tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday 3 December 2010

கூகுளின் பெரிய செய்திகளை நீக்க.


இணையம் பயன்படுத்தும் யாவரும் இமெயிலுக்கென செல்வது ஜிமெயில் ஆகும். அதிக அளவில் மெயில்களைச் சேர்த்து வைத்திட ஜிமெயில் 7 ஜிபி இடம் தருவதனால், யாரும் வந்த மெயில்களை இன்பாக்ஸிலிருந்து நீக்குவதில்லை.

இருந்தாலும், ஏதேனும் ஒரு நாளில், மொத்தமாகச் சேர்ந்த மெயில்களினால், கூகுளிலும் இடம் இல்லாமல் போய்விடலாம் அல்லவா? ஜிமெயில் தொடங்கிய நாள் முதல் அதனைப் பயன்படுத்தி வருபவர்கள் பலருக்கு, இந்த சூழ்நிலை தற்போது ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் அதிக மெயில்கள் சேர்ந்து, 7 ஜிபி அளவை எட்ட இருக்கையில் “You have run out of space for your Gmail account. You will not be able to send or receive any emails until you delete some items”என ஒரு செய்தி கிடைக்கலாம்.

அப்படி ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க, நம் ஜிமெயில் இன்பாக்ஸில் உள்ள மெயில்களில், அதிக அளவு இடத்தைப் பிடித்திருக்கும் மெயில்களைக் கண்டறிந்தால், அவற்றை நீக்கிவிடலாமே! தேவையற்ற இøணைப்புகள், போட்டோக்கள், இமேஜ், வீடியோ கிளிப்கள் என அதிகம் இடம் பிடிக்கும் மெயில்களை எப்படிக் கண்டறிவது என்று இங்கு காணலாம்.

இதற்கு நமக்கு உதவுவது FindBigmai என்னும் சேவையாகும். இந்த சேவை, நம் ஜிமெயில் இன்பாக்ஸினை முழுமையாக ஸ்கேன் செய்து, எந்த எந்த மெயில்கள், அதிக அளவில் இணைப்புகளைக் கொண்டுள்ளன என்று காட்டும். அவற்றைத் தனியே வடிகட்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.

1. முதலில் http://findbigmail.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

2. அங்கு உங்கள் இமெயில் முகவரியைத் தரச் சொல்லி கட்டம் கிடைக்கும். பின்னர், அருகே உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டில் நுழைய, உங்கள் அனுமதி கேட்கப்படும்.

3. அனுமதி கொடுத்தவுடன், FindBigmail தன் பணியைத் தொடங்கும். பெரிய அளவிலான இணைப்புகள், படங்கள், டாகுமெண்ட்கள் மற்றும் பிற பைல்களைக் காட்டும். உங்கள் மெயில் இன்பாக்ஸைப் பொறுத்து, இந்த பணி முடிய 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் ஆகலாம். இந்த பணி நடக்கையில், நீங்கள் தொடர்ந்து உங்கள் இமெயில் பார்க்கும் பணியையும் மேற்கொள்ளலாம்.

4. தேடல் நடக்கும்போதே, எத்தனை மெயில்களில் அதிக அளவில் இணைப்புகள் உள்ளன என்ற செய்தி காட்டப்படும். இந்த தேடல் முடியும் வரை, உங்கள் பிரவுசரை மூடக் கூடாது. முடிவில், மிகப் பெரிய மெசேஜ்களின் எண்ணிக்கை, ஓரளவில் இடத்தைப் பிடித்தி ருக்கும் மெயில்களின் எண்ணிக்கை என சார்ட் மூலம் காட்டப்படும்.

அதன் அருகே உள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், அவை பட்டியலி டப் படும். அவற்றில் கிளிக் செய்து, படித்துப் பார்த்து, தேவையில்லை என்றால், அவற்றை நீக்கிவிடலாம். இந்த சேவை, பல புதிய லேபிள்களையும் உருவாக்கும்.

அவற்றில் அதிக அளவில் இடம் பிடிக்கும் டாப் 20 இமெயில்கள், பின்னர் அளவின் அடிப்படையில் இடம் கொண்டிருக்கும் இமெயில்களுக்கான லேபிள்கள் இருக்கும். இவற்றை ஜிமெயிலின் பக்கவாட்டில் இருக்கும் சைட்பாரில் காணலாம்.

இவற்றைக் கிளிக் செய்து, மொத்தமாகவும், தனித்தனியாகவும் அழிக்கலாம். மொத்தமாக அழிக்க, Settings > Labels சென்று அழிக்கலாம். ஒவ்வொன்றாகவும் நீக்கலாம். இவற்றை அழிக்கையில், எவ்வளவு இடம் கிடைக்கிறது எனவும் காட்டப்படும். இவ்வளவும் முடிந்த பின்னர், பெரிய வீட்டில் இஷ்டத்திற்கு விளையாடும் குழந்தை போல, உங்கள் ஜிமெயிலை நீங்கள் பயன்படுத்தலாம்.

தமிழ் மொழி பேசும் ஆப்பிள் ஐபேட்....

 
இந்திய 'சுவையில்' இனி 'ஆப்பிளை' சுவைக்கலாம். ஆம், ஆப்பிள் ஐபேடுகளில், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சேவையைப் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

உலகம் முழுக்கத் தமிழர்கள் பரவியிருந்தாலும் சில விஷயங்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதில் ஒன்று ஐபேட். இதில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக் காண, பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள புதிய ஐஓஎஸ் (4.2.1) ஆபரேட்டிங் சிஸ்டம் இந்தக் குறையைப் போக்குகிறது. இதன் மூலம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆப்பிள் ஐபேடில் படிக்கவும் அதிலிருந்து இந்திய மொழிகளில் மெயில் அனுப்பவும் முடியும்.

இந்தியச் சந்தையின் மதிப்பை உணர்ந்து, அதை அங்கீகரிக்கும் வகையில் தனது ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் இடம் பெற செய்துள்ளது

ஐபேடுகளில் தமிழ் என்பது மிகப் பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஐபேடுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்தான் மிகப் பெரிய சந்தையாக உள்ளன.

தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இணைத்திருப்பதன் மூலம் இது இனி இந்தியாவிலும் மிகப் பெரிய சந்தையாக மாறவாய்ப்புள்ளது. புதிய ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமில், புதிய மொழிகள், அகராதிகள், கீபோர்டுகள் ஆகிய வசதிகள் உள்ளன.

இருப்பினும் அதில் எந்த மொழிகளை ஐஓஎஸ் ஏற்கும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளை நாம் பயன்படுத்த முடியும்.

புதிய வைரஸ் எச்சரிக்கை


மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள சிறிய குறை காரணமாக, புதிய வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி, ஒருவர் தொலைவில் இருந்தே, இன்னொருவரின் கம்ப்யூட்டரைத் தன் வயப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது. இது ஒரு ஸீரோ டே அட்டாக் (Zero Day Attack) ஆக இருக்கும்.

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவன வல்லுநர் விக்ரம் தாக்கூர் இது பற்றிக் கூறுகையில், இமெயில் மூலம் கவனத்தைத் திருப்பி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனத்தைப் பயன்படுத்தி, வைரஸ் அல்லது வேறு மால்வேர் உள்ளே புகலாம் என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்குக் குறி வைத்துள்ள நிறுவனம் அல்லது குழு உறுப்பினர் ஒருவருக்கு, இமெயில் ஒன்றை அனுப்பலாம். அதில் அந்நிறுவனம் அல்லது குழுவின் இணையதளம் போலவே தோற்றம் அளிக்கும், தளம் ஒன்றிற்கான லிங்க் தரப்பட்டிருக்கும்.

இந்த லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் காட்டப்படும். பின்னணியில், மால்வேர் அல்லது வைரஸ், மேலே தரப்பட்டுள்ள பிழையான இடத்தைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடியும். பின்னர், அந்த இணைய தளத்தில் எந்த பைலையும் அப்லோட் செய்திட முடியும்.

இந்த சிக்கல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6, 7 மட்டுமின்றி பதிப்பு 8லும் உள்ளது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சோதனைப் பதிப்பு 9 ஐப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இமெயில்களை எச்.டி.எம்.எல். பார்மட்டில் படிக்காமல், வெறும் டெக்ஸ்ட் வடிவில் படித்தால், இதனைத் தவிர்க்கலாம்.

ஸீரோ டே / ஸீரோ அவர் அட்டாக் என்பது, ஒரு அப்ளிகேஷனை உருவாக்கியவர் களுக்கே, அந்த அட்டாக் எங்கு ஏற்படுகிறது என்ற விபரம் தெரியாமல் இருக்கும் நிலையாகும். பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, அவரால் எங்கு பிழை உள்ளது என அறிந்து, அதனைத் தீர்க்க இயலும்.

எனவே தாக்குதல் நடைபெறும் காலத்தில், அதனைத் தடுக்க இயலாநிலை இருக்கும். இதனையே ஸீரோ டே அல்லது ஸீரோ அவர் அட்டாக் என்று கூறுகின்றனர்.

உண்மை ஆனால் என்ன செய்ய?

சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது.ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன.தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுதான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட எல்லா முறைகேடுகளும், அமைச்சர் ஆ. ராசாவின் ஒப்புதலுடன் இவரால்தான் அரங்கேற்றப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. அதையும் மீறி, இவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, "தினமணி' உள்ளிட்ட பல நாளிதழ்கள் தலையங்கத்தில் அதை வன்மையாகக் கண்டித்தன. இந்திய சரித்திரத்திலேயே நடந்தேறியிருக்கும் மிகப்பெரிய முறைகேடுக்குத் துணைநின்றவரைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சட்டை செய்யாமல் மத்திய அரசு நியமித்ததே இந்த "மெகா' ஊழலை மறைக்கத்தானோ என்று அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.இப்படி அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் தலைமையில், திருடனே தீர்ப்பெழுதுவதுபோல 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விசாரணையை எப்படி நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அந்த அதிகாரியின் தரப்பில் கூறப்பட்டிருக்கும் பதில் அதைவிட விசித்திரம். ""இந்திய அரசுப் பணியின் உயர்ந்த பண்புகளைக் காப்பாற்றும் விதத்தில், 2ஜி அலைக்கற்றை சம்பந்தப்பட்ட விசாரணையில் இருந்து நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று பெரிய மனது பண்ணி பி.ஜே. தாமஸ் பதில் அளித்திருக்கிறார். அதாவது தான் பதவி விலகுவதாக இல்லை என்பதுதான் பதில்.தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக இருக்கும் ஒருவரை, அவருக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகள் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்தாலும் அந்த விசாரணை முறையாக இருக்குமா? என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் ஏனோ எழுப்பாமல் விட்டுவிட்டிருக்கிறது.நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற அரசியல் சட்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை விசாரிக்கும் உரிமை அந்தக் குழுவுக்கு இருக்குமா என்பதும் நீதிமன்றம் தீர்த்து வைக்கவேண்டிய சட்டச் சிக்கல். தாமûஸ இந்தப் பதவியில் அமர்த்திவிட்டால், இதுபோன்ற பல அரசியல் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி 2ஜி அலைக்கற்றை முறைகேடுகளைப் பற்றிய விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எண்ணமாக இருந்ததோ என்னவோ!தான் எந்தக் காரணத்துக்காகவும் பதவி விலகத் தேவையில்லை என்று பி.ஜே.தாமஸ் கூறியிருப்பதன் பொருள், யாரும் என்னை எதுவும் செய்துவிட முடியாது என்பதுதான். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப்போல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையரையும் பதவியிலிருந்து விலக்க வேண்டுமானால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் (இம்பீச்மெண்ட்) நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது அவருக்கும் தெரியும், அவரைப் பதவியில் நியமித்தவர்களுக்கும் தெரியும்.இத்தனை குற்றச்சாட்டுகளுக்குப் பிறகும், பொறுப்பான பதவிகளை வகித்த இந்திய அரசுப் பணியைச் சேர்ந்த ஓர் அதிகாரி கொஞ்சமாவது மானம், ரோஷம் இருந்தால் அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பாரா? பதவிக்காக இந்திய அரசுத் துறை அதிகாரிகள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பி.ஜே.தாமஸ் ஓர் உதாரணம். தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் இதைவிட ஒருபடி மேலே போய், சட்ட அமைச்சகத்தையும், பிரதமர் அலுவலகத்தையுமே கேலிக்குரியவையாக மாற்றியிருப்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெரிகிறது. முறையாக ஒதுக்கீடு நடத்தப்படாததால் இத்தனை கோடிகள் நாட்டுக்கு நஷ்டம் என்று உத்தேசக் கணக்கு கூறுகிறார்களே தவிர, நான் லஞ்சம் வாங்கினேன் என்றோ, அந்தப் பணம் எனக்குக் கிடைத்ததென்றோ யாரும் கூறவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ராசா தரப்பு வாதம். 45 நிமிட அவகாசத்தில் ரூ. 1,600 கோடிக்கான வங்கி உத்தரவாதத்துடன் எப்படி சில நிறுவனங்கள் ஒதுக்கீடு அனுமதிக்கு விண்ணப்பித்தன என்கிற கேள்விக்கும், பிரதமரின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது ஏன் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லாமல் பிரச்னையைத் திசை திருப்பத்தான் இப்போதும் முனைகிறார் அவர்.இதெல்லாம் போகட்டும். இந்தியப் பிரதமர் என்கிற பதவி இருக்கிறதே, உலகிலேயே மிக அதிகமான அதிகாரத்தை உடைய பதவி அதுவாகத்தான் இருக்கும். இந்த அளவு அதிகாரம் அமெரிக்க அதிபருக்குக்கூடக் கிடையாது. அதிகாரம் மட்டுமா, மரியாதையும், கௌரவமும் உள்ள பதவியல்லவா அது? பண்டித ஜவாஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும், இந்திரா காந்தியும் அமர்ந்த நாற்காலி அது. அதில் அமர்ந்திருப்பவர் எப்படி இருக்க வேண்டும்?தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தனது அறிவுரையைக் கேட்கவில்லை என்ற உடனேயே அவரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா? "பிரதமருக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது' என்று சொன்னவுடன் ஒன்று மறுத்திருக்க வேண்டும், இல்லை தனது அமைச்சரவையிலிருந்து அவரை அகற்றியிருக்க வேண்டும். அரசியல் நிர்பந்தம் என்றால், தனது சுயமரியாதையைகூடக் காரணம் காட்டி, சந்திரசேகர் செய்ததுபோலத் துணிந்து பதவி விலகி இருக்க வேண்டும்.என்ன சொல்லி என்ன பயன்? இவர்கள் எல்லாம்...

தொலைந்த காமிராவை கண்டெடுக்க ஒரு இணையதளம்

காமிரவை தொலைத்து விட்டாலோ அல்லது யாராவது தவறவிட்ட காமிராவை கண்டெடுத்தாலோ எங்களிடம் வாருங்கள் என்கிறது அந்த இணையதளம்.மிகவும் பொருத்தமாக காமிரா ஃப்வுண்டு என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த தளம் தொலைந்து போகும் காமிராக்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது.
கண்டேன் காமிராவை என்று சொல்வதற்கும் காமிராவை பார்த்தீர்களா?என்று கேட்பதற்கும் உதவும் இந்த தளத்தின் தேவையும் அருமையும் சொல்லமலேயே விளங்கும்.
எந்த பொருளையுமே தொலைத்து விட்டு தேடுவது சோதனையான அனுபவம் தான்.தவறவிட்ட பொருள் கிடைக்குமா என்னும் எதிபார்ப்புக்கு மத்தியில் கிடைகாமல் போய்விடுமே என்னும் பதட்டம் வாட்டி எடுக்க தேடி அலைவது உண்மையிலேயே கஷ்டமானது தான்.
மற்ற பொருட்களை விட செல்போன் மற்றும் காமிராக்களை தொலைத்து விட்டு தேடுவது இரட்டிப்பு சோதனையானது.காரணம் செல்போனை தொலைக்கும் போது அந்த சாதனத்தை மட்டுமே இழப்பதில்லை அதனோடு சேர்த்து தொடர்புகளையும் தான் பறிகொடுக்கிறோம்.அதே போல காமிராக்கள் தொலைந்தன என்றால் புகைப்படங்களும் அவை தொடர்பான நினைவுகளும் சேர்த்தே காணாமல் போகின்றன.(இப்போது இந்த பட்டியலில் பென் டிரைவுகளையும் சேர்த்து கொள்ளலாம்)
எனவே செல்போன் மற்றும் காமிராக்கள் தொலையும் போது மனது பரிதவிக்கவே செய்யும்.
ஆனால் ஒன்று செல்போன்களை விட காமிராக்களை கண்டெடுக்கும் போது அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.காரணம் அதில் உள்ள புகைப்படங்கள் தான்.காமிராவில் சேமிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் மகிழ்ச்சி பொங்கும் புகைபப்டங்களை பார்க்கும் போது அதனை உரியவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்னும் எண்ணம் இயல்பாகவே தோன்றக்கூடும்.
ஆனால் இந்த எண்ணத்தை நிறைவேற்றுவது அத்தனை சுலபாமானதல்ல.காமிரா யாருடையது என்பதே தெரியாத நிலையில் தொலைத்தவரை எப்படி கண்டு பிடிப்பது?காமிராவில் உள்ள புகைப்படங்களை இணையத்தில் இடம் பெற வைத்து யாருக்காவது அடையாளம் தெரிகிறதா? என்று வலைவீசி பார்க்கலாம்.
இப்படி தொலைந்த காமிராக்களை இனையம் வழியிலான தேடல் வேட்டை மூலம் உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சில நெகிச்சியான கதைகள் இல்லாமல் இல்லை.ஆனால் இதற்கு பொருமையும் அவசியம் .கூடவே அதிர்ஷடமும் தேவை.அதோடு இன்றைய அவசர உலகில் ஒரு காமிராவின் உரிமையாளரை தேடி அலைவதற்கான நேரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
தவிரவும் தனிமனித முயற்சியை விட தவறவிடப்பட்ட காமிரக்களை உரியவரிடம் ஒப்படைக்க ஒருங்கணைக்கப்பட்ட முயற்சி இருந்தால் நன்றாக தானே இருக்கும்.அதாவது எங்காவது காமிராவை பார்த்ததுமே,இந்த இடத்தில் இதனை கண்டெடுத்தேன் என்று தகவல் தெரிவித்து இதில் உள்ளவர்களை உங்களுக்கு தெரியுமா?என்று கேட்க மையமாக ஓரிடம் இருந்தால் எப்படி இருக்கும்?அதே போல காமிராவை தொலைக்க நேர்ந்தால் ,எனது காமிரவை இந்த இடத்தில் தவற விட்டேன் தயவுசெய்து பார்த்தால் சொல்லுங்கள் என்று விசாரிக்கவும் ஓரிடம் இருந்தால் எப்படி இருக்கும்?
இவற்றுக்கெல்லாம் பதிலாக தான் காமிரா ஃபவுண்டு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைந்த மற்றும் கண்டெக்கப்பட்ட காமிராக்களுக்கான(அதே போஅல் அனாதயாக இருக்கும் புகைப்படங்களுக்கும்) மைய இடமாக இது விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த  தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதை தான் இந்த தளம் செய்கிறது.
தவறவிடப்பட்ட காமிராவை கண்டெடுப்பவர்கள் அதில் உள்ள புகைப்படங்களை இங்கே பதிவேற்றி அதில் உள்ளவர்களை தெரியுமா என்று கேட்கலாம்.இப்போது புதிதாக காமிரா கண்டெடுக்கப்பட்ட இடத்த மிகச்சரியாக வரைபடத்தில் சுட்டிக்காட்டும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
அதே போல காமிராவை தொலைத்தவர்களும் அது பற்றிய தகவலை இங்கே குறிப்பிட்டு அதனை தேடலாம்.
கண்டெடுக்கபப்ட்ட காமிராக்களில் இருந்த படங்கள் தனி கலாரியாக கொடுக்கபப்ட்டுள்ளது.அதில் உலாவி உங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கின்றனறா என்று சுட்டிக்காட்டினால் உரியவரை தொடர்புகொள்ள உதவியாக இருக்கும்.ஆனால் ஒன்று முதலில் இந்த தளத்தில் உறுப்பினராக் சேர வேண்டும்.
இந்த தளம் எந்த அளவுக்கு பிரபலமானதாகிறதோ அந்த அளவுக்கு தொலைந்த காமிராக்களை கண்டு பிடிப்பது சுலபாமாகும்.
இணையதள முகவரி;http://www.camerafound.com/