tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday 3 December 2010

தொலைந்த காமிராவை கண்டெடுக்க ஒரு இணையதளம்

காமிரவை தொலைத்து விட்டாலோ அல்லது யாராவது தவறவிட்ட காமிராவை கண்டெடுத்தாலோ எங்களிடம் வாருங்கள் என்கிறது அந்த இணையதளம்.மிகவும் பொருத்தமாக காமிரா ஃப்வுண்டு என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த தளம் தொலைந்து போகும் காமிராக்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது.
கண்டேன் காமிராவை என்று சொல்வதற்கும் காமிராவை பார்த்தீர்களா?என்று கேட்பதற்கும் உதவும் இந்த தளத்தின் தேவையும் அருமையும் சொல்லமலேயே விளங்கும்.
எந்த பொருளையுமே தொலைத்து விட்டு தேடுவது சோதனையான அனுபவம் தான்.தவறவிட்ட பொருள் கிடைக்குமா என்னும் எதிபார்ப்புக்கு மத்தியில் கிடைகாமல் போய்விடுமே என்னும் பதட்டம் வாட்டி எடுக்க தேடி அலைவது உண்மையிலேயே கஷ்டமானது தான்.
மற்ற பொருட்களை விட செல்போன் மற்றும் காமிராக்களை தொலைத்து விட்டு தேடுவது இரட்டிப்பு சோதனையானது.காரணம் செல்போனை தொலைக்கும் போது அந்த சாதனத்தை மட்டுமே இழப்பதில்லை அதனோடு சேர்த்து தொடர்புகளையும் தான் பறிகொடுக்கிறோம்.அதே போல காமிராக்கள் தொலைந்தன என்றால் புகைப்படங்களும் அவை தொடர்பான நினைவுகளும் சேர்த்தே காணாமல் போகின்றன.(இப்போது இந்த பட்டியலில் பென் டிரைவுகளையும் சேர்த்து கொள்ளலாம்)
எனவே செல்போன் மற்றும் காமிராக்கள் தொலையும் போது மனது பரிதவிக்கவே செய்யும்.
ஆனால் ஒன்று செல்போன்களை விட காமிராக்களை கண்டெடுக்கும் போது அதனை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.காரணம் அதில் உள்ள புகைப்படங்கள் தான்.காமிராவில் சேமிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் மகிழ்ச்சி பொங்கும் புகைபப்டங்களை பார்க்கும் போது அதனை உரியவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்னும் எண்ணம் இயல்பாகவே தோன்றக்கூடும்.
ஆனால் இந்த எண்ணத்தை நிறைவேற்றுவது அத்தனை சுலபாமானதல்ல.காமிரா யாருடையது என்பதே தெரியாத நிலையில் தொலைத்தவரை எப்படி கண்டு பிடிப்பது?காமிராவில் உள்ள புகைப்படங்களை இணையத்தில் இடம் பெற வைத்து யாருக்காவது அடையாளம் தெரிகிறதா? என்று வலைவீசி பார்க்கலாம்.
இப்படி தொலைந்த காமிராக்களை இனையம் வழியிலான தேடல் வேட்டை மூலம் உரியவரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சில நெகிச்சியான கதைகள் இல்லாமல் இல்லை.ஆனால் இதற்கு பொருமையும் அவசியம் .கூடவே அதிர்ஷடமும் தேவை.அதோடு இன்றைய அவசர உலகில் ஒரு காமிராவின் உரிமையாளரை தேடி அலைவதற்கான நேரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
தவிரவும் தனிமனித முயற்சியை விட தவறவிடப்பட்ட காமிரக்களை உரியவரிடம் ஒப்படைக்க ஒருங்கணைக்கப்பட்ட முயற்சி இருந்தால் நன்றாக தானே இருக்கும்.அதாவது எங்காவது காமிராவை பார்த்ததுமே,இந்த இடத்தில் இதனை கண்டெடுத்தேன் என்று தகவல் தெரிவித்து இதில் உள்ளவர்களை உங்களுக்கு தெரியுமா?என்று கேட்க மையமாக ஓரிடம் இருந்தால் எப்படி இருக்கும்?அதே போல காமிராவை தொலைக்க நேர்ந்தால் ,எனது காமிரவை இந்த இடத்தில் தவற விட்டேன் தயவுசெய்து பார்த்தால் சொல்லுங்கள் என்று விசாரிக்கவும் ஓரிடம் இருந்தால் எப்படி இருக்கும்?
இவற்றுக்கெல்லாம் பதிலாக தான் காமிரா ஃபவுண்டு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைந்த மற்றும் கண்டெக்கப்பட்ட காமிராக்களுக்கான(அதே போஅல் அனாதயாக இருக்கும் புகைப்படங்களுக்கும்) மைய இடமாக இது விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த  தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதை தான் இந்த தளம் செய்கிறது.
தவறவிடப்பட்ட காமிராவை கண்டெடுப்பவர்கள் அதில் உள்ள புகைப்படங்களை இங்கே பதிவேற்றி அதில் உள்ளவர்களை தெரியுமா என்று கேட்கலாம்.இப்போது புதிதாக காமிரா கண்டெடுக்கப்பட்ட இடத்த மிகச்சரியாக வரைபடத்தில் சுட்டிக்காட்டும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
அதே போல காமிராவை தொலைத்தவர்களும் அது பற்றிய தகவலை இங்கே குறிப்பிட்டு அதனை தேடலாம்.
கண்டெடுக்கபப்ட்ட காமிராக்களில் இருந்த படங்கள் தனி கலாரியாக கொடுக்கபப்ட்டுள்ளது.அதில் உலாவி உங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கின்றனறா என்று சுட்டிக்காட்டினால் உரியவரை தொடர்புகொள்ள உதவியாக இருக்கும்.ஆனால் ஒன்று முதலில் இந்த தளத்தில் உறுப்பினராக் சேர வேண்டும்.
இந்த தளம் எந்த அளவுக்கு பிரபலமானதாகிறதோ அந்த அளவுக்கு தொலைந்த காமிராக்களை கண்டு பிடிப்பது சுலபாமாகும்.
இணையதள முகவரி;http://www.camerafound.com/

No comments:

Post a Comment