரித்ததாகக் கூறினார்.

சுவாமிஜியின் வாழ்க்கையைப் படித்த நேதாஜி, அவரது காலடியில் அமர்ந்து ஆன்மிகப் பாடம் பயில விரும்புவதாகக் கூறினார்.

பாரதியார், ‘சுவாமி விவேகானந்தரின் வேதாந்தப் பிரசாரமானது, இந்திய விடுதலை முயற்சிக்குத் தாய் முயற்சி ஆகும்’ என்றார்.

பிரெஞ்சு எழுத்தாளர் ரொமா ரோலா, சுவாமிஜியின் சக்திமிக்க வார்த்தைகளை முப்பது வருடத்துக்குப் பிறகு படித்தபோதும், தம்முள் ஒரு மின்சார சக்தி பாய்வதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சக்தியைத் தலைவர்களும் அறிஞர்களும் மட்டுமா உணர்ந்தார்கள்? இல்லை. சிரத்தையுடன் கேட்ட ஒவ்வொருவருக்கும் அது கிடைத்தது.

ஐம்பதாண்டுகளில் வணங்க
வேண்டிய தெய்வம்

இந்திய அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் நம் தலைவர்கள் தீவிரவாதம், மிதவாதம் என்று பிரிந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தனர். சுதந்திரம் கிடைத்த பிறகு, அதை நல்ல முறையில் அனுபவிக்கவும், பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துப் பேணவும் மக்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது.

அப்படி முயன்றவர்களுக்கு முதல் உத்வேகம் தந்தவர் சுவாமி விவேகானந்தர்தான். ஆங்கிலேயரை விரட்டும் முன்பு நாம் பாரதத் தாயிடம் பக்தியும், சிரத்தையும் கொண்டு அவளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது விவேகானந்தரின் எண்ணம்.

அதற்காக அவர், ‘இனி வரும் 50 ஆண்டுகளுக்கு நம் ஆதார சுருதி, ஈடு இணையற்ற நம் இந்தியத் தாயாக இருக்கட்டும். அதுவரை மற்ற எல்லா தெய்வங்களும் நம் மனதிலிருந்து மறைந்து விடட்டும்’ என்றார் (சென்னையில் சுவாமிஜி நிகழ்த்திய சொற்பொழிவு ‘இந்தியாவின் எதிர்காலம்’).

சுவாமிஜி அவ்வாறு கூறியது 14.2.1897-ல். அந்த ஆண்டுடன் ஓர் ஐம்பதைக் கூட்டிப் பாருங்கள்.

அங்கு வருவது 1947 மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரமும்தான்.

இந்தியா மீது எப்போது
பக்தி வந்தது?


சுவாமிஜியின் சிஷ்யை சகோதரி கிறிஸ்டீன். அவர் தமது நினைவலைகளில் மூழ்கி ஒரு முத்தை எடுத்து நம் முன் வைக்கிறார். ‘எங்களுக்கு (மேலைநாட்டுச் சீடர்கள்) இந்தியா மீது எப்போது பக்தி வந்தது தெரியுமா?’ என்று கேட்டு, அவரே பதிலைக் கூறுகிறார்.

“சுவாமிஜி தமது மதுரமான குரலில் ‘இந்தியா’ என்ற வார்த்தையை உச்சரித்த அன்றே, எங்களுக்கு இந்தியாவின் மீது பக்தி உண்டாயிற்று.”

இந்தியாவை நேசி!

மிஸ். மெக்லவுட், சுவாமிஜியின் மற்றொரு சிஷ்யை. அமெரிக்காவின் சிறந்த பெண்மணி. மிஸ். மெக்லவுட், மேல்நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.

இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தின் திரட்சி சுவாமிஜி என்று உணர்ந்திருந்த மெக்லவுட் அம்மையார், மேலைநாடுகளில் அவரது சிந்தனைகளை முழு மூச்சுடன் பரப்பி வந்தார். பல நல்ல காரியங்களை அவர் செய்வதற்கு அவருக்குச் சக்தி எங்கிருந்து கிடைத்தது?

தமது குருவான சுவாமிஜியிடம் மெக்லவுட் ஒரு முறை, ‘சுவாமிஜி, உங்களுக்கு எந்த வகையில் நான் சேவையாற்ற வேண்டும்?’ என்று கேட்டார்.

சுவாமிஜி அப்போது தீர்க்கமாக, ‘லிஷீஸ்மீ மிஸீபீவீணீ (இந்தியாவை நேசி)’ என்றார்.

மந்திரம் போன்ற அந்த அறிவுரைதான் அவரை அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவின் நலனுக்காகப் பாடுபட வைத்தது; இந்திய வாழ்க்கை முறையை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கவும் வைத்தது.

இந்தியாவை மறந்துவிடு!

சுவாமி விவேகானந்தர் மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிகப் பிரசாரம் செய்தார். மேலைநாட்டுச் சிந்தனைகளிடையே இன்று நாம் காணும் ‘இந்தியச் செல்வாக்கு’ சுவாமிஜியால் துவங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த பல ஆன்மிகச் சாதகர்களுக்கு உண்மையான ஆன்மிகத்தை வழங்க நினைத்தார் அவர்.

உலகுக்கும், சிறப்பாக இந்தியாவுக்கும் ஒரு மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருந்த அவருக்கு, ஆன்ம தாகம் உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே உடனிருந்து ஆன்ம சாதனைகளைக் கற்றுத் தர நேரமிருந்தது.

அதனால் சுவாமிஜி தமது சகோதரச் சீடரான சுவாமி துரியானந்தரை அமெரிக்காவுக்கு வரவழைத்தார். அப்போது அவர் கூறிய வார்த்தை இது.

‘மேலைநாட்டினருக்கு உண்மையான ஆன்மிக வாழ்க்கையை வாழ்ந்து காட்டு; இந்தியாவை மறந்துவிடு.’

அதன்படி சுவாமி துரியானந்தர் அமெரிக்கா சென்று சாந்தி ஆசிரமம் என்ற ஒன்றை ஆரம்பித்துப் பல சாதகர்களை உருவாக்கினார். இன்றும் அந்த இடம் சாதகர்களுக்கு ஆன்மிக ஆர்வத்தைத் தூண்டுவதாக விளங்குகிறது.

மறந்துவிடு வங்காளத்தை!

ஹரித்துவார் பகுதியில், பல சாதுக்களும் யாத்ரீகர்களும் போதிய மருத்துவ வசதியின்றி அல்லற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிரச்னை ஆண்டவனிடமிருந்து அவர்களது மனங்களை அடிக்கடி திசை திருப்பிக் கொண்டிருந்தது.

சுவாமி விவேகானந்தர் தமது பரிவ்ராஜக காலத்தில் அங்கு சென்றிருந்தபோது அதைக் கவனித்திருந்தார்.

அதனால் அவர் தமது சீடர் சுவாமி கல்யாணானந்தரிடம், அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற பல வகையிலும் தூண்டினார். முடிவில், ‘மக்களுக்குச் சேவை செய், வங்காளத்தை மறந்துவிடு’ என்று கூறி அனுப்பி வைத்தார்.

அன்று சுவாமிஜி கூறிய அந்த மந்திரச் சொற்கள் இன்றும் எப்படிச் செயலாற்றுகின்றன தெரியுமா?

தம் முழு ஆற்றலையும் திரட்டி சுவாமி கல்யாணானந்தர், ஹரித்துவாரில் சேவாசிரமத்தை ஆரம்பித்து அங்குள்ள ஏழை எளியவருக்கும், யாத்ரீகர்களுக்கும் மருத்துவ சேவை செய்து வந்தார். அவரது உழைப்பாலும், தியாகத்தாலும் நூறாண்டுகளுக்கும் மேலாக இன்றும் அந்த சேவாசிரமம் செம்மையாக இயங்கி வருகிறது.

‘வங்காளத்தை மறந்துவிடு’ என்று சுவாமிஜி கூறியதை கல்யாணானந்தர் அப்படியே ஏற்றுக் கொண்டார். அதனால் 30 வருடங்களுக்கும் மேல் கங்கலில் பணியாற்றிய சுவாமி கல்யாணானந்தர், தம் சொந்த மாநிலமான வங்காளத்துக்கு ஒருமுறைகூடச் செல்லவில்லை. குரு வாக்கியத்தை மதிப்பது அந்தத் துறவிக்குத்தான் என்னே நிஷ்டை!

‘இந்தியாவை நேசி!’ ‘இந்தியாவை மறந்துவிடு!’

இப்படி, ‘இந்தியாவை நேசி’ என்று கூறி, சுவாமிஜி ஒரு சீடருக்கு உத்வேகம் ஊட்டினார். மறுபுறம் மேலைநாட்டு மக்களும் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக மற்றொருவரைச் சேவை செய்யவும் தூண்டினார். அதற்காக ‘இந்தியாவை மற’ என்றார்.

இப்படி யார் யாருக்கு எந்தெந்த உபதேசங்களைத் தந்தருள வேண்டும் என்று ஒரு சிறந்த குருவால் மட்டுமே போதிக்க முடியும்.

சுவாமிஜியின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், தங்களது துறைகளில் சாதனை புரிந்தார்கள் என்பதை நாம் மேலே கண்டோம். அவரது வார்த்தைகளை இன்று படிப்பவர்களுக்கும் அந்தச் சக்தி வருமா?

ஆம். அவரது வார்த்தைகளுக்கு அன்றும் சக்தி இருந்தது. இன்றும் சக்தி உண்டு.

லட்சியத்தில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும், சாதிக்க நினைப்பவர்களுக்கும் சேவை செய்ய ஏங்குபவர்களுக்கும், இறைவனுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுக்கும், அறியாமை, சோம்பல், பொறாமை போன்றவற்றை விட்டுச் சிறகடிக்கத் துடிக்கும் அனைவருக்கும் சுவாமிஜியின் சிந்தனைகள் என்றும் உதவத் தயாராக உள்ளன.

தனி மனித, சமூக முன்னேற்றத்துக்குமான பல அற்புதக் கருத்துகளை சுவாமிஜி கூறியுள்ளார்.

அவரது சிந்தனைகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் தெரிந்து கொண்டாலே, அவை நம்முள் கிளர்ந்தெழச் செய்யும் சக்தியைக் கொண்டே நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிடலாம்.

இதோ சில சக்தி வாய்ந்த மந்திரங்கள்.

‘நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்.’

‘எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளே உள்ளன. உன்னால் எதையும் சாதிக்க முடியும்.’

‘நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்தவர்களாக வேண்டும்; ஆகியே தீர வேண்டும் என்பதே நான் கூறுவது.’

சுவாமிஜியின் இதுபோன்ற பொன்மொழிகள் உணர்ச்சி வேகத்தில் கூறப்பட்டவை அல்ல.

சுவாமி விவேகானந்தர் தமது ஒரு கடிதத்தில், ‘யாரெல்லாம் இந்தக் கடிதத்தைப் படிக்கிறார்களோ, அவர்களிடமெல்லாம் என் சக்தி வரும். நம்பிக்கை வையுங்கள்...’ என எழுதியுள்ளார்.

மற்றொரு கடிதத்தில், ‘நான் உங்களுடன்தான் இருக்கிறேன். நான் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகும் எனது சக்தி உங்களுடன் செயல்படும்’ என்கிறார்.

சுவாமிஜியின் சீடர் மன்மதநாத் கங்குலி. அவர் ஒருமுறை சுவாமிஜியிடம், ‘சுவாமிஜி, நான் உங்களது சொற்படி நடக்காமல், வாழ்க்கையில் வழுக்கி விழுந்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன்பின் எனக்கென்ன நடக்கும்?’ என்று கேட்டார்.

உடனே சுவாமிஜி அந்தச் சீடரைத் தீர்க்கமாகப் பார்த்து, ‘நீ எங்கு சென்றாலும், எந்த ஆழத்துக்குச் சென்றாலும் உன் குடுமியைப் பிடித்து இழுத்தாவது உன்னைக் கரையேற்ற வேண்டியது என் கடமை’ என்றார்.

இப்படி குருசக்தியுடன் கூடிய சுவாமி விவேகானந்தரின் திருவுருவமும், கருத்துகளும், அவரது சாந்நித்தியமும் நம்முள் பேராற்றலைத் தூண்டக்கூடியவை. அந்த அருளார்ந்த சக்தியை வாரி வாரிப் பருகுவோம்.


சுவாமி விமூர்த்தானந்தர்
ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

Thursday 5 August 2010

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன?
டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.
140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.
டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.
அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.
டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.
நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.
இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.
இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.
டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.
இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.
நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.
போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.
மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?
இப்படிதான் டிவிட்டர் துவங்கியது.