tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Thursday, 17 November 2011

டைம்ஸ்நவ் தொலைக்காட்சிக்கு ரூ.100 கோடி அபராதம்

புதுடில்லி, நவ. 16: டைம்ஸ் நவ் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு பூனா நீதிமன்றம் அவ தூறு வழக்கு ஒன்றில் அபராதம் விதித்து அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 14-11-2011 அன்று  உறுதிப்படுத்தி யுள்ளது.
இந்திய பத்திரிகை யாளர் கவுன்சிலின் முன் னாள் தலைவர் நீதியரசர் பி.வி.சாவந்த் தொடுத்த அவதூறு வழக்கில் அவர் கேட்டிருந்த இழப் பீடு 100 கோடி ரூபாயை அவருக்கு வழங்க வேண்டும் என்று பூனா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைக் காட்சி நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத் தில் செய்து கொண்ட மேல்முறையீடு தள்ளு படி செய்யப்பட்டு,  பூனா நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தப் பட்டது. அத்துடன் முன்பணமாக 20 கோடி ரூபாய் செலுத்தும் படி யும் எஞ்சிய 80 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தர வாதம் அளிக்கும்படியும் உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொலைக் காட்சி நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அத னைத் தள்ளுபடி செய்த துடன், பூனா நீதிமன்றம், மும்பை உயர்நீதி மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு களை உறுதிப்படுத்தி யுள்ளது.
நீதிபதி பி.கே. சமந்தா சம்பந்தப்பட்டி ருந்த சேமிப்பு நிதி ஊழல் (Provident Fund Scandal)  பற்றிய நிகழ்ச் சியை தொலைக்காட்சி யில் 10-9-2011 அன்று மாலை 6.30 மணி செய்திச்சேவையில் ஒளி பரப்பப்பட்ட போது, இந்த விஷயத்தில் தொடர்பே இல்லாத நீதிபதி பி.பி. சாவந்த்தின் ஒளிப் படத்தை தவறுத லாக 15 வினாடிகள் காட்டியது.  இது தவறாக நடந்துவிட்டது  என்று அந்நிறுவனம் தொடர்ந்து 5 நாட் களுக்கு மன்னிப்பு கேட்டு ஒளிபரப்பியது.
என்றாலும் தனது படத்தை தவறாகக் காட்டி தனக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக  தொலைக்காட்சி நிறு வனத்தின் மீது நீதிபதி சாவந்த் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதற்காக தனக்கு 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென்று கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பூனா மாவட்ட நீதிமன்றம் அவருக்கு 100 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்கும்படி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அக்டோ பர் மாதத்தில் உத்தர விட்டது.
இந்தத் தீர்ப்பு ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவதூறு வழக்குகளில் இதுவே வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக அமையுமா என்று பரவலாக அடி படும் பேச்சு கவனிக் கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த தீர்ப்பு தனிப்பட்ட மக்களின் குரலை நிலைநாட்டுவ தாக உள்ளதென சில சட்ட நிபுணர்கள் கருது கின்றனர். ஊடகங்கள் தங்களின் எல்லை களைக் கடந்து செயல் படுவது, குடிமக்களின் அமைதியான வாழ்வில் குறுக்கிடுவது ஆகிய வற்றைத் தடுத்து நிறுத் துவதற்கான ஓர் ஆக்க பூர்வமான அறிகுறி இந் தத் தீர்ப்பு என்று அவர் கள் கருதுகின்றனர்.
செய்தி ஒளிபரப்பு ஆசிரியர்கள் சங்கம் இந்தத் தீர்ப்பைப் பற்றி தனது ஆழ்ந்த கவலை யைத் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி அனைத் துத் தொலைக் காட்சி செய்தியாளர்களிடையேயும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதால், இது பற்றிய சட்ட ரீதியான தீர்வு களைப் பெற சங்கம் முயற்சிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்துத் தொலைக் காட்சி நிறுவனங்களின் செய்தி ஒளிபரப்பு சேவைகளின் உயர் அமைப்பாகும் இது.

No comments:

Post a Comment