இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் சில தகவல்கள்:
- செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
- கடந்த வருடத்தோடு ஒப்பிட்டு பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும்.
- இந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.
- 26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.
- இளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
- இணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
- 79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர்.
- இந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.
மேலும் விரிவாக அறிய இந்த லிங்கில் செல்லுங்கள் - icube Research Report
No comments:
Post a Comment