tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday 1 April 2011

''தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு'' : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பாலானோர் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதையே விரும்புவதாகவும், இந்த கூட்டணிக்கே ஓட்டளிக்க இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆங்கில இதழ் நடத்திய நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் டைரக்டர் ராஜநாயகம் தலைமையில் தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதன்படி 48.6 சதவீதத்தினர் அ.தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டளிக்கவிருப்பதாகவும், 41.7 சவீதத்தினர் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

மார்ச் மாதம் 21 ம் தேதி முதல் 29 ம் தேதிவரை எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 51. 1 சதவீதத்தினர் அ.தி.மு.க கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும், 36. 7 சதவீதத்தினர் மட்டும் தி.மு.க,.கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., 105 சீட்களையும், தி.மு.க., 70 சீட்களையும் பெறும் என்றும் , இரு கட்சிகளும் செல்வாக்குள்ள 59 தொகுதிகள் மிக கடும் போட்டியாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம்விவகாரத்தினால் ராஜா கைது , விலைவாசி உயர்வு, குடிநீர் பற்றாக்குறை , மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளதாவுகவும் தெரியவந்ததாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. தேர்தல் நெருங்கும்நேரத்தில் தி.மு.க., கூட்ணியில் பிரசார யுக்திகள் கையாளும் விதத்தில் இந்த கணிப்பில் மாற்றம் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் ! பிரபல இந்தியா டூடே மற்றும் அவுட்லுக் பத்திரிகைகள் நடத்திய கணிப்பிலும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டூ டே இதழ்- ஓ.ஆர்.ஜி., இணைந்து வெளியிட்டுள்ள கணிப்பில் ; 164 இடங்களை பிடித்து இந்த கூட்டணி அமோகமாக ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளது. அ.தி.மு.க., கூட்டணி மொத்தம் பதிவாகும் ஓட்டில் 50 சதம் கைப்பற்றும் என்றும் 50.5 சதவீதத்தினர் ஊழல் ஒரு முக்கிய பிரச்னையாக கருதுவதாகவும், இவர்கள் ராஜா விவகாரம் குறித்த தெரிந்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

விலைவாசி பிரச்னை, முக்கிய பிரச்சனையாக மக்களை ( 59. 3 சதம் ) பாதித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, இலங்கை அரசினால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ஊழல் செய்வதில் தி.மு.க.,வை விட, ஜெயலலிதா (அம்மா ) பரவாயில்லை என்றும் 39. 3 சதவீதத்தினர் கூறியுள்ளனர். ஜெயலலிதா - கருணாநிதி இவர்களில் யார் முதல்வராக விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 36.1 சதவீதத்தினர் ஜெ.,வுக்கும், 34.1 சதவீதத்தினர் கருணாநிதியே முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணிக்கு 50 சதம், தி.மு.க., கூட்டணிக்கு 45 சதமும் ஆதரவு உள்ளன. ஆட்சி மாற்றம் வேண்டும் என 51 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.


அவுட்லுக், எம்டிஆர்ஏ கணிப்பு: அவுட்லுக் வார இதழ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக- தேமுதிக- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 54 சதவீதம் பேரும், திமுக- காங்கிரஸ்- பாமக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று 37.4 சதவீதத்தினரும் , மற்ற கட்சிகள் அல்லது அணி ஆட்சிக்கு வரும் என்று 8.6 சதவீதத்தினரும் கருத்து கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment