tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday, 18 November 2011

இந்தியாவில் ரூ. 10,000 கோடி முதலீடு : கொக்கோ கோலா

புதுடில்லி : சர்வதேச அளவில் நான்-ஆல்கஹாலிக் குளிர்பானங்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள கொக்கோ கோலா நிறுவனம், இந்தியாவில் 2 பில்லியன் (ரூ. 10 ஆயிரம் கோடி ) முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கொக்கோ கோலா (இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியா) தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அதுல் சிங் கூறியதாவது, 2012ம் ஆண்டு துவங்கி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு, இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக இந்த பெருமளவு தொகை முதலீடு செய்யப்படுகிறது. 1993ம் ஆண்டில், இந்தியாவில் அறிமுகம் ஆன பிறகு செய்யப்படும் அதிகளவு முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டின் மூலம், ஸ்பார்க்ளிங் பீவரேஜஸ், பேக்கேஜ்டு வாட்டர், ஜூசஸ், உடனடியாக குடிக்கும் வகையிலான டீ மற்றும் காபிக்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் கொக்‌கோ கோலா நிறுவனம் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment