ஆகவே உங்களுடைய வலைப்பூவிலோ அல்லது இணையதளத்திலோ வைரஸ், மால்வேர்ஸ் மற்றும் தீங்கிழைக்கும் நிரலிகள் உள்ளதா என எப்படி சோதிப்பது என பார்க்க கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்தவும்.
- இதற்க்கு முதலில் கீழே கொடுத்துள்ள லிங்கில் சென்று அந்த குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் உங்களின் வலைப்பூ அல்லது இணையதள முகவரியை கொடுக்கவும்.
- முகவரியை கொடுத்த பின்னர் அருகில் உள்ள Scan Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் வலைப்பூவை Scan செய்ய ஆரம்பிக்கும்.
- சில வினாடிகளில் உங்கள் வலைப்பூ அல்லது இணையதளம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு இறுதி முடிவு உங்களுக்கு காட்டும்.
- மற்றும் எந்தெந்த தளங்களில் உங்கள் வலைப்பூவை சோதனை செய்தது என்ற தகவலையும் தரும்.
- இந்த முறையில் உங்களுடைய தளத்தை சோதித்து உங்களின் பிளாக்கை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தளத்திற்கு செல்ல - URLVoid
No comments:
Post a Comment