மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. மொபைல் சேவை நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகமாகி கொண்டு உள்ளது. ஆதலால் மொபைல் நிறுவனங்களும் புதிய சலுகைகளை வாசகர்களுக்கு வழங்கி வாசகர்களை கவர்கிறது. அந்த வகையில் பிரபல மொபைல் சேவை நிறுவனமான Airtel நிறுவனம் ஒரு புதிய சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. பிரபல சமூக இணையதளமான ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.
இந்த புதிய சலுகை படி ட்விட்டர் தளத்தை மார்ச்1 2012 வரை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். GPRS உள்ள மொபைல்களில் கீழே உள்ள URL கொடுத்து ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகிக்கலாம்.