tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday, 29 December 2011

தாராபுரத்தில் பயங்கர தீ விபத்து:



தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே ஏராளமான 4 சக்கர வாகன ஓர்க் ஷாப்கள் உள்ளது. இன்று காலை 10 மணியளவில் இங்குள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவியது. ஒர்க்ஷாப்புடன் பெயிண்ட் கடையும் இருந்தது.
இந்த கடைக்கும் தீ பரவியது. பெயிண்ட் மீது தீப்பற்றிக் கொண்டதால் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. ஒர்க்ஷாப்பில் உள்ள ஆயில்கள் மீது தீப்பற்றியதும் கரும் புகை உருவானது. சுமார் 100 அடி உயரத்திற்கு தீ கரும் புகையுடன் எரிந்தது. இதனால் பக்கத்தில் கடை வைத்து இருப்பவர்களும், ஒர்க்ஷாப் அருகே குடியிருந்து வருபவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தீ விபத்து குறித்து தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். குடி நீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் சுமார் 1 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது.
இந்த தீ விபத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் ஓர்க்ஷாப், ராஜா, சேகர், சத்தார் ஆகியோரது ஓர்க்ஷாப், ஆறுமுகத்தின் பெயிண்ட் கடை, முருகன் என்பவரது ஸ்பிரிங் பிளேட் கடை ஆகிய 6 கடைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சேத மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஆனாலும் முழுமையாக தெரியவில்லை. வருவாய் துறையினர் வந்து சேத விவரங்களை மதிப்பிட்டு வருகிறார்கள். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஆனாலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment