ஓராயிரம் டிவிடிக்களில் பதியப்படும் டேட்டாவினைக் கொள்ளக் கூடிய டிஸ்க் ஒன்றைத் தயாரிக்க முடியும் என்ற முடிவிற்கு, ஜப்பானிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், வேதியியல் பேராசிரியர் ஷின் இச்சி ஒக்கோஸி இந்த சிடி தயாரிப்பதற்கான டைட்டானியம் ஆக்ஸைடின் புதிய கிறிஸ்டல் வடிவத்தினைக் கண்டுபிடித்துள்ளார். அடுத்த சந்ததியின், டேட்டா பதிந்திடும் மெட்டலாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். மெட்டலுக்கும் செமி கண்டக்டருக்கும் இடையே ஆன் – ஆப் பணியினை அதிவேகத்தில் இதன் மூலம் மேற்கொள்ள முடியும். இதனால் டேட்டா பதிவதும் படிப்பதும் கூடுதல் வேகத்தில் நடைபெறும் என்றார்.
அவரின் தலைமையில் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஐந்து முதல் இருபது நானோ மீட்டர் அளவில், இதற்கான உலோகப் பொருளைத் தயாரித்துள்ளனர். (ஒரு நானோ மீட்டர் என்பது, ஒரு மீட்டரின் விட்ட அளவில் 500 கோடி முதல் 2000 கோடிகளில் ஒரு பங்காகும்) இந்த சிறிய மெட்டல் கிறிஸ்டல் துணுக்கினைப் பயன்படுத்தி, டிஸ்க் தயாரிக்கையில், அதில் தற்போதைய புளு ரே டிஸ்க்கில் கொள்ளக் கூடிய டேட்டாவினைப் போன்று, ஆயிரம் மடங்கு டேட்டாவினைக் கொள்ளும். (புளு ரே சிடியின் ஒரு லேயரில், வழக்கமான டிவிடியில் கொள்ளும் டேட்டாவினைப் போல ஐந்து மடங்கு டேட்டா பதிய முடிகிறது)
தற்போது டைட்டானியம் ஆக்ஸைட் கொண்டுதான் புளு ரே, டிவிடி மற்றும் சாதாரண சிடிக்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மெட்டல் மலிவான விலையில் உலகெங்கும் கிடைக்கிறது. முகத்திற்கு போடும் டால்கம் பவுடரிலும், வெள்ளை வண்ண பெயிண்ட்டிலும் இது பயன்படுத்தப்படுகிறது என்றால், அதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மையினை நாம் உணரலாம். அதே மெட்டலில் இருந்து பெறும், கிறிஸ்டல் பயன்படுத்தி சிடிக்கள் தயாரிப்பதும் எளிதாகும்.
No comments:
Post a Comment