tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday 19 January 2012

நுகர்வோர் நம்பிக்கையில் நோக்கியா நிறுவனம் முதலிடம்

நடப்பு ஆண்டில், நுகர்வோரின் நம்பிக்கைக்குரிய 10 பிராண்டுகளில், தென் கொரியா வின் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ், சாம்சங் ஆகிய நிறுவனங்கள், ஜப்பானின் சோனியை விஞ்சி, முன்னேறியுள்ளன.பிராண்டு டிரஸ்ட் நிறுவனம், இந்தியாவின் பிரபலமான 1,000 பிராண்டுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 61 அம்சங்களின் அடிப்படை யில், 15 நகரங்களைச் சேர்ந்த 2,718 பேரிடம், 12ஆயிரம் மணி நேரம் நடத்தப் பட்ட இந்த ஆய்வின் முடிவுகள்வருமாறு;


முதல் 10 நிறுவனங்கள்:நடப்பாண்டு, நுகர்வோரின் நம்பிக்கையை பெற்ற முதல் 10 நிறுவனங்கள் வரிசையில், தொடர்ந்து நோக்கியா நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அது போன்று, டாட்டா குழுமம், இவ்வாண்டும் இரண்டாவது இடத்தை தக்க வைத் துக் கொண்டது.அதே சமயம், சென்ற 2011ம் ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த சோனி, நடப்பாண்டு 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம், சென் றாண்டு 4வது இடத்தில் இருந்த, எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ், நடப்பாண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதே காலத்தில், சாம்சங் நிறுவனம் 5ம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு உயர்ந் துள்ளது. அது போன்று, மாருதி சுசூகி நிறுவனம் 7வது இடத்தில் இருந்து,6வது இடத் திற்கு முன்னேறியுள்ளது.பஜாஜ் குழுமம் 7வது இடத்தையும், எல்.ஐ.சி., 8வது இடத் தையும், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் முறையே 9 மற்றும் 10வது இடத் தையும் பிடித்துள்ளன


மோட்டார் வாகனம்:முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில்,கார் தயாரிப்பில் 2வது இடத்தில் உள்ள ஹுண்டாய் மோட்டார்சும், 3வது இடத்தில் உள்ள டாட்டா மோட் டார்ஸ் நிறுவனமும் இடம் பெறவில்லை. இந்த பட்டியலில், மாருதி சுசூகி நிறுவனம் முதலிடத்தைப்பிடித்துள்ளது.அடுத்த இடங்களில் பீ.எம்.டபிள்யூ.,ஹீரோ ஹோண்டா, டொயோட்டா,ஹோண்டா,ஆடி, ஸ்கோடா, யமஹாநிறுவனங்கள் இடம் பெற்றுள் ளன.


நவநாகரீக ஆடைகள் வரிசையில், இத்தாலியின் அர்மானி பிராண்டு முதலிடத்தையும், அடுத்த இடங்களை குசி, டீசல், ஈஸ்பிரிட், டோல்ஸ் அண்டு கபானா, பிளேபாய்,டெனிம், டாடி ஹில்பிகர், டன்ஹில் மற்றும் கால்வின்க்ளெய்ன் பிராண்டுகளும் பிடித்துள்ளன.நுகர் பொருள்களில் லக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. பாண்ட்ஸ், டோவ் ஆகியவை அடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.


வங்கி, நிதித் துறை:உணவு மற்றும் குளிர்பானங்கள் பிரிவில், முதல் மூன்று இடங்களை பெப்சி,கேட்பரி,பார்லே ஆகியவை பிடித்துள்ளன. ஆரோக்கிய பராமரிப்பு பிரிவில் தாபர் முதலிடத்தையும், ஜான்சன் அண்டு ஜான்சன், ஹிமாலயா ஆகியவை அடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.கல்வித் துறையில் ஐ.ஐ.டி., ஆப்டெக், என்.ஐ.ஐ.டி ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.வங்கி மற்றும் நிதித் துறையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளாக எல்.ஐ.சி., எஸ்.பீ.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், எச்.டீ.எப்.சி பேங்க், எச்.எஸ்.பீ.சி ஆகியவை விளங்குகின்றன.


தொழிலதிபர்கள்:நம்பிக்கைக்குரிய தொழிலதிபர்கள் பட்டியலில், டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அடுத்த இடங்களில் யுனைடெட் புரூவரீஸ் அதிபர் விஜய் மல்லையா, மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ், ஆப்பிள் நிறுவனர், மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், கார் டிசைனர் திலீப் சாப்ரியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment