
பிரிந்து இருந்த முகேஷ் மற்றும் அனில் அம்பானி சகோதரர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் நேற்று சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது முக்கிய அறிவிப்புக்கள் ஏதும் வெளியிடப்படவில்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும அதிகாரி பிரமல் நத்வானி தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு ஜூலை மாதம் திருபாய் அம்பானி மரணத்திற்கு பிறகு 2006ல் முறையாக சொத்துக்களை பிரித்துக் கொண்ட பின்னர் சந்தித்து கொள்ளவில்லை. தங்கள் தந்தையின் 80வத பிறந்த நாளில் திருபாய் அம்பானியின் நினைவு மண்டப திறப்பு விழாவில் இரு சகோதரர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நினைவு மண்டபம் ஜனவரி 16ம் தேதி பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. அனில் அம்பானி குடும்பத்தினர் காலையிலும், முகேஷ் அம்பானி குடும்பத்தினர் பிற்பகலிலும் கலந்த கொண்டனர். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினர்களும் சந்தோஷமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment