இயற்கையாக
உருவான அதிசயங்கள் பற்றிய பட்டியலை சுவிட்சர்லாந்தில் உள்ள புதிய 7
அதிசயங்கள் அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது. அதன்படி உலக அளவில் 7
அதிசயங்களின் தற்காலிக பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அந்த
பட்டியலில் முதல் இடத்தை அமேசான் காடு பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை
வியட்நாம் ஹலாங் வளைகுடா, மூன்றாவது இடத்தை அர்ஜென்டினா இகுசு நீர்வீழ்ச்சி
ஆகியவை பெற்றுள்ளன.
இது
தவிர, தென் கொரியாவின் ஜேஜு தீவு, இந்தோனேசியாவின் கொமாடோ, பிலிப்பைன்சின்
தரைக்கு கீழ் ஓடும் புயர்டோ பிரின்சிசா ஆறு, தென் ஆப்பிரிக்காவின் டேபிள்
மலை ஆகியவையும் அதிசய பட்டியலில் உள்ளன. உலக அதிசயங்கள் குறித்த
அதிகாரப்பூர்வ இறுதி பட்டியல் அடுத்த ஆண்டு (2012) தொடக்கத்தில்
வெளியாகிறது.
No comments:
Post a Comment