tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday 13 April 2011

பேசும் கிரெடிட் கார்டுகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு பண அட்டைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கணக்கு வரவு செலவை அட்டையிலேயே அறிந்து கொள்ளும் வகையில் எல்சிடி திரையுடன் கூடிய நவீன பண அட்டையை மாஸ்டர்கார்டு, விசா  நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அட்டைகளில் மைக்ரோ டிரான்ஸ்மீட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அட்டையில் 1 முதல் 0 வரையிலான எண்களும் மெனு பட்டன்களும் உள்ளன. நம்முடைய பின் எண்ணை அழுத்தினால் நம் கணக்கு விபரங்களை திரையில் காட்டுவதுடன், ஸ்பீக்கர்கள் மூலமாக சொல்லவும் செய்யும். தற்போது சோதனையில் உள்ள இக்கார்டுகள் அடுத்த மூன்றாண்டுகளில் பரவலாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சிட்டி பேங்க் நிறுவனமும் ஒரு அட்டையை வெளி்யிட்டுள்ளது.ஆனால் அதில் மேற்கூறிய வசதிகள் இல்லை.அதில் இரண்டு பட்டன்கள் மட்டுமே உள்ளன. அதன் மூலம் சலுகை மற்றும் க‌டன் ஆகிய இருபணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.  


இந்தப் பண அட்டைகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்
ணிக ரீதியாகவும், பணத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே பண அட்டைகள் உருவாக்கப்பட்டன. பணத்தின் மதிப்பு கடனாகவோ அல்லது வங்கி ரொக்கமாகவோ இருக்கும்படியான அட்டைகளே அதிகம்  பயன்பாட்டில் உள்ளன.
கடன் அட்டை  (Credit Card)
1920களில் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க கடன் அட்டை முறையை உருவாக்கின. ஆனால் 1959ல்தான் வங்கிப் பயன்பாட்டிற்கான கடன் அட்டையான `பாங்க் அமெரி கார்டு' அறிமுகமானது. அதுவே பிறகு `விசா' கார்டு என்றானது. 1960களில் காந்தப் பட்டையில் தகவல் பதியப்பட்ட அட்டைகளை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இதில் 70 பைட்டுகள் அளவில் தகவல்களைப் பதிய முடியும். அதற்கடுத்து 1966-ல் `மாஸ்டர் கார்டு' வெளிவந்தது.
கடன் அட்டை என்பது பொருளை வாங்கிய பின் பணத்தை மொத்தமாகவோ தவணை முறையிலோ வட்டியுடன் செலுத்துவதாகும். ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து பிளாட்டினம் கார்டு, கோல்டு கார்டு, சில்வர் கார்டு  என்று பல தர வரிசைகளை உருவாக்கி வங்கிகள்  கடன் அட்டையை வழங்குகின்றன. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இக்கார்டுகள் பொருளாதார வீழ்ச்சி என்ற சுனாமியால் தாக்குண்டு பெரும்பாலான அமெரிக்கவாசிகளின் தூக்கத்தைக் கெடுத்த கதையும் அரங்கேறியது. கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி விகிதம் அதிகம், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதல் வட்டி, அபராதம் என்று மிகப் பெரிய தொகையாக மாறும் சூழலும் நிகழ்கிறது. 
பற்று அட்டை (Debit Card)
இது கடன் அட்டை போல இல்லாமல் நம் வங்கி இருப்பில் இருக்கும் பணத்தின் அளவிற்கு உட்பட்டு பொருட்களை வாங்குவது அல்லது கட்டணம் செலுத்துவதற்கு உதவுகிறது.
விசா நிறுவனத்தால் தற்போது விசா டெபிட் அட்டை புதிதாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக கடன் அட்டைகளைப் போலவே பொருட்களை வாங்க முடியும்.
தானியங்கி பண வழங்கி அட்டை (ATM Card)
வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் இன்று  ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும், விசா அல்லது மாஸ்டர் நிறுவனச் சேவை இணைந்திருந்தால் பொருட்களை வாங்க உதவும் டெபிட் கார்டாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும். Related Posts with Thumbnails

No comments:

Post a Comment