tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday 28 December 2011

பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றிச் செல்வதற்காகவே, பிரத்யேக ரயில்




பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை ஏற்றிச் செல்வதற்காகவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கன்டெயினர் ரயிலை, வரும் புத்தாண்டு முதல் இயக்க, ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தோட்டக்கலைத் துறைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் ரயில் இது.ரயில்வே துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் கன்டெயினர் கார்ப்பரேஷனும், தேசிய தோட்டக்கலை வாரியமும் இணைந்து, தோட்டக்கலைத் துறைக்கென, பிரத்யேகமான முதல் கன்டெயினர் ரயிலை வடிவமைத்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம், புஷாவலில் உள்ள சரக்கு காப்பகத்தில் இருந்து, டில்லியில் உள்ள அஜாப்பூர் மண்டி வரை, இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல், இந்த ரயில் இயக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த ரயில், 90 கன்டெயினர்களை உடையதாக இருக்கும். புஷாவாலில் இருந்து 1,000 டன் வாழைப்பழங்களை ஏற்றி வரும் இந்த ரயில், திரும்பச் செல்லும்போது, அதே அளவு உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிளை ஏற்றிச் செல்லும். இந்த ரயில், ஒரு மணி நேரத்துக்கு, 100 கி.மீ., வேகத்தில் செல்லும். பழங்கள், காய்கறிகள், எளிதில் கெட்டுவிடாமல் இருப்பதற்கான குளிர்சாதன வசதியும், மற்ற தொழில்நுட்ப வசதிகளும், இந்த ரயிலில் உள்ள கன்டெயினர்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment