tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday 17 February 2012

இந்தியாவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது

இந்தியாவில் பயகங்ரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக இஸ்ரேலிய எரிசக்தித் துறை அமைச்சர் உசி லாண்டவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதுடெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி காரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததன் மூலம், இந்தியாவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தீவிரமாக உள்ளது என்றார். மேலும், பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவும் இஸ்ரேலும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதன்பிறகு, இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைய வேண்டும். இருநாடுகளும் ஒன்றிணைந்து, பயங்கரவாத ஒழிப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வது இரு நாடுகளுக்கும் புதிதல்ல. எனினும், வளர்ந்து வரும் பயங்கரவாதத்தால் நமது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்ததோடு, அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாகவும் கூறினார்.

Thursday 16 February 2012

ஆந்திராவில் அரசு வெப்சைட்டுகளில் நுழைந்த விஷமிகள் : முன்கூட்டியே பட்ஜெட்டை வெளியிட்டனர்

ஆந்திரமாநிலத்தின் சட்டசபை விவகாரம் , பட்ஜெட் விவரம் மற்றும் வரித்துறை, கிராமப்புற மேம்பாடு அரசு அறிவிக்கைகள் தொடர்பாபான 20 க்கும்மேற்பட்ட அரசு இணையதளங்கள் விஷமிகளால் அழிக்கப்பட்டுள்ளது. பல அரசு வெட்சைட்டுகளில் நுழைந்து தகவல்கள் அழித்து மேலும் தேவையற்ற விஷயங்களை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கிளிக்செய்யும் போது உருது எழுத்துக்கள் மற்றும் காதல் சின்னம் கொண்ட பகுதி மட்டுமே ஓப்பன் ஆகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்தது. ஆனால் முன்கூட்டிய பட்ஜெட் இப்படித்தான் இருக்கும் என்றும் சில கற்பனை தகவல்களும் வெளியிட்டுள்ளது. அரசு இணையதளத்தில் இவ்வாறு தொழில் நுட்பத்துடன் நுழைந்த விஷமிகள் யார் என விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக தனித்தெலுங்கானா மற்றும் மதுபான விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆந்திர சட்டசபையில் பெரும் கூச்சல் , குழப்பம் நிலவியது. தொடர்ந்து சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் ஆந்திர அரசு தொடர்பான வெப்சைட்டுகள் செயல் இழப்பு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர சட்டசபை கவர்னர் உரையுடன் துவங்கியுள்ளது. இந்த உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட தொடர்ந்து அவை கூடியதும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து சாராய முறைகேடு தொடர்பாக கோஷங்கள் எழுப்பினர். மதுபான விற்பனையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சில அமைச்சர்கள் தொடர்புடன் மதுபான விற்பனையில் முறைகேடு நடந்துள்ளது. என்றும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சபையில் விவாதிக்க வேண்டும் என்றும் , குரல் எழுப்பினர். தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி உறுப்பினர்கள் தனித்தெலுங்கானா தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுக்கொரு பக்கம்கோஷங்கள் எழுப்பினர் . சபநாயகர் மனேகாகர், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகிய இருவரும் , கவர்னர் உரை தொடர்பான விவாதம் முடிந்த பின்னர் எடுத்து கொள்ளப்படும் என்றனர். எந்த விவாதத்திற்குள் தயாராக இருக்கிறோம் என்றார். ஆனால் எதிர்கட்சியினர் செவி மடுக்க மறுத்து விட்டனர். இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவரும் , போக்குவரத்து துறை அமைச்சருமான,சத்தியநாராயணா கூறுகையில்; மாநிலத்தில் முக்கிய பிரச்சனைகள் பல இருக்கும்போது இந்த பிரச்னையை மட்டும் கையிலெடுப்பது ஏன்? சந்திரபாபு நாயுடு பெர்சனல் மோடிவ் காரணமாக இந்த விவகாரத்தை பெரிதாக்குகிறார். யாரும் ஆளும் கட்சியினர் முறைகேடாக நடக்கவில்லை . சட்டத்திற்குட்பட்டு தான் நடந்து வருகிறது என்றார். சமீபத்தில் இது தொடர்பான லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு நடத்தியிருந்தனர். வரி ஏய்ப்பு கண்டு பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை காரணம் காட்டித்தான் தெலுங்கு தேச கட்சியினர் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அரசு துறை தொடர்பான 21 வெப்சைட்டுகள் சமூக விரோதிகளால் முடக்கி சிதைக்கப்பட்டுள்ளது . பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக அரசு இணையளத்தில் இவ்வாறு நடந்திருப்பது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Friday 3 February 2012

ஐசிசி ரேங்கிங் : இந்திய வீரர்கள் பின்னடைவு

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் பின்தங்கி உள்ளனர். சச்சின் 9வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ராகுல் டிராவிட் 15வது இடத்தில் இருந்து 18வது இடத்துக்கும், வி.வி.எஸ்.லஷ்மண் 21ல் இருந்து 23வது இடத்துக்கும் பின்தங்கினர். சேவக் ஒரு இடம் கீழிறங்கி 24வது ரேங்க் பெற்றுள்ளார். தொடக்க வீரர் கம்பீர் 2 இடம் பின்தங்கி 34வது இடத்தில் உள்ளார். ஆஸி. டெஸ்ட் தொடரில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற விராத் கோஹ்லி 17 இடங்கள் முன்னேறி 50வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் 7 இடம் முன்னேறி 3வது இடத்திலும், முன்னாள் கேப்டன் பான்டிங் 8 இடம் முன்னேறி 14வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் மட்டுமே டாப் 10ல் இடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டாப் 20ல் கூட ஒரு இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாகப் பந்துவீசி அசத்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பீட்டர் சிடில், ரியான் ஹாரிஸ், நாதன் லியான் ஆகியோர் தரவரிசையில் முன்னேறி உள்ளனர்.

ஓவியம் வரைய புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு

கணினியில் ஓவியம் வரைவதற்கு பல்வேறு மென்பொருள்கள் உள்ளன. ஆனால் ஓவியம் வரைவதற்கென்றே பிரத்யோகமாக கிடைக்கக்கூடிய மென்பொருள்களில் ஒன்று ஸ்மூத் டிரா ஆகும். இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும். இதில் பேனா, பென்சில், வாட்டர் கலர், ஏர் ஸ்பிரே எனப் பல்வேறு விதமான பிரஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற முன்னணி மென்பொருள்களில் உள்ள பிளர், ஷார்ப்னர், பர்ன், ஸ்மட்ஜ் டூல்களும் லேயர் வசதியும் இதில் உள்ளது. எளிய தோற்றமும், எவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்ட இம்மென்பொருளில் வரைந்த படங்களை உட்பட முன்னணி படக் கோப்பு வடிவங்களாக சேமிக்கமுடியும்.