tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday 23 January 2012

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலைநோக்கி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலைநோக்கி அமையவுள்ளது. பூமியில் நிலவும் பருவநிலைமாற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஆராய, மிகப் பெரிய சோலார் தொலை நோக்கியை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசின் அறிவியல் ‌தொழில் நுட்ப மையம் முடிவு செய்திருந்தது. இதனை அமைக்க, அம்மாநிலத்தின் ‌லடாக் மாவட்டத்தின் அடர்ந்த பனிப்பிரதேசமான பாங்காங்ஷோ ஏரிப்பகுதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்பு, லடாக்கில் சோலார் தொலை நோக்கியை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த தொலை நோக்கியை அமைப்பது குறித்து மாநில அரசும், மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை செயலர் மாதவ் லால், மத்திய
அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கு காஷ்மீர் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், சோலார் தொலைநோக்கி கட்டுமான பணிகள் தொடங்க தேவையான உதவிகளை செய்ய அரசு தயராக உள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோலார் தொலைநோக்கியினால் 134 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கினை 5 கி.மீ ‌அருகில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ராகுல் பொதுக்கூட்டத்தில் ஷூ வீச்சு

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல், இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் தன்னை தடுத்து நிறுத்துவிட முடியாது என்றார்.

ஒரு ஷூவை வீசுவதன் மூலம் என்னைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்றும், நான் ஓடிவிடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடிவிட மாட்டேன் என்று ராகுல் தெரிவித்தார்.

உத்தரகண்ட் பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகும். மீண்டும் இங்கு ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் ஒரு சுவையான தளம்

சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ரொட்டி, தின்பண்டங்கள், அரிசி உணவுப் பண்டங்கள், ஊறுகாய்கள், சட்னி, ஸ்வீட், சூப், சாலட், பசி எடுக்க வைக்கும் சூப், குடிக்க பானங்கள் எனப் பல பிரிவுகள் இந்த தளத்தில் அவற்றிற்கான லிங்க்குகளுடன் காத்திருக்கின்றன.
தென்னிந்திய உணவு பண்டங்களுக்கென உள்ள தளத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பட்டியல் தரப்பட்டு செய்முறை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் தயாரிக்க தனியான உணவுப் பண்டங்கள் கொண்ட தளம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி என இது நீள்கிறது.
நான் டயட்டில் இருக்கிறேன். எனக்கு இது சரியாக வராதே என்று கூறுபவர்களுக்கு எனத் தனியே ஒரு பக்கம் உள்ளது. குறைந்த கலோரி உள்ள உணவுப் பண்டங்களை எப்படி, எந்த வகை தானியம், காய்கறி கொண்டு தயாரிப்பது எனவும் ஒரு பக்கம் உள்ளது. மைக்ரோ வேவ் அடுப்புதாங்க இன்றைக்கு நடைமுறை, இந்த ரெசிப்பியெல்லாம் சரியாக வருமா என்ற கேள்வி கேட்பவர்களுக்குத் தனியே மைக்ரோவேவ் அடுப்பில் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதிலும் சைவம், அசைவம் என பிரிவுகள் உள்ளன.
தங்கள் மகள்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், முன்பு விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மகளிர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சமையல் நூல்களை வாங்கி, சீதனத்தோடு கொடுத்து அனுப்புவது வழக்கம். இப்போது இந்த தளக் குறிப்புகளை டவுண்லோட் செய்து "சிடி'யாகத் தரத் தொடங்கி உள்ளதாக, இந்த குறிப்பு குறித்து கோடி காட்டிய வாசகி எழுதி உள்ளார். அந்த வாசகிக்கு நன்றி. உங்கள் மகள் மணமுடித்துப் போனாலும், வேலை நிமித்தம் வெளிநாடு சென்றாலும், சமையலுக்கு அவர்களுக்கு உதவ இந்த தளம் நிச்சயம் உதவிடும் என்பது உறுதி. ஒருமுறை சென்று பார்த்தால், தினமும் உங்கள் சமையலை இதன் அடிப்படையில் தான் முடிவு செய்வீர்கள்.
அந்த தளத்தின் முகவரி http://www.recipesindian.com/

Sunday 22 January 2012

சமாதானத்தை கட்டியெழுப்புவதே இலங்கை பயணத்தின் நோக்கம்: அப்துல் கலாம்


சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலங்கை பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சிந்தனை முழக்கத்தின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012 ஐ இலங்கைஅரசு பிரகடனப்படுத்தியுள்ளது.இப் பிரகடனத்த்தின் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்றார்.இணக்கம் மற்றும் செழிப்புக் கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.இந்த பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த அப்துல் கலாம், எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்தப் பிரச்னைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை எனத் தெரிவித்தார்.நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள அப்துல் கலாம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.